வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விருப்பமா...?

வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி என்று அழைக்கப்படும் வேலூர் சிஎம்சி கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://admissions.cmcvellore.ac.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (சிஎம்சி) தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. 1900ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி வேலூரில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகும். இதன் நிறுவனர் மருத்துவர் ஐடா சோபியா ஸ்கட்டர் ஆவார். இந்த மருத்துவக்கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் ஐடா சோபியா ஸ்கட்டர் என்பவரின் முயற்சியால் வேலூரில் ஒரு மருத்துவமனையும், பின்னர் 1908-ல் செவியர் பயிற்சி பள்ளியும் தொடங்கப்பட்டன. பின்னர் அவரின் தொடர் முயற்சியால் 1918 ஆகஸ்ட் 12-ம் தேதி ஒன்றிய மறைப்பணியாளர் பள்ளி என்ற பெயரிலான பெண்களுக்கான மருத்துவப் பள்ளியாக தொடங்கப்பட்ட இதை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948-ல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது முதல், இங்கு பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.

1890-ம் ஆண்டில், ஐடா சோஃபியா ஸ்கடர் என்ற இருபது வயது அமெரிக்கர் தனது நோய்வாய்ப்பட்ட தாயுடன் இருப்பதற்காக இந்தியாவுக்குச் சென்றார். மூன்று ஆண்கள், ஒரு முஸ்லீம் மற்றும் இரண்டு இந்துக்கள், பிரசவ சிக்கல்களால் பாதிக்கப்பட்ட தங்கள் மனைவிகளுக்கு அவசர உதவி கோரி அவரது குடும்பத்தின் வீட்டிற்கு வந்தனர்.

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விருப்பமா...?

அப்போது நிலவிய சாதி மற்றும் பாலின பழக்கவழக்கங்கள் காரணமாக மூன்று இளம் கணவர்களும் ஐடாவின் தந்தையான ஒரு கிறிஸ்தவ மிஷனரி மருத்துவரின் உதவியை ஏற்க மறுத்தனர். எந்த மருத்துவப் பயிற்சியும் இல்லாமல், ஐடா உதவி செய்ய முடியாத நிலையில் இருந்தார். அடுத்த நாள், மூன்று பெண்களும் இறந்துவிட்டதை அறிந்தாள். சிந்தனை மற்றும் பிரார்த்தனைக்குப் பிறகு, இந்தியாவின் பெண்களுக்கு சேவை செய்ய கடவுள் தன்னை அழைக்கிறார் என்று ஐடா உணர்ந்தார். 1899-ல் கார்னெல் மருத்துவக் கல்லூரியில் பெண்களை ஏற்றுக்கொண்ட முதல் வகுப்பில் பட்டம் பெற்று, மருத்துவராக அமெரிக்கா திரும்பினார்.

ஐடா 1900-ல் இந்தியாவுக்குத் திரும்பி மருத்துவராகப் பணியைத் தொடங்கினார். இறந்த தனது மனைவியை நினைவுகூர விரும்பிய ஒருவரிடமிருந்து 10,000 அமெரிக்க டாலர்கள் என்ற சிறிய அன்பளிப்புடன், அவர் உடனடியாக ஒரு படுக்கை கிளினிக்கைத் திறந்து, சுகாதாரப் பராமரிப்புக்காக வேறு இடமில்லாத உள்ளூர் பெண்களுக்கு மருத்துவ உதவி அளித்தார்.

1902 வாக்கில், 40 படுக்கைகள் கொண்ட மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை திறக்கப்பட்டது. இது ஐடாவின் சமூக சேவையை உணர்த்துகிறது. மதம் அல்லது அதற்கு பணம் செலுத்தும் திறன் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஆண்கள் செய்த தரமான மற்றும் இரக்கமுள்ள சுகாதாரப் பாதுகாப்பிற்கான அதே அணுகல் பெண்களுக்கு இருக்க வேண்டும்.

அவர் தனது வாழ்க்கையை பெண்களுக்காக அர்ப்பணித்தார். அந்தச் சிறிய மருத்துவ மனையானது வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக (CMC) தற்போது ஆலமராக வளர்ந்துள்ளது. இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பள்ளிகளில் ஒன்றாகும். இன்று, CMC 20 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களுக்கு பயிற்சி அளித்து தரம்வாய்ந்த மருத்துவ நிபுணர்களை மருத்துவச் சேவை செய்ய வெளியே அனுப்புகிறது.

