திருவான்மியூர் ஐடிஐ-யில் சேர ஆசையா இருக்கா மாணவர்களே....!

சென்னை திருவான்மியூர் உள்ள சிறப்புவாயந்த் ஐடிஐ தொழில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். இதுதொடர்பாக அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ளார். கூடுதல் தகவல்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.

தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி 11 நாட்களைக் கடந்துவிட்டன. இதையடுத்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெரும்பாலானோர் 11-ம் வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் டிப்ளமோ படிப்பு பயில்வதற்காக பாலிடெக்னிக்குகளில் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் சிலர் ஐடிஐ தொழிற்பயிற்சிக் கூடங்களில் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், கணினி இயக்குநர் மற்றும் திட்ட உதவியாளர், மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பவியலாளர் ஆகிய தொழில் பிரிவுகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

திருவான்மியூர் ஐடிஐ-யில் சேர ஆசையா இருக்கா மாணவர்களே....!

இந்த பாடப்பிரிவுகளில் 2024-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
அதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த சிறப்புவாய்ந்த திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பயிற்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும் முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்று தரப்படும்.

மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் முக்கியமாகும். தொழிற்பயிற்சி பெறுவதோடு அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் எளிதாகும்.

இந்தப் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் கட்டணமில்லா பயிற்சி, மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750 மற்றும் அரசு பள்ளியில் பயின்ற மகளிருக்கு ரூ.1000, மிதிவண்டி என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு 720003262, 9444247028, 8939646933 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Thiruvanmiyur ITI has invites applications for Various courses. For More Details students can login into www.skilltraining.tn.gov.in . Goverment Industrial Training Institute, Thiruvanmiyur is situated in Chennai Tamil Nadu.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+