பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் வருடந்தோறும் 200 எம்பிபிஎஸ் இடங்கள் நுழைவுத் தேர்வின் மூலம் நிரப்பப்படும். அதன்படி 2019ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தோ்வு வரும் ஜூன் 2ம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு மார்ச் 6ம் தேதி (இன்று) முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 12ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வெளியிடப்படும்.
மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் மாதம் 26 முதல் 28ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 24ம் தேதியும் நடைபெறும். மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 21ம் தேதியும், இறுதிக்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 26ம் தேதியும் நடைபெறும்.
செப்டம்பர் 30ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 30ம் தேதியோடு மாணவர் சேர்க்கை நிறைவு பெறுகிறது. இது தொடர்பான முழுமையான விபரங்களையும் அறிய http://jipmer.edu.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












