மாணவர்களுக்கான பாதுகாப்புத்துறையில் உள்ள வாய்ப்பு !

Posted By:

இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு பெறுவது குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு மேலும் அது தொடர்பாக பல்வேறு விவரங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் மாணவர்களுக்கு இருக்கும் .

என்டிஏ தேர்வு மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்

போட்டி தேர்வில் பாதுகாப்பு படைக்கு மாணவர்கள் தயராக வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள் . நீங்கள் மாணவப் பருவத்திலே அது குறித்து அறிந்து கொள்ள வேண்டும் .

யூபிஎஸ்சி தேர்வு ஆணையம் பள்ளி மாணவர்களை தேசிய பாதுகாப்பு படையில் இணைய தேர்வினை தேசிய அளவில் நடத்துகிறது .  என்டிஏ தேர்வு மூலம் பள்ளி மாணவர்களை தேசிய பாதுகாப்பு படையில் இணைக்கின்றது . நேசனல் டிஃபென்ஸ் அகாடமி புனேயில் உள்ளது .

யூபிஎஸ்சி என்டிஏ பள்ளி மாணவர்களுக்கு நடத்துவது போல் பட்டதாரி மாணவர்களுக்கு கம்பைனைடு டிஃபென்ஸ் சர்வீஸ் தேர்வினை நடத்தி அவர்களுக்கு பயிற்சி அளித்து நாட்டின் பாதுகாப்பு பணிக்கு தயாராக்கு கின்றது .

வீரமும் வேகமும் தேசப்பற்றும் தியாக மனப்பான்மை கொண்ட வீரர்களுக்காக நடத்தப்படும் தேர்வினை குறித்து தமிழக மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் . தமிழக மாணவர்கள் வீரத்தின் சொருபமானவர்கள் அத்துடன் சிறந்த கொள்கை கொண்டவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . ஆனால் இலக்கினை உறுதியாக நிர்ணயித்து அதில் பயணிக்க சில தடைகளை தாண்ட வேண்டும் . அதுகுறித்து கொள்கை கொண்ட மாணவர்களுக்கானப் பதிவு இதுவாகும் .

என்டிஏ தேர்வு :

யூபிஎஸ்சி நடத்தும் என்டிஏ தேர்வினை எழுத பிளஸ்2 வில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்திருக்க வேண்டும் . என்டிஏ தேர்வு இருதாள்களை கொண்டது முதல் தாளில் பொது அறிவு அத்துடன் ஆங்கிலம் இரண்டாம் தாளில் கணிதம் கொண்டது

பொது அறிவுடன் புவியியல், வரலாறு, பொருளியல் அறிவியில , வேதியியல் , தாவரவியல் கொண்டது . அத்துடன் ஆங்கிலம் இருக்கும் . இரண்டாம் தாளில் கணிதம் இருக்கும் இரண்டாம் தாளுடன் என்டிஏ தேர்வுக்கான தேர்வு பெற்றவர்கள் எஸ்எஸ்பி இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள் .

எஸ்எஸ்பி இண்டர்வியூ ஐந்துநாள் நடைபெறும் . ஐந்தாம் நாள் முடிவில் தேர்வு பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்படும் . நேர்முகத்தேர்வு மற்றும் குழு விவாதம் அத்துடன் உடல்த்தகுதி தேர்வு சில இலக்குகள் குறித்து அறிவிக்கப்படும் அவற்றினை திறன்பட செய்பவர்களே வெற்றி பெறுவார்கள் .

சார்ந்த பதிவுகள்:

பிஎஸ்எஃப் பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க 

English summary
here article tell about career opportunity for students in defence field

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia