இந்தியன் நேவியின் வேலை வாய்ப்பு பெற வெல்ல வேண்டிய தேர்வுகள்

Posted By:

இந்தியன்  நேவியில் பணியிடம் பெற மாணவர்கள் இளைஞர்களுக்கு வழிக்காட்டுகின்றோம்.
இந்திய கப்பல் படையில் வேலை வாங்கனும் டைட்டானிக் கப்பல் ஹிரோ மாறி சுதந்திரமாக அங்கிகரிக்கப்பட்ட பதவியுடன் சுற்ற வேண்டும் என்ற ஆசை மற்றும் லட்சியம் கொண்டுள்ளிர்களா உங்களுக்கான கல்வியுடன் கப்பல் படையில் எப்படி சேர்ந்து செயல்படுவது உள்ளிட்ட தகவல்களை பெற்று கனவு வேலையை பெறவும் இதனை தொகுத்து கொடுப்பதில் கரியர் தளம் பெருமிதம் கொள்கின்றது. வாங்க படிப்போம்.

நேவி என்ற கடற்ப் படையில்  நமது முன்னோர்களான இராஜராஜ சோழன் காலத்திலேயே சிறந்த  வழித் தடம் கொடுக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து கடாரம், இலங்கை வென்று கொண்டு வந்த சோழர் காலத்தில் கடற்ப்படை சிறந்த ஒன்றாக விளங்குகின்றது. அவ்வாறே இன்றைய கால கடற்ப்படையில் பணியாற்ற மெனக்கெடும் நமது  இளைஞர்களுக்கு வழிக்காட்டுகின்றோம். மேலும் அதிகாரப்பூர்வ இணைய தள லிங்கினை பார்க்கவும் 

இந்தியன் நேவியில் ஆசை :

வெண்ணிலவை தொட்டு முத்தமிட ஆசை
வெண் மேகங்களை எட்டிபுடிக்க ஆசை
ஆழி பேரலையில் ஆட ஆசை என்ற ஆசைகளை தன்னுடன் கொண்டு செல்லும் இளைஞர்களுக்கான கனவை நினைவாக்க வாங்க தெரிஞ்சுக்குவோம்.

இந்தியன் நேவி:

இந்தியன் நேவி எனது கனவு என்று விருப்பமா இந்தியன் நேவியில் வேலை வேண்டும் அதற்கு எக்ஸாமினர் மெண்டலி பிசிக்கலி பிட்டாக இருக்க வேண்டும்.
ஆம் உடல் மற்றும் மனதளவில் வலிமையுடன் இருப்பவர்கள் எந்த வித டாஸ்கையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருப்பாங்க.

என்டிஏ மற்றும் என்ஏ என்ட்ரி:

தேசிய பாதுகாப்பு படைகளுக்கு முக்கிய பயிற்சி தளமாக இருப்பது என்டிஏ மற்றும் என்ஏ ஆகும். அதென்ன என்டிஏ என்றால் தேசிய பாதுகாப்புத்துறையின் தேர்வு களஞ்சியங்கள் ஆகும்.
என்டிஏ மற்றும் என்ஏ தேர்வினை முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் தான் எழுத முடியும். 16 ½ வயது முதல் 191/2 வயதுள்ளவர்கள் என்டிஏ தேர்வினை எழுதலாம். என்டிஏ தேர்வு வருசத்தில் இரண்டு முறை மத்திய தேர்வுத்துறை ஆணையம் நடத்தும் .
பத்து மற்றும் பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணிதம் முக்கிய படிப்பாக படித்திருப்பவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
என்டிஏ முழுக்க முழுக்க பள்ளி இளம் வயது மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வாகும். அது எழுத்து தேர்வு மற்றும் எஸ்எஸ்பி அதாவது ஸ்டாஃப் செலக்ஸன் போர்டின் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேவியில் பணியாற்ற டெக்னிக்கல் வாய்ப்பு :

இந்திய நேவியில் பணியாற்ற 16 ½ வயது முதல் 19 ½ வயது இருக்கும் பள்ளி இறுதி மற்றும் கல்லுரியில் அறிவியல் மற்றும் இயற்பியல், கணிதம் பாடங்கள் படித்து 70% மதிபெண்கள் பெற்றவர்கள் ஆங்கிலத்தில் அடிப்படை அறிவுடையவர்கள் எழுதலாம் இந்த தேர்வை. குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களில் திறனுடன் சிறந்து விளங்கும் மாணவர்கள் இளைஞர்களுக்கு நேரடியாக எஸ்எஸ்பி இண்டர்வியூ மூலம் தேர்வு பெறும் ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வெரும் 12ஆம் வகுப்பு மற்றும் கட் ஆப் மட்டுமே போதுமானது ஆகும்.

