ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஜேஇஇ மெயின் தேர்வில் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார் கஜாரே நீல்கிருஷ்ணா நிர்மல்குமார். அவரது சாதனைகள் குறித்த செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
அண்மையில் ஜேஇஇ மெயின் (JEE Main 2024) தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் மாணவர் கஜாரே நீல்கிருஷ்ணா நிர்மல்குமார், 100 சதவீத மதிப்பெண்களை எட்டியதன் மூலம் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மும்பையிலுள்ள ஐஐடி-யில் (மும்பை IIT) கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.டெக் படிப்பதாதக முடிவு செய்துள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் தனது கனவை நனவாக்க அவர் ஒரு படியை வெற்றிகரமாக அடைந்து அடுத்த படியை (ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு) நோக்கி மேலே சென்று வருகிறார்.
தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIT), பிற மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI) மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு (BE/B. Tech) சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதன்மை JEE Main) நமது நாட்டில் நடத்தப்படுகிறது.

மேலும், இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐஐடி நிறுவனங்களில் சேர்த்து படிப்பதற்கு நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸுடு நுழைவுத் தேர்வில் (JEE - Advanced) பங்கு பெற முடியும்.
கூட்டு நுழைவுத் தேர்வு -முன்னதாக ஐஐடி-ஜேஇஇ என அழைக்கப்படும் மேம்பட்ட (ஜேஇஇ அட்வான்ஸ்டு) ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு, 60 ஆண்டுகளுக்கு முன்பு 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பொறியியல், அறிவியல் மற்றும் கட்டிடக்கலை போன்ற ஐஐடிகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் சேர்க்கை வழங்குவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு இரண்டு ஷிப்டுகளாகவும், ஒவ்வொரு தாள் 3 மணி நேரமும் நடைபெறும்.
எனவே ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்டு தேர்வின் மொத்த கால அளவு ஒரு நாளைக்கு 6 மணி நேரம் ஆகும். இது ஆண்டுக்கு ஒரு முறை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடத்தப்படுகிறது. ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்டு ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 2 முயற்சிகளை மட்டுமே அனுமதிக்கிறது.
என்.டி.ஏ., என்னும் தேசிய தேர்வு முகமை, ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என தேர்வுகளை நடத்துகிறது. ஜே.இ.இ,- மெயின் தேர்வில் வெற்றி பெறும் மாணவகள் மட்டுமே ஜே.இ.இ- அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உள்ள அனைத்து 23 ஐஐடிகளிலும் சுமார் 13,000 இடங்கள் உள்ளன. மேலும் 2.5 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுவதால், கல்லூரியில் சீட் பெறுவதில் எந்த அளவு போட்டி நிலவுகிறது என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்த்துக் கொள்ள முடியும். எந்தவொரு ஐஐடியிலும் சேர விரும்பும் மாணவர்கள் 11-ம் வகுப்பிலிருந்தே ஜேஇஇ தேர்வுக்கான தங்கள் படிப்பை ஆரம்பிப்பார்கள்.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான பாடத்திட்டம் மிகப்பெரியதாகும். மேலும் தேர்வின் நிலை கடினமாக உள்ளது. இதனால் தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது.
இந்த ஜேஇஇ மெயின் தேர்வில்தான் தற்போது சாதனையாளராக உருவாகியிருக்கிறார் கஜாரே நீல்கிருஷ்ணா.
தற்போது மெயின் தேர்வில் வெற்றிகரமாக 100 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் மிகச்சிறப்பான வெற்றியைப் பெறுவதற்காக அவர் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவர் 12-வது வகுப்பு தேர்வு முடிவுகளுக்காகவும் காத்திருக்கிறார். ஜேஇஇ மெயின் தேர்வில் அவர் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று கட்-ஆப் மதிப்பெண்களில் அவர் முன்னேறியிருக்கிறார்.
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் கடந்த 24-ம் தேதி வெளியாயின. இந்த தேர்வு முடிவுகளின்போது கஜாரே நீல்கிருஷ்ணா 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று மிகச் சிறந்த மைல்கல்லை எட்டினார். இந்நிலையில் ஜேஇஇ தேர்வுகளில் இந்த ஆண்டு கட்ஆஃப் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
இந்த முறையில் 56 மாணவ, மாணவிகள் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்தனர். இதில் 2 பேர் பெண்கள் ஆவர்.
இந்நிலையில் ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் வரும் மே 26-ம் தேதி நடைபெறவுள்ள ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE அட்வான்ஸ்டு) தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இந்த விண்ணப்பப் படிவங்களை jeeadv.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு மாணவச் செல்வங்கள் பெறலாம்.
இந்நிலையில் கஜாரே நீல்கிருஷ்ணா, தனது படிப்பு தொடர்பான கால அட்டவணையை கவனமாக திட்டமிட்டு ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெறுவதற்காக கவனம் செலுத்த விரும்புகிறார்.
சரியான படிப்பு, தொடர்ச்சியான திருப்புதல் பணி, நேர நிர்வாகம், சுய படிப்பு, பயிற்சி, மாதிரித் தேர்வுகள் என அவர் தொடர்ச்சியாக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு முன்னேறி வருகிறார்.
அவருக்கு மும்பை ஐஐடி-யில் சேரவேண்டும் என்பது வாழ்நாள் கனவு. ஐஐடி-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்காக அவர் விரும்புகிறார். இதற்காக நாள்தோறும் 10 முதல் 12 மணி நேரம் தீவிரமாகப் படித்து வருகிறார்.
