நம்புனா நம்புங்க.... ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதிய வாய்ப்பு?

ஒவ்வொரு வணிக நிறுவனமும் தகவலறிந்த சரியான முடிவுகளை எடுக்க, அளவு மற்றும் தரம் சார்ந்த தரவை (டேட்டா) பயன்படுத்துகின்றன.

 

அந்த தரவுகள் 'ராவா' இருந்தா? சரியாக இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும்ல... இதற்கு நான் உதாரணம் சொல்லவா...! வேண்டாம்னு சொல்வது தெரியுது... சரி விஷயத்துக்கு வர்றேன்.

பிசினஸ் அனலிட்டிக்ஸ் படிக்க விருப்பம்?

அதனால தான் அந்த டேட்டாவை மொழிபெயர்க்கவும், அதைச் செயல்படக்கூடிய நுண்ணறிவுகளாக மாற்றவும், ஒவ்வொரு நிறுவனங்களுக்கு நன்கு பயிற்சி பெற்றவர் தேவை.

இந்த பணியை செய்யும் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.50.20 லட்சம் அல்லது அதற்கு மேல் ஊதியம் கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வேறு வழியில்லை... நம்பி தான் ஆகனும்.... இல்லை எனில் போய் புள்ளி விவரத்தை தேடுங்க யூத்ஸ்...!
மேலே சொன்ன பணிக்கு பெயர் வணிக பகுப்பாய்வு(பிசினஸ் அனலிட்டிக்ஸ்) என அழைக்கப்படும். நிதி, விற்பனை, செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை தொடர்பான முடிவுகளுக்கு, கிடைக்கும் தரவுகளை தங்களுக்கு ஏற்றாற் போல் பகுப்பாய்வு செய்வது அவசியமாகும்.

 

தொழில்நுட்பம் மற்றும் நமது அமைப்பு தொடர் சிக்கலுக்கு உள்ளாகும் போது, வணிகப் பகுப்பாய்வுகளில் பட்டம் பெற்ற வல்லுநர்கள், நிறுவனங்களுக்கு புதுமையான பகுப்பாய்வுகள் மற்றும் நவீன முறையில், அந்த சிக்கல்களைத் தீர்க்கும் தீர்க்கதரிசி தான் பகுப்பாய்வாளர்.

வணிக பகுப்பாய்வு என்பது வளர்ந்து வரும் தேவையை அனுபவிக்கும் ஒரு போட்டித் துறையாகும். அதற்கு ஏற்றாற் போல், வணிக பகுப்பாய்வு துறையை தேர்வு செய்பவர்கள், தங்களை சரியான முறையில் மேம்படுத்தி கொண்டால், உங்களுக்கான கதவு திறந்து கொண்டே இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

வணிக பகுப்பாய்வாளர் என்ற பட்டத்தைத் தாண்டி, உங்களுக்கு பல வேலை வாய்ப்புகள் உள்ளன; உண்மை இது தான் நம்புனா நம்புங்க; இல்லை விடுங்க....

கல்வி முதல் சுகாதாரம், சில்லறை விற்பனை வரை ஒவ்வொரு துறையிலும் வலுவான பகுப்பாய்வு திறன்கள் மதிப்பு மிக்கவை. அதேபோல அதுகுறித்த ஆலோசனையும், பகுப்பாய்வு குழுவை வழிநடத்தும் தலைமைப் பதவி வரை உயரும் வாய்ப்பு இருக்கு.

பிசினஸ் அனலிட்டிக்ஸ் படிக்க விருப்பம்?

குறுகியகால வாய்ப்பு

ஏராளமான முன்னணி கல்வி நிறுவனங்கள் பிசினஸ் அனலிட்டிக்ஸ் சார்ந்த குறுகியகால, சான்றிதழ், டிப்ளமா மற்றும் முதுநிலை டிப்ளமா என பல்வேறு நிலைகளில் படிப்புகளை வழங்குகின்றன. இப்படிப்புகளை ஆன்லைனிலும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

தொழில்நுட்பத்தை மையப்படுத்திய வாழ்கை முறையின் அபரிமிதமான வளர்ச்சியால், எல்லா துறையிலும் தினமும் புதிய, புதிய படிப்புகள் உருவாகி வருகிறது என்பதையும் நாம் ஒருபோதும் மறக்க கூடாது.

அதற்கு ஏற்றார் போல் நம்மையும், நமது இளம் தலைமுறையும் வழிநடத்தினால், அவர்களது எதிர்காலம் ஒளி நிறைந்து காணப்படுவதோடு, புதிய, புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

வணிக பகுப்பாய்வு தொடர்பான படிப்புகளை தமிழகத்தில் முன்னணியில் உள்ள கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வாயிலாகவே வழங்குகின்றன.

அந்த வரிசையில் தேசிய தர வரிசையில் முக்கிய இடத்தை பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் எம்பிஏ.,(பிசினஸ் அனலிட்டிக்ஸ்) ஆன்லைன் வாயிலாக வழங்குகிறது என்பதையும் தெரிஞ்சுக்கோங்க... ஆகையால், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்திற்கு போய் முழு விவரங்களையும் தெரிஞ்சுக்கலாம்...

இத்துறையை தேர்வு செய்யும் முன், அத்துறை சார்ந்த வல்லுநர்கள் செயல்பாடு, அவர்களின் ஆலோசனையை பெற்றால் கூடுதல் சிறப்பு என்பதையும் மறக்காதீங்க...!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
For courses with a salary of more than Rs.50 lakhs per annum, no longer; Believe that there is always an opportunity...!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X