பத்தாவது படிச்சிருந்தா? நீதித்துறையில் ரூ.71 ஆயிரத்தில் வேலை...!

தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில், நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை ஆள்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.

 

எட்டாவது, பத்தாவது படிச்சிருந்தா? குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.71 ஆயிரம் வரை மாத ஊதியம் பெற முடியும் என்பதை ஒருபோதும் மறக்காதீங்க...!

பத்தாவது படிச்சிருந்தா? நீதித்துறையில் ரூ

வாய்ப்பு ஒரு முறை தான் தட்டும்; அப்போ சரியான நேரத்தில் கதவை திறந்து, உள்ளே போயிடுனும் பாஸ்...!

நிர்வாகம் : சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court)

மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்

Ø நகல் பரிசோதகர் (Examiner)
Ø நகல் வாசிப்பாளர்(Reader) முதுநிலை, இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் ( Senior, Junior Bailiff)
Ø இளநிலை கட்டளை பணியாளர்(Process Server)
Ø கட்டளை எழுத்தர்(Process Writer)
Ø ஒளிப்பட நகல் எடுப்பவர்(Xerox Operator)
Ø மின் தூக்கி இயக்குபவர்(Lift Operator)
Ø ஓட்டுநர்(Driver)

 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.08.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 1,412

கல்வி தகுதி

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், பத்தாவது/ எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

பணி அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் 01.07.2004க்குப் பின் பிறந்திருக்கக்கூடாது;01.07.2022 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, தகுதி மற்றும் திறன் அடிப்படையில், குறைந்த பட்சம் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.71 ஆயிரம் மாத ஊதியம் பெற முடியும்.

விண்ணப்ப கட்டணம்

For OBC Candidates- Rs. 550/-

For SC/ ST/ PWD Candidates-Nil

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும் என்பதை ஞாபகம் வச்சுக்கோங்க...!

தேர்வு முறை

Skill Test, Written Test, Interview ஆகிய நடைமுறைகளில், தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில், ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

22.08.2022ம் தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். மறக்காதீங்க...!

தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில், மாவட்ட வாரியாக எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ள விவரங்கள், எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் விரிவாக, நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வாய்ப்பை தவற விடக்கூடாதுல...!

üஅதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.mhc.tn.gov.in க்கு செல்லவும். Madras High Court Recruitment 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.

üமேலே குறிப்பிடப்பட்டு உள்ள இணைப்பு அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வாயிலாக, Madras High Court Job Application Form 2022 விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்ப வேண்டும்.

üவிண்ணப்பத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும், எந்த தவறும் இல்லாமல் நிரப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

üசென்னை உயர் நீதிமன்ற அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்ள மின்னஞ்சல் ஐ.டி., மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் சரியாகவும், பிழையின்றி குறிப்பிட வேண்டும்.

üதேவை இருந்தால் விண்ணப்பக் கட்டணத்தை, ஆன்லைனில் செலுத்தலாம். அனைத்து தகவல்களையும் முடித்த பின், விவரங்கள் சரியானதா? என்று ஒரு முறை சரிபார்க்கவும். பின், உங்கள் விண்ணப்பத்தை 'பிரின்ட் அவுட்' எடுத்து கொள்ள வேண்டும்.

üஅதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் சந்தேகங்களுக்கும், விரிவான விளக்கங்களை கீழே உள்ள அதிகாரப்பூர்வ தளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://www.mhc.tn.gov.in

https://www.mhc.tn.gov.in/recruitment/login

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
It has been announced that eligible persons can apply for the vacant posts in the lower courts across Tamil Nadu.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X