2,040 பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!

இரண்டு ஆண்டுகள் பி.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

By Saba

இரண்டு ஆண்டுகள் பி.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

2,040 பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!

சென்னை, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ள பி.எட் படிப்பிற்கான கலந்தாய்வானது நேரடி ஒற்றைச் சாளர முறையில் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2,040 பி.எட். படிப்புகளுக்கான இடங்களில் 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.

அதன்படி, கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) தொடங்க உள்ளது. ஜூலை 29-ஆம் தேதி வரையில் இந்த விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 29-ம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பக் கட்டணம் - பொதுப் பிரிவினர் ரூ. 500, எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ. 250 என விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இக்கலந்தாய்வு குறித்த மேலும் விபரங்களை அறிய www.ladywillingdon.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
B.Ed at Lady Willingdon Institute of Advanced Study in Education Chennai
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+