ஹோமியோபதி , பிசியோதெரபி,யுனானி படியுங்கள் மாணவர்களே

Posted By:

 

ஹோமியோபதி :

பிளஸ் டூ முடித்த உங்களுக்கான மருத்துவ பிரிவின் அடுத்த பிரிவு நீங்கள் எதிர்பார்த்த மருத்துவ பிரிவின் இன்றையகால கட்டத்தில் வளர்ந்துவரும் ஹோமியோபதி ,பிசியோதெரபி, யுனானி, படிப்புகள் படிக்கும் போது அதற்கான தேவையை அறியலாம் . அறிவியலின் அடிப்படை பாடங்களான இயற்பியல் , கெமிஸ்ட்ரி , பையாலஜி முடித்து உங்கள் ஹோமியோபதி விருப்ப பாடத்தை உடன் சேர்த்து படியுங்கள் மாணவர்களே .

மாணவர்களே மருத்துவ துறையின்  பிரிவுகள் அறிந்துகொள்வோமா

 

பிளஸ் டூவில் அறிவியல் பாடத்தில் இயற்பியல்,வேதியியல், உயிரியல் படித்திருந்து 50 % மதிபெண் பெற்றிருக்க வேண்டும் . மேலும் எண்ட்ரென்ஸ் என்னும் நுழைவு தேர்வு எழுத வேண்டும் . படிப்பு காலம் ஐந்து வருடம் ஆறு மாதம் ஆகும், நான்கு வருடம் ஆறுமாத காலபடிப்பு, ஒரு வருடம் இண்டென்சிப் முடித்தால் நீங்களும் மருத்துவர் ஆகலாம். இந்தியாவில் அலோபதி, ஆயுர்வேதிக் அடுத்து மூன்றாவதாக பெயர்பெற்ற துறையெனில அது ஹோமியோபதி மற்றும் மாதம் 40 முதல் 50 ஆயிரம் வரை சமபளம் பெற வாய்பு உள்ள துறையாகும் .

எம்டி : டாக்டர் ஆஃப் மெடிசன்

எம்டிஎஸ் படிக்க மருத்துவம் படித்தவர்கள் மேற்கொள்ளும் மேல் படிப்பு ஆகும் .  படிப்பு மூன்று ஆண்டுகாலம் ஆகும் . மருத்துவம் முதுகலை படிப்புக்கு நிகராகும். எம்பிபிஎஸ் முடித்தவர்களே இப்படிப்பினை மேற்கொள்ளும் தகுதியுடைவோர் ஆவார் .

எம்எஸ் :மாஸ்டர் ஆஃப் சர்ஜரி

மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய மேற்கொள்ளும் மூன்று வருட படிப்பாகும். இது எம்பிபிஎஸ் படிப்பு படித்திருக்க வேண்டியது அடிப்படைத் தகுதி ஆகும் .

பி.பார்ம் : பேச்சுலர் ஆஃப் பார்மசி

பேச்சுலர் ஆஃப் பார்மசி படிப்புக்கு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு 50% சதவீகித மதிபெண்களுடன் கட்டாயமாக முடித்திருக்க வேண்டும். அத்துடன் கணிதம் அல்லது பயாலஜி கட்டாயமாக படித்திருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ இன் பார்மசி முடித்திருக்க வேண்டும் . நான்கு வருட படிப்பு காலம் ஆகும் .

மாணவர்களே மருத்துவ துறையின்  பிரிவுகள் அறிந்துகொள்வோமா

 

பிஎஸ்சி நர்சிங் :

பிஎஸ்சி நர்சிங் படிக்க நான்கு வருட காலம் ஆகும் . 10 ஆம் 12 ஆம் வகுப்புகளில் இயற்பியல் , வேதியியல் , உயிரியல் பாடங்களை படித்து 45% சதவீகித மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது ஆகும் . நீங்கள் செவிலியர் ஆகலாம் . மருத்துவ குழுவில் இணையலாம் .

பிபிடி பிசியோதெரபி :

பிசியோதெரபியின் படிப்புகாலம் நான்கு முதல் ஐந்து வருட காலம் ஆகும் பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல் , வேதியியல் ,பயாலஜி படித்திருக்க வேண்டும். பிசியோ தெரபியானது உடற்பயிற்சியின் மூலம் நேரடி கண்கானிப்பில் நிவாரணம் தரும் சிகிச்சையாகும் .

பி.ஓ.டி அக்குபேசனல் தெரஃபி :

அக்குபேசனல் தெரஃபியானது நோயாளியின் உடல், மனம் மற்றும் உணர்வுவரை ஆழமாக சென்று சிகிச்சையளிக்கும் மருத்துவ முறை ஆகும். நான்கு முதல் ஐந்து வருடகாலம் படிக்க வேண்டும். வருட சம்பளமாக மூன்று முதல் நான்கு லட்சம் வரை பெறலாம் .

பி.யு.எம்.எஸ் யுனானி :

யுனானி படிக்க ஐந்து வருடகாலம் படிப்பு .10, 12 ஆம் வகுப்புகளில் அறிவியல்பாடத்தில் இயற்பியல் , வேதியியல் , உயிரியல் படித்திருக்க வேண்டும் . உருது மொழி கட்டாயம் பத்தாவது தகுதிவரை படித்திருக்க வேண்டும் . ஐந்து வருடம் உடன் ஆறுமாத காலம் படிக்க வேண்டும் .

டி பார்ம் : (ஆயுர்வேதிக் , சித்தா மெடிசன் )

டிபார்ம் மெடிக்கல் துறையில் டிப்ளமோ படிப்பு துறையாகும். பனிரெண்டாம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல் படித்திருக்க வேண்டும் .

பிஎம்எல்டி : பேச்சுலர் ஆஃப் மெடிக்கல் லேப் டெக்னிசியன்ஸ் :

இப்படிப்பு மூன்று வருட காலம் கொண்டது ஆகும் . லேப் சார்ந்த அனைத்து வித கற்றல் கொண்டது ஆகும்
டிஎம்எல்டி  (டிப்ளமோ ஆஃப் மெடிக்கல் லேப் டெக்னீசியன் )
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . இப்பாடம் ஒரு வருடம் போதுமானது ஆகும் .
மாணவர்களே என்ன இவ்ளோ இருக்கான்னு பாக்குறீங்களா ஆம் இன்னும் நிறைய துறைகள் இருக்கு ஒன்றன் பின் ஒன்றாக தெரிந்து கொள்ளலாம் .
ஒரு தேசத்தின் வளர்ச்சி அத்தேசத்து மக்கள் வாழும் செழிப்பான வாழ்விலும் அவர்களது ஆரோக்கியத்திலும் அடங்கியுள்ளது இதற்கு அத்தேசத்து மக்களின் உடல் ஆரோக்கியம் அவசியமாகும் இதற்கு அத்தேசத்தின் சுத்தம் ,சுகாதாரம்,மருத்துவர்கள் தரமானவர்களாக அமைய வேண்டும் .மருத்துவம் பயிலும் ஒவ்வொருவரும் இதனை உணர வேண்டும் .

English summary
here article tell about medical deportment and career opportunity for 12th standard students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia