என்டிஏ கனவுதேர்வு வெல்லும் வழிமுறைகள் மாணவர்களுக்காக படைத்துள்ளோம் !!

Posted By:

இந்தியன் ஆர்மியில் பணிபுரியும் ஆர்வமும் இலக்கும் கொண்டவர்களா நீங்கள் உங்களுக்கான வழிமுறைகளை வழங்குகிறோம் . இந்தியன் ஆர்மியில் பணிபுரிய வேண்டும் என்ற கனவு கொண்டவர்கள் அனைவருக்கும் போட்டி தேர்வில் வெற்றி பெற தேடல் கொண்டிருப்பீர்கள் உங்கள் தேடலுக்கான விடையை தருகிறோம் . 

என்டிஏ தேர்வு வெற்றி பெறுதல் அதன் வழிமுறைகள்

என்டிஏ தேர்வுகுறித்து ஏற்கனவே பதிவு செய்திருந்துள்ளோம் அதன் இணைப்பு கீழ் கொடுக்கப்பட்டுள்ளது .

சார்ந்த பதிவு:

மாணவர்களுக்கான பாதுகாப்புத்துறையில் உள்ள வாய்ப்பு !

என்டிஏ தேர்வு எழுத 17 ½ வயது முதல் 19 வயது வரை இருக்க வேண்டும் . என்டிஏ தேர்வானது வருடத்தில் இருமுறை நடைபெறுகிறது . என்டிஏ தேர்வானது மத்திய ஆட்சிப்பணி ஆணையத்தால் நடைத்தப்படுகிறது . என்டிஏ தேர்வு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் என இருமுறைகள் நடைபெறும் .

என்டிஏ தேர்வு இருதாள்களை கொண்டது என்பதை நான் ஏற்கனவே தெரிவித்துள்ளேன் . என்டிஏ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடி தேர்வு எஸ்எஸ்பி என அழைக்கப்படும் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் .

நேரடித்தேர்வான எஸ்எஸ்பி தேர்வுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் ஐந்து நாள் நடக்கும் நேரடி தேர்வில் பங்கேற்க வேண்டும் . ஐந்து நாள்கள் எஸ்எஸ்பி தேர்வானது 14 டெஸ்ட்கள் கொண்டது . இறுதி நாள் வெற்றி பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்படும் . 

தேர்வு செய்யப்படுவோர்கள்  இந்தியன் ஆர்மி மிலிட்டரி அகாடமி அத்துடன் ஒடிஏ அத்துடன் மேலும் மேலும் ஹைதிராபாத்தில் வான்படை மையத்தில் பயிற்சியுடன் கற்றுகொள்ள மூன்று வருடம் பயிற்சியும் அளிக்கப்படும்.

உடல்தகுகுதி, முடிவெடுத்தல் திறன், செயல்பாட்டில் வேகம் அத்துடன் மருத்துவ பரிசோதனை மனம்,    உடல் அனைத்திலும் திறன் கொண்ட தேர்வர்களை எஸ்எஸ்பி தேர்ந்தெடுக்கும் . எஸ்எஸ்பி தேர்வில் படம் பார்த்து கதை சொல்லல் மற்றும் குழு விவாதம் போன்ற பல்வேறு இலக்குகளை வெற்றிகரமாக குறிப்பிட்ட காலத்திற்க்குள் முடிப்பவர்களே வெற்றி பெறுபவர்களாவார்கள்.

எங்கே வாழ்க்கை தொடங்கும் எங்கே  முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கு தெரியாது பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் என்ற வரிகளை நினைவில் வைத்து கொள்ளுங்கள் விடாமுயற்சி பற்று இருக்க வேண்டும் . வீழ்த்திவிடலாம் விண்ணையும் என்பதை மனதில் வைத்து  வெற்றி பெறுங்கள் .

சார்ந்த பதிவுகள்:

இந்திய வான்படையின் 85வது ஆண்டு தின நாள் இன்று !!  

English summary
here article tell about NDA exams details to students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia