செயற்கை நுண்ணறிவு படித்துள்ளீர்களா...உங்களுக்கு அதிக ஊதியத்தில் வேலை காத்திருக்கு...!

ஏஐ என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு படிப்புதான் தற்போதைய காலத்தில் அதிகம் மாணவர்களால் விரும்பப்படும் படிப்பாக அமைந்துள்ளது. கடந்த காலத்தில் இயந்திரமயமாக்கல், கணினிமயமாக்கல் எனப் பணியாளர்களுக்கு பதற்றம் தந்தவை வரிசையில் அண்மைக்கால வரவாக அமைந்ததுதான் இந்த செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ.

மனித உடல் உழைப்பை அபகரித்த இயந்திரங்கள், தற்போது கணினி நுட்பத்தின் உதவியுடன் மனித மூளையின் உழைப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. செல்போன் முதல் தானியங்கிப் போக்குவரத்து வரை செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளை தற்போது நாம் அறியத் தொடங்கியுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு புழக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பைப் பறிப்பது நிச்சயம் என்றாலும், அதைவிட அதிகமான பணிவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு வழங்கும் என்ற ஆச்சர்யமானத் தகவலை உலக பொருளாதார கூட்டமைப்பு தந்துள்ளது.

கல்வி, வேலைவாய்ப்புத் துறையில் இருப்பவர்கள், அதை ஒட்டிய மாற்றங்களுக்கு தயாராவதே முன்னேற்றம் தரும். சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் எட்டாம் வகுப்பு முதற்கொண்டே செயற்கை நுண்ணறிவைச் சேர்க்க தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது உயர்கல்வித் துறையிலும் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், பொறியியல் உள்ளிட்ட துறை மாணவர்கள் நேரடியாகச் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு குறிவைத்து தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

கடந்த பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வந்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளால் நமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது என்பது கண்கூடு.

சுயமாக ஓட்டும் வாகனங்கள் முதல் உணவகங்களில் உணவு பரிமாறும் ரோபோக்கள் வரை ஏஐ தொழில்நுட்பம் நீள்கிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ரோபோக்களை நிபுணத்துவம் மூலம் கற்றுக் கொள்ளவும், மனிதர்களைப் போன்ற பணிகளைச் செய்யவும் உதவுகிறது.

இந்தப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள், பல்வேறு நாடுகளில் அதிக ஊதியம் பெற்று வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு படிப்பு முடித்தவர்கள் அதிக சம்பளத்துடன் கூடிய பணிநிலைகளில் சில இங்கே தரப்பட்டுள்ளன. இவர்கள் பெரிய நிறுவனங்களில் நல்ல நிலைகளில் பணிபுரியக் கூடியவர்களாக உள்ளனர். அவர்களுக்கு அந்த நிறுவனங்களில் அதிக அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு படிப்பு படித்து இதுபோன்ற பணிநிலைகளைப் பெறும்போது அதிக ஊதியம் கிடைக்க வாய்ப்புண்டு.

செயற்கை நுண்ணறிவு படித்துள்ளீர்களா...உங்களுக்கு அதிக ஊதியத்தில் வேலை காத்திருக்கு...!

செயற்கை நுண்ணறிவில் சில தொழில் வாய்ப்புகள்

பிக் டேட்டா இன்ஜினியர்

பிக் டேட்டா இன்ஜினியர் பணியானது, மிகப்பெரிய அளவில் போற்றப்படக்கூடிய அளவில் உள்ளது. பிக் டேட்டா இன்ஜினீயர்கள் பொறியாளர்கள் பல்வேறு துறைகளில் தகவல் சேகரிப்பு, தகவல் சேகரிப்புகளின் பகுப்பாய்வு, மதிப்பீடு மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை மேற்பார்வையிட்டு வருகின்றனர். அந்த நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மற்றும் வருவாயை அதிகரிக்க, புத்திசாலித்தனமான, அதிக அறிவார்ந்த வணிகத் தீர்ப்புகளை பிக் டேட்டா இன்ஜினீயர்கள் வழங்கி வருகின்றனர். பிக் டேட்டா இன்ஜினீயர் பணியிடமானது, டேட்டா இன்ஜினீயர் பணியிடத்துடன் ஒப்பிடக்கூடியதாகும்.

டேட்டா சயின்ஸ்டிட்

ஒரு தரவு விஞ்ஞானியாக (டேட்டா சயின்டிஸ்ட்) மிகப் பெரிய மற்றும் சிக்கலான தகவல்களுடன் பணிபுரிய அவசியம் இந்தப் பணியிடத்தில் இருக்கும். இயந்திர கற்றல் (மெஷின் லேர்னிங்) மற்றும் செயல்படக்கூடிய நுண்ணறிவு இரண்டும் இந்த பணி நிலைகளில் பயன்படுத்த வேண்டி இருக்கும். மேலும், மதிப்பீட்டுக்கு தயார்படுத்துவதற்கு, பெரிய அளவிலான தகவல்களைச் சேகரிக்கும் பணியும் இருக்கும்.

ஏஐ ஆலோசகர்கள்

ஏஐ ஆலோசகர்கள் பணியிடங்களில் பணிபுரிவோருக்கு அதிக அளவிலான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. நிறுவனத்துடனான தொடர்பில் இருக்கும் நுகர்வோருக்கு ஆட்டோமேஷனைப் புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் இந்த ஏஐ ஆலோசகர்கள் உதவுகின்றனர்.
அவர்கள் பொறியாளர்கள் மற்றும் பிற நிபுணர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சாத்தியக்கூறுகளைக் கண்டறியவும், நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கவும் உதவுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு படித்துள்ளீர்களா...உங்களுக்கு அதிக ஊதியத்தில் வேலை காத்திருக்கு...!