CMC மருத்துவக் கல்லூரியானது, உயர்தர சுகாதாரப் பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கு, அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி மற்றும் பயிற்சியின் மூலம் கருணை உள்ளம், தொழில் ரீதியில் சிறந்தவர், நெறிமுறையில் சிறந்தவர்கள், சுகாதாரப் பராமரிப்பில் பணிபுரியும் தலைவர்களை உருவாக்குவதே இந்த பார்வையின் மைய நோக்கமாகும்.

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியானது, மருத்துவம், நர்சிங், அது சார்ந்த சுகாதார அறிவியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் உயர் சிறப்புப் படிப்புகளை வழங்கி வருகிறது.

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விருப்பமா...?

பெண்களுக்கு முக்கியத்துவம்

தன்னைப் போலவே நிறைய பெண்களை மருத்துவப் பணிக்குக் கொண்டு வரவேண்டும்' என்ற நோக்கில் டாக்டர் ஐடா சோபியா ஸ்கட்டர் உருவாக்கியதுதான் இந்தப் பள்ளி. 1918-ம் ஆண்டில் இங்கு எல்.எம்.பி (லைசன்ஸ்டு மெடிக்கல் பிராக்டிஷனர்) என்ற மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டது. 1942-ல் எம்.பி.பி.எஸ் படிப்பை அளித்து வந்தனர். தற்போது எம்.பி.பி.எஸ், நர்சிங் உள்பட 179 வகையான படிப்புகள் இங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்காக மாணவ சமூகமே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தது வேலூர் சி.எம்.சி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

100 சதவீத இடங்கள்

இந்த வேலூர் சிஎம்சி கல்லூரி பெண்களுக்காக செயல்பட்ட முதல் மருத்துவக் கல்வி நிறுவனம் என்னும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது.

வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி தொடக்க காலங்களில் 100 சதவிகித மருத்துவக் கல்வி இடத்தையும் பெண்களுக்கே வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம், அந்தக் காலகட்டங்களில் பெணக்ளுக்கு, ஆண்கள் பிரசவம் பார்ப்பதை சமூகம் அனுமதிக்கவில்லை.

இதனால் ஏராளமான பிரசவ மரணங்கள் நிகழ்வதைக் கண்டு வெதும்பி, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலூர் திரும்பினார் டாக்டர் ஐடா. பிரசவ மரணங்களைத் தடுக்க, அதிகளவிலான பெண்கள் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற நோக்கத்திலேயே 100 சதவிகித மருத்துவப் படிப்பு இடங்கள் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டன என்பது வரலாறு.

ஏராளமான பெண் டாக்டர்கள்

100 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட இக்கல்வி நிறுவனத்தில் 1918 முதல் 1947 வரை பெண்களை மட்டுமே மருத்துவ மாணவர்களாக சேர்த்துக் கொண்டிருந்துள்ளனர். 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், பெண்களுக்கு படிப்பு எதற்கு என்பன போன்ற மூட நம்பிக்கைகள் உலவி வந்த காலத்தில், ஏராளமான பெண் மருத்துவர்களை உருவாக்கி உலகுக்கே முன்னுதாரணமாக நின்றது வேலூர் சி.எம்.சி என்பது வரலாறு.

மாணவிகள்தான் அதிகம்

இந்தியத் தாய்திருநாட்டின் சுதந்திரத்துக்குப் பின்னரே இரு பாலர் பயிலும் கல்லூரியாக இது மாற்றப்பட்டது. இருந்தபோதும், பெண்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கியது இக்கல்லூரி. இன்றளவும் மாணவிகளே இங்கு அதிகம் படித்து வருகின்றனர்.

பொது நுழைவுத் தேர்வு

'நீட்' நுழைவுத்தேர்வு முறையை பலவித ஏற்றத்தாழ்வுகளுடன் இன்று நாடு முழுவதும் உள்ளது. ஆனால் கொண்டாலும் இந்தியாவிலேயே முதன்முறையாக 1970-ம் ஆண்டிலேயே அனைவருக்கும் பொதுவான நுழைவுத்தேர்வு முறையையும் நேர்முகத் தேர்வு முறையையும் அறிமுகப்படுத்தியது வேலூர் சி.எம்.சிதான். இதன் நுழைவுத்தேர்வு வழிமுறைகளைத்தான் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் கடைப்பிடித்துவருகின்றன என்றால் இதன் தொன்மையையும், நேர்மையான சேர்க்கை முறையையும் அறிந்துகொள்ளலாம்.