சிடிஎஸ் தேர்வு மூலம் கல்லுரி மாணவர்களுக்கான நேவி வாய்ப்பு :

இந்திய நேவியில் இணைய யூபிஎஸ்சியினால் நடத்தப்படும் சிடிஎஸ் தேர்வு மிக முக்கியமானது ஆகும். இதனை நாட்டிலுள்ள பெரும்பாலான இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் மட்டும் இந்த தேர்வை எழுத முடியும்.
கணிதம் வித் பிசிக்ஸ் பாடங்களில் பிஎஸ்சி முடிச்சவங்க அல்லது இன்ஜினியரிங் இளங்கலை மாணவர்கள் இளைஞர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

கிராஜூவேட் என்ட்ரி :

இந்தியன் நேவியில் பணிவாய்ப்பு பெற கிராஜூவேட் என்ட்ரி என அழைக்கப்படும் பட்டதாரிகளுக்கான நேரடியான வாய்ப்பும் உள்ளது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ச்சி சதவிகிதம் கட் ஆப் மூலம் எஸ்எஸ்பி இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 18 வயது முதல் 25 வயதுடையோர் இந்த தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்

லா கேடர் மூலம் இந்தியன் நேவியில் பணிவாய்ப்பு:

இந்தியன் நேவியில் லா எனப்படும் சட்டம் படித்தவர்களுக்கான ஒரு வாய்ப்பு .
சட்டம் பயின்று 55% சதவிகித மதிபெண்கள் பெற்றவர்கள் 1961 சட்டவிதிப்படி இந்திய நேவியில் பணிவாய்ப்பு பெறலாம்.

நேவியில் ஆபிசர் பணியிடங்கள்:

இந்தியன் நேவியில் எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் மற்றும் பொது சர்வீஸ் பணியிடங்கள் . சப் மெரைன் ஆபிசர் ஹைடிரோ கிராபிக் ஆபிசர், டிவிங் ஆபிசர், நாவல் ஆர்மாமெண்ட் இன்ஸ்பெக்டர் ஆபிஸர், லா ஆபிசர், போரோவொஸ்ட் ஆபிசர், லாஜிஸ்டிக் ஆபிசர், பைலட் ஆபிசர் இன்பர்மேசன் டெக்னாலஜி, அபசர்வர் ஆபிசர் போன்ற பணியிடங்களில் ஆபிசர் பணியிடம் பெறலாம்.
இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கும் இன்ஜினியரிங் பொது சர்வீஸ் ஆபிசர், சப் மெரைன் இன்ஜினியரிங் ஆபிசர், நேவல் கன்ஸ்ட்ரகசன் ஆபிசர் இன்ஜினியரிங் ஆபிசர்
எலக்டிக்கல் ஆபிசர் ஜென்ரல் சர்வீஸ் ஆபிசர் சப்மெரைன் ஆபிசர், சப் மெரைன் எலக்ட்ரிக்கல் ஆபிசர் பொது சேவை, கல்வித்துறை ஆபிசர் போன்ற பனியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
எஜூகேசன் ஆபிசர்ஸ் இன் சார்ட் சர்வீஸ கமிசன் அத்துடன் பர்மெனண்ட் கமிசன் அத்துடன் மெடிக்கல் ஆபிசர் போன்ற பணியிடங்களில் அந்தந்த துறையை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சார்ட் சர்வீஸ் கமிசன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் :

இந்தியன் நேவியில் பெண்களுக்கு இடமில்லையா என்ற கேள்விக்கு இடம் கொடுக்காமல் அவர்களுக்கான்பணி வாய்ப்பு வழங்குகின்றது.
நேவல் ஆர்கிடெக்சர்
லா
லாஜிஸ்டிக்ஸ்
ஏர் டிராபிக் கன்ட்ரோல்
ஏவியேசன் & எஜூகேசன் பிராஞ்சுகளில்   பெண்களுக்கான சிறப்பிடம் வழங்கப்படுகின்றது. 
ஆண் பெண் இருபாலருக்கும் சிறப்பான பயிற்சிகள் மூலம் தகுதியானவர்களை உருவாக்குகின்றது இந்தியன் இந்திய பாதுகாப்பு படைகளுள் ஒன்றான இந்திய நேவி

English summary
here the article tells about to get a navy job

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia