வேளாண் கல்வியும் வேலை வாய்ப்பு தரும் விவசாய தினம்

Posted By:

இந்திய விவசாயிகள் தினம் இன்று. உணவு மனித வாழ்வின் மகத்தான இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினத்தை நினைவாக கொண்டும் . அவர் விவசாயிளை போற்றி மதித்து செயல்படுத்திய திட்டங்க்ளை நினைவில் வைத்து அவரின் பிறந்நாளான டிசம்பர் 23 ஆம் நாளினை இந்தியா தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாட்டி வருகின்றது.

விவசாயிகளின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியை குறிக்கும்

நாட்டின் பல அரசியல் நெருக்கடிகளுக்கிடையே 1979 ஆம் ஆண்டு நாட்டின் ஐந்தாவது பிரதமராக பதவியேற்றார். சவுத்ரி சரண் சிங் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் ஜமின்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார் . நிலஉரிமையாளர்கள் வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்பு கண்டனங்கள் வைத்து வந்தார்.

வேளாண் விலைபொருள் சந்தை கொண்டு வந்து மக்களை காத்தார் சவுத்ரி சரண் சிங். இந்தியாவின் வறுமை ஒழிப்பு , கூட்டுறவு பண்ணை முறை போன்ற நூல்களை அவர் எழுதியுள்ளார். புது டெல்லியில் அவர் நினைவிடத்தில் கிசான் காட் என்று நுழைவாயில் அழைக்க்ப்படுகின்றது.

நாட்டின் 60 % மக்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். விவசாயப்ப் பொருட்களை கொண்டு நாம் நமது உணவு தேவையை அடைந்தோம்.

இந்தியாவில் விவசாய பொருளான கோதுமை அத்துடன் அரிசி விளைச்சளை கொண்டு மக்களின் தேவை நிறைவேற்றப்பட்டு வருகின்றது . உணவு மற்றும் உற்பத்தி வளர்ச்சிக்காக இந்தியாவில் பசுமை புரட்சி கொண்டு வரப்பட்டது.

விவசாயிகளின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியை குறிக்கும்

விவசாயமும் மாணவர்கள்:

இன்றய காலக்கட்டங்களில் விவசாயம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம் ஆகும் விவசாயக் கல்வியை மாணவர்களுக்கு கறுத்தர வேண்டும். இயற்கை வளங்களை எவ்வாறு சிக்கல்லின்றி ஒற்றுமையாக பங்கிட்டு கொள்வது அனைத்தும் கற்றுக்கொள்ள அவசியமானது ஆகும்.

இன்றைய காலக்கட்டங்களில் பருவநிலை மாற்றம், வறட்சி, நிர்வாக குறைப்பாடு , அதிக கெமிக்கல் உரங்களால் பாதிக்கப்படும் நிலங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அவ்வாறு அறிந்து கொண்டு பல்வேறு புதுமைகளை மாணவர்கள் புகுத்த வேண்டும்.

விவசாயப் பாடம் :
விவசாயப்பாடங்களை மாணவர்களின் செயல்முறை பயிற்சி அளிக்க வேண்டும் , அதுவும் வீட்டில் உள்ள சுற்றுப்புரத்தினை எவ்வாறு பயிரிடுவது என மாணவர்கள் தன்முணைப்பில் செய்யும் அளவிற்கு நாட்டில் வேளாண்மையின் மகத்துவம் சென்றைடைய வேண்டும். அது சென்றடையும் போது நாட்டில் பல்வேறு புதுமைகளை காணாலாம்.

ஒரு தேசம் செழிக்க வேண்டுமானால் அந்த தேசத்தின் இரு தூண்கள் ஜெயிக்க வேண்டும் ஒன்று விவசாயி மற்றொன்று அறிவை தரும் கல்வி இதனை செவ்வனே எந்த நாடு செய்கின்றதோ அந்த நாடு உச்சக்கட்ட வளர்ச்சியை அடையும் .

வேளாண்மையில் உள்ள வேலை வாய்ப்பு :

வேளாண்மை கல்வி , வேளாண்மை இன்ஜினியரிங்க, வேளாணமை நிர்வாகம் அத்துடன் வேளாண்மை வர்த்தகப் பாடங்கள் இன்று மாணவரிடையே மிகுந்த பிரபலம் அடைந்து வருகின்றன.
வேளாண் பொருள் விளைச்சல், வேளாண் விளைச்சலுடன் ஆடு, மாடுகள் வளர்ப்பு, உற்பத்தி செய்த பொருளை சந்தைப் படுத்துதல் இவையே வேளாண் அறிவியல் படிப்பாகும் அதனை பலர் செய்ய வேண்டும்.
பொருளாதார மாற்றத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வித்தையினை ஆற்றலாக கொண்டு செயல்படும் விவசாயத்துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது.

வேலை தரும் துறையாக விவசாயம் உள்ளது ஆனால் அதன் மீது கவனம் செலுத்த தெரிய வேண்டும். வேளாண்மைத் துறையில் கடன் பெற்று நாம் தொழில் தொடங்க வேண்டும் நுணுக்கமும் சற்று ஆக்கமும் உழைக்கும் ஈடுபாடு மட்டும் மூலதனமாக கொண்டு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

வேளாண் வேலை வாய்ப்பு நிறைந்த துறைகள் பட்டியல்

1 அக்ரிகல்ச்சர் ரிசர்ச்
2 அக்ரி பிஸ்னஸ்
3 அக்ரோ இண்டஸ்ட்ரி
4 அக்ரி கல்ச்சர் எஜூகேசன்
5 அக்ரி கல்ச்சர் ஜெர்னலிசம்
6 சர்வீஸ் இன் அகரிகல்ச்சர்
7 வங்கி
8 கன்சர்வேசன்
9 அக்ரி இன்ஜினியரிங்
10 மேனேஜ்மெண்ட்
11 செரிக்கல்ச்சர்

போன்றதுறைகளில் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறலாம். வேலை வாய்ப்பு பெறுவதுடன் மாணவர்கள் இப்படிப்பினை கொண்டு சுய வேலை தொடங்கலாம். நாட்டில் முதுகெலும்பான விவசாயத்தை காப்போம்.
நாட்டை வளம்பெறச் செய்வோம் நாமும் வளமுடன் வாழ்வும்.

English summary
here article tells about Agriculture special for farmers day to students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia