அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ஆம் (இன்று) முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பி.எட்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தமிழக அரசின் சார்பில் சென்னை கடற்கரை சாலையில் செயல்பட்டு வரும் லேடி விலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவன கல்லூரியில் இந்த வருட கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே நிறைவடைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்ப்டடுள்ளது.
விண்ணப்பதாரர்களின், கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். இது குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.ladywillingdon.com என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.