மாணவர்கள் குஷி...ஐஐடி சென்னையில் புதிய முதுநிலை படிப்பு அறிமுகம்...!

ஜெர்மனி நாட்டில் உள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, நீர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச முதுநிலை படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இதனால் இந்தப் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க https://abcd-centre.org/master-program/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (Indian Institute of Technology Madras) தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஓர் உயர்கல்வி நிறுவனமாகும் இது. மத்திய அரசினால் தேசிய இன்றியமையாத கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும்.

மாணவர்கள் குஷி...ஐஐடி சென்னையில் புதிய முதுநிலை படிப்பு அறிமுகம்...!

959ஆம் ஆண்டு அப்போதைய மேற்கு ஜெர்மனி அரசின் பணஉதவி மற்றும் நுட்ப உதவியுடன் இது நிறுவப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட மற்றும் நாட்டின் இன்றியமையாத கல்விக்கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் மூன்றாவதாக நிறுவப்பட்டது. ஏராளமான கல்வி நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கிய பெருமையை உடையது சென்னை ஐஐடி.

இத்தகைய புகழ்வாய்ந்த சென்னை ஐஐடியானது, தற்போது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆச்சென் பல்கலைக்கழகம் மற்றும் டிரெஸ்டென் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, புதிய படிப்பை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது நீர் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மாற்றம் தொடர்பான சர்வதேச முதுநிலை படிப்பாகும் இது. இந்த படிப்பைத்தான் மெட்ராஸ் ஐஐடி உயர்கல்வி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆராய்ச்சியுடன் இணைந்த இந்த படிப்பில் இந்திய பொறியியல் பட்டதாரிகளும், வெளிநாட்டு மாணவர்களும் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படிப்புக்காக மாணவர்கள் மெட்ராஸ் ஐஐடியில் சேர்ந்தாலும் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் காலம் ஆச்சென் பல்கலைக்கழகத்திலும் டிரெஸ்டன் பல்கலைக்கழகத்திலும் படிக்க முடியும். ஆராய்ச்சிக் கட்டுரையை தங்கள் விருப்பம்போல் ஐஐடியிலோ அல்லது ஜெர்மனி பல்கலைக்கழகங்களிலோ சமர்ப்பிக்கலாம் என்று மெட்ராஸ் ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய படிப்பானது வரும் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. வரும் ஜூலை 29-ம் தேதி புதிய படிப்பு தொடங்குகிறது. இதில் சேர ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (https://abcd-centre.org/master-program/) விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த சர்வதேச படிப்பு குறித்து மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறியதாவது:

பலதரப்பட்ட பாடங்களுடன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் வகையில் இப்படிப்பு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த படிப்பானது, சர்வதேச சூழலில் நீர் பாதுகாப்பில் ஏற்படும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கான திறனை வளர்க்கும் வகையில் மிகச் சிறப்பான வகையில் அமைந்திருக்கும்.

இந்திய மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் இப்படிப்பில் சேரலாம். பன்னாட்டு நிறுவனங்களிலும் அரசு அமைப்புகளிலும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படும்.

தற்போதுள்ள மாணவர்களுக்கு தேவைப்படும் மிக ச்சிறப்பான படிப்பாகும் இது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இதில் சேர விரும்பும் தமிழக மாணவர்கள் குஷி அடைந்துள்ளனர்.

இணையதள முகவரி: இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க https://abcd-centre.org/master-program/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian Institute of Technology Madras has tied up with German universities RWTH Aachen (RWTH) and TU Dresden (TUD) to launch a new joint master’s programme on water security and global change to enable mobility of enrolled students among the three universities. Students will commence the academic year at IIT-M and spend at least one semester at TUD and RWTH, with the flexibility to do their master’s thesis at the university of their choice.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+