முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் மார்ச் 31-ஆம் தேதியன்று வெளியிடப்படும்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் மார்ச் 31-ஆம் தேதியன்று வெளியிடப்படும்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஒற்றைச் சாளர முறையின் கீழ் கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதலில் கலந்தாய்வு நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ஆம் தேதி வரையில் பொதுக் கலந்தாய்வு நடைபெறும். மே 1-முதல் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 124 இடங்களை அதிகரிக்க மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்திருந்தது. இதனிடையே, பல ஆண்டு காலமாக இருந்து வரும் முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு இடங்களை, பட்ட மேற்படிப்புகளாக மாற்றுவதற்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகமும் அண்மையில் விண்ணப்பித்திருந்தது. அதனைப் பரிசீலித்த இந்திய மருத்துவக் கவுன்சில் வாரிய உறுப்பினர்கள், 384 பட்டயப் படிப்பு இடங்களை பட்டப் படிப்புகளாக மாற்ற தற்போது அனுமதி அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் (2019- 20) மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 1,758-ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NEET PG Counselling 2019- Choice Filling For Round
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+