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விருப்பமா...?

அடிப்படைத் தேர்வுகள்

இந்தக் கல்லூரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது, இரண்டரை நாள்கள் சில அடிப்படைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் தனித்தன்மையை பரிசோதிக்கும் வகையிலும் மருத்துவ சேவைக்கு அவர்கள் தகுதியானவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தத் தேர்வு முறை அமைந்துள்ளது.

இதில் மாணவர்களின் பதிவு எண்ணுக்குப் பதிலாக டம்மி எண்கள் கொடுக்கப்படுகின்றன. எந்த மாணவர் எவ்வளவு மதிப்பெண் எடுத்தார் என்பது யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியம் காக்கப்படுகிறது. உலகின் சிறந்த தேர்வு முறையாக வேலூர் சி.எம்.சி-யின் அணுமுகுறையை தான் நிபுணர்கள் எடுத்துச் சொல்கின்றனர்.

முதன்முதலில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்த வேலூர் சி.எம்.சிக்கு கடந்த ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அனைத்து தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களும் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்ட நிலையில், வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி மட்டும் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்தது.

20 மருத்துவமனைகள்

இந்தியாவில் 20 மருத்துவமனைகளை நிர்மானித்து, அந்த மருத்துவமனைகளுக்கான சிறந்த மருத்துவர்களை உருவாக்கி அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறது வேலூரி சிஎம்சி. ஆண்டுக்கு வெறும் ரூ.3,000 கல்விக் கட்டணம் கொண்ட இந்நிறுவனத்தில் படிக்கத் தேர்வு செய்யப்படும் ஒருவர், 3 ஆண்டுகள் கிராமப்புற சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகின்றனர்.

இதுபோன்ற ஒப்பந்த முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை வேலூர் சி.எம்.சியையே சாரும் என்பது முக்கியமாகும்.

ராணிப்பேட்டை வளாகம்:

வேலூர் மட்டுமல்லாமல் சித்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சிஎம்சி தனது மருத்துவமனையை அமைத்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டில் ராணிப்பேட்டையில் பிரமாண்டமான மருத்துவமனையை சிஎம்சி திறந்ததுவைத்தது.

இப்புதிய மருத்துவமனை வளாகம் 1500 படுக்கை வசதிகளுடன், அவசர சிகிச்சை மையம், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 6 பிரத்யேக அறுவை சிகிச்சை அறைகள், கூடுதலாக 29 அறுவை சிகிச்சை அறைகள், 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, இருதய சிகிச்சை மற்றும் ஆய்வகங்கள், 29 படுக்கை வசதிகளுடன் கூடிய எலும்பு- மஜ்ஜை மாற்று சிகிச்சைப் பிரிவு, முழுவசதி கொண்ட இரத்த சேமிப்பு மற்றும் இரத்த நன்கொடையாளர் மையம், 50 டயாலிசிஸ் படுக்கை வசதிகள், உயர்நிலை நோய் கண்டறியும் மற்றும் சிகிச்சைக்கான கதிரியக்கவியல் மற்றும் அதிநவீன ஆய்வகங்கள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார விநியோகத்தில் முப்பது சதவீத தேவையினை சோலார் பேனல்கள் மூலம் பூர்த்தி செய்யும் வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

படிப்புகள் என்னென்ன...:

இந்த மருத்துவக் கல்லூரியில் தற்போது எம்.பி.பி.எஸ்., பி.எஸ்சி., - நர்சிங், அலைடு ஹெல்த் சயின்சஸ் - ஏ.எச்.எஸ். போன்ற படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்தப் படிப்புகளுக்கு வரும் மார்ச் 21-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு https://admissions.cmcvellore.ac.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The admission to MBBS programme at CMC Vellore campuses will solely be based on the marks scored by the candidates in the NEET exam. There are no management category seats available at CMC Vellore campuses. CMC Vellore Entrance Exam has been permanently scrapped as an entrance exam.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+