பிசினஸ் இன்டலிஜன்ஸ் டெவலப்பர்

பிசினஸ் இன்டலிஜன்ஸ் டெவலப்பர் என்று அழைக்கப்படும் வணிக நுண்ணறிவு மேம்பாட்டாளர், உங்கள் வணிகத்துக்கான வருமானத்தை அதிகரிக்க சிக்கலான தகவல்களை ஆய்வு செய்து சந்தை மற்றும் வணிக போக்குகளை வெளிக்கொண்டு வருவார். நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிப்பதுதான் உங்கள் முக்கிய நோக்கமாக இருக்கும். எனவே, அதற்கான பணிகளை பிசினஸ் இன்டலிஜன்ஸ் டெவலப்பர் செய்து தருவார்.
மேலும் இணைய தரவு தளங்களைப் பயன்படுத்தி பெரிய தகவல்களை உருவாக்குதல், நிர்வகித்தல் மற்றும் பராமரிப்பது பிசினஸ் இன்டலிஜன்ஸ் டெவலப்பரின் பணியாக இருக்கும். இதுபோன்ற பணி நிலைகளுக்கு கூடுதலான சம்பளம் வழங்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் விஷன் இன்ஜினீயர்

கம்ப்யூட்டர் விஷன் இன்ஜினீயர்களின் பணியானது, உணர்ச்சித் தகவலைப் புரிந்துகொள்ளுதல், இடையீடு செய்தல், கணினிகளுக்கு உதவ இயந்திர கற்றல் மற்றும் கம்ப்யூட்டர் விஷன் நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை ஆகும். திரைப்படங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற காட்சித் தகவல்களிலிருந்து படங்களை அடையாளம் கண்டு வகைப்படுத்தக்கூடிய அமைப்புகளை உருவாக்க அவர்கள் மற்ற பொறியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற பணி நிலைகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் விஷன் இன்ஜினீயர்களுக்கு அதிக அளவிலான சம்பளம் வழங்கப்படுகிறது.

பிசினஸ் டெவலப்மெண்ட் மேனேஜர்

பிசினஸ் டெவலப்மெண்ட் மேனேஜர் என்று அழைக்கப்படும்
ஏஐ வணிக மேம்பாட்டின் மேலாளர்கள் புதிய சாத்தியக்கூறுகளைக் கண்டறிவதற்கும் எதிர்கால வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்குவதற்கும் பொறுப்பானவர்களாக செயல்படுகின்றனர். வளர்ந்து வரும் தொழில்களை அடையாளம் காணவும் கூட்டணிகளை உருவாக்கவும் அவர்கள் மற்ற மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நெருக்கமாக வேலை செய்து வருகின்றனர். நிறுவன வளர்ச்சிக்கான தொழில்களை அடையாளம் காணுதல் இவர்களது முக்கியப் பணியாக உள்ளது. இதுபோன்ற பணிநிலைகளில் பணிபுரிவர்களுக்கு வளமான எதிர்காலம் உள்ளது. இவர்களுக்கும் அதிக அளவிலான ஊதியம் கிடைக்கிறது. இவர்களை பணிக்கு எடுப்பதில் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

செயற்கை நுண்ணறிவு படித்துள்ளீர்களா...உங்களுக்கு அதிக ஊதியத்தில் வேலை காத்திருக்கு...!

ரிசர்ச் சயின்டிஸ்ட்

ரிசர்ச் சயின்ஸ்டிஸ்ட் எனப்படும் ஆராய்ச்சி விஞ்ஞானி பணியிடங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக கல்வித் தேவைகளைக் கொண்ட ஏஐ தொழில்களில் ஒன்று ஆராய்ச்சி விஞ்ஞானி பணியிடம் என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்ட் சயின்டிஸ்டுகள் புள்ளியியல், கணினி பார்வை, கற்றல் நுட்பங்கள் மற்றும் கணிதம் போன்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான பல்வேறு துறைகளில் நிபுணர்களாக உள்ளனர். அவர்களது பணிநிலை நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணிகளில் ஒன்றாக உள்ளது.

புரோகிராம் இன்ஜினீயர்

ஏஐ தொழில்நுட்பத்தில் பணிபுரியும் புரோகிராம் இன்ஜினீயர்களின் பணித்திறன் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. ஏஐ பயன்பாடுகளுக்கு, மென்பொருள் பொறியாளர்கள் மென்பொருளை உருவாக்குகின்றனர். ஏஐ வேலைகளுக்கு, குறியீடு உருவாக்குதல், தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு, தயாரிப்பு சோதனை, ஏபிஐ நிர்வாகம் போன்ற நிரலாக்க செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுகின்றனர். பொறியாளர்கள் மற்றும் கணினி விஞ்ஞானிகள் பயன்படுத்தும் மென்பொருளை உருவாக்கி நிர்வகித்து வெற்றி காண்கின்றனர். இதுவே அவர்களின் முக்கியப் பணியாக உள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AI engineer salary in India is around 10 lakhs, which is significantly higher than the average salary of any other engineering graduate. so, lot of students are getting ready to study AI Courses.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+