ஜேஇஇ மெயின் தேர்வுக்குப் படித்து சிறப்பான வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சி இருந்தாலும், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்விலும் அதைப் பெற அவர் விரும்புகிறார். இதற்காக அவர் அதிக கவனம், தீவிர முயற்சி, விடாத பயற்சி, கடினமான மாதிரித் தேர்வுத் திட்டங்களை அவர் அமல்படுத்தி வருகிறார்.
இதன்மூலம் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் முதலிடம் பிடிக்க அவர் முயன்று வருகிறார். மாதிரித் தேர்வுகளை முழுமையாக பகுப்பாய்வு செய்து அந்தத் தேர்வுகளை அவர் எழுதி வருகிறார். மேலும் கடினமான பாடத்திட்டங்களை அவர் கூடுதல் கவனம் எடுத்து படித்து வருகிறார்.
இதுதொடர்பாக கஜாரே நீல்கிருஷ்ணா கூறியதாவது:
ஜேஇஇ மெயின் தேர்வு என்பது கடினமான தேர்வு எனக்குத் தெரியும். இதற்காக நான் தினமும் 10 மணி நேரம் படித்து தேர்வு எழுதினேன். விடாத முயற்சி, தீர்க்கமான சிந்தனை, தொடர்ச்சியாக மாதிரித் தேர்வுகளை எழுதியது, அடிக்கடி பாடங்களை ரிவைஸ் செய்ததால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்தேன்.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்விலும் அதேபோன்றதொரு சாதனையைப் படைத்தால்தான் நான் நினைத்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவைப் பெற முடியும். எனவே, அதை நோக்கிய பயணத்தில் இருக்கிறேன்.
ஜேஇஇ போன்ற கடினமான தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கருத்தியல் தெளிவு முக்கியமானதாக உள்ளது. மேலும்,, அதிக மதிப்பெண் பெறுவதற்கு தொடர்ந்து பாடங்களை ரிவைஸ் செய்வதும் முக்கியம். அதுமட்டுமல்லாமல் தொடர் பயிற்சி மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளது.
தொடர் பயிற்சியும், அதிக நேரம் படித்ததால் தேர்வில் சாதனை படைத்தேன்.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்விலும் முதல் மதிப்பெண் பெற்று மும்பை ஐஐடி-யில்
கணினி அறிவியலில் பிடெக் படிக்கத் திட்டமிட்டுள்ளேன். அதுதான் எனது வாழ்நாள் கனவும்கூட.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கஜாரே நீல்கிருஷ்ணா. இவர் தனது கிராமத்தில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கி, 6-வது வகுப்பில் சேர நாக்பூருக்குச் சென்றார். பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், அவர் தனது 10-ஆம் வகுப்புத் தேர்வில் வியக்கத்தக்க வகையில் 97 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அனைவரையும் அசத்தினார்.
தற்போது ஜேஇஇ மெயின் தேர்விலும் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார். ஜேஇஇ தேர்வில் தேர்வுத் தாள்கள் தொடர்பான முழுமையான பகுப்பாய்வு, பாடங்களில் பலவீனமான பகுதிகளில் குறிப்பிட்ட கவனம் செலுத்துதல், அடிக்கடி ரிவைஸ் செய்தல், மீண்டும் மீண்டும் கேள்விகளுக்கு விடையளிப்பது என தொடர் பயிற்சியால் நம்ப முடியாத வெற்றியைப் பெற்றார். தனது இடைவிடாத பாடத்திட்ட தயாரிப்பு, பயிற்சியால் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரான கஜாரே நீல்கிருஷ்ணா நிர்மல்குமார், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்விலும் முழு மதிப்பெண் பெறும் நோக்கில் தயாராகி வருகிறார்.
ஜேஇஇ மெயின் தேர்வில் அவர் செய்துள்ள சாதனை, ஜேஇஇ தேர்வின் மீது அவர் கொண்டுள்ள நிலையான அர்ப்பணிப்பையும் கடின முயற்சியையும் காட்டுகிறது.
கஜாரே நீல்கிருஷ்ணாவின் தந்தை ஒரு விவசாயி. ஜேஇஇ பற்றி அவ் விளக்கமளிக்கும் வரை அந்தத் தேர்வு என்னவென்றால் என்று கூட அவரது தந்தைக்கு தெரியாது. ஜேஇஇ தேர்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய பெற்றோருக்கு சில காலம் பிடித்துள்ளது. தற்போது மகனின் சாதனையால் அவரது பெற்றோர்,மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளனர்.
குறைந்த வருமானம் என்பதால் படிப்பதற்காக உதவித்தொகை கிடைக்குமா என்று கஜாரே நீல்கிருஷ்ணா ஆராய்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "என் தந்தை ஒரு விவசாயி. எங்களுக்குக் குறைந்த வருமானமே கிடைக்கிறது. இதனால் எனக்கு வேறு வழியில் உதவித்தொகை கிடைக்குமா என்று எதிர்பார்த்தேன். நான் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது நாக்பூரில் உதவித்தொகை பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்கினேன்.
தற்போது அது கிடைக்கும் தருவாயில் உள்ளது. தற்போது எனது அடுத்த இலக்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் நல்ல ரேங்க் பெறுவதாகும். இதன்மும்பை ஐஐடி பாம்பேயில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பிடெக் படிப்பில் சேரவேண்டும்.
இதில் நன்கு படித்து இன்ஜினியரான பிறகு பல மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
தற்போது இளம் மாணவர்கள் சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அது சரியல்ல. படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கவேண்டும். அப்போது கல்வியில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியும்.
கடந்த 2 இரண்டு வருட பயணமாக நான் வாரம் ஒருமுறை திரைப்படம் மட்டுமே பார்த்து வருகிறேன்" என்கிறார்.
அவரது சாதனைகள் தொடரட்டும்..வாழ்த்துக்கள்...!


Click it and Unblock the Notifications












