காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் பி.டெக் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பைப் படிக்க காரக்பூர் ஐஐடி-க்கு விண்ணப்பிக்கும் மாணவச் செல்வங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு https://www.iitkgp.ac.in/about-iitkgp என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
மத்திய அரசால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்பது என்பது பல மாணவ, மாணவிகளின் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. ஆனால், மற்ற பொறியியல் கல்லூரிகளைப் போல 12-ம் வகுப்பு அல்லது பி.யூசி மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கையைப் பெற்று விட முடியாது. இதற்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. முதலில் ஐ.ஐ.டி.,யில் சேர ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறவேண்டும். அப்போதுதான் ஐஐடி-களில் சேர முடியும். இந்த ஐஐடி-களில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றாலே போதும். வேலைவாய்ப்புகள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் தேடி ஓடி வரும்.

அதனால்தான் மாணவ, மாணவிகள் ஐஐடி-களில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இதற்காக 7-ம் வகுப்பு முதலே தனிப்பயிற்சியைப் பெற ஆரம்பிக்கின்றனர். 12-ம் வகுப்பு படிக்கும்போது ஜேஇஇ தேர்வு எழுதி அதிக ரேங்க் பெறுபவர்கள் எளிதில் ஐஐடி-களில் சேர முடியும்.
நாட்டில் உள்ள மாணவர்கள் சிறந்த முறையில் உயர்கல்வி பெறுவதற்காக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) என்ற ஐஐடி-களை மத்திய அரசு அமைத்தது.
முதலில் இந்தியாவில் காரக்பூர், பம்பாய் (இப்பொழுது மும்பை), கான்பூர், மெட்ராஸ் (தற்போது சென்னை), டெல்லி ஆகிய ஐந்து நகரங்களில் நிறுவப்பட்டன. இப்பொழுது இவை பதிமூன்று தன்னாட்சி பெற்ற உயர் கல்விக்கூடங்களாக விளங்குகின்றன. 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலையான பின்னர் இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக ஒரு திறமைமிக்க மனிதவளத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும் பொறியாளர்களையும் உருவாக்க இந்த உயர்கல்வி நிறுவனங்கள்
மைக்கப்பட்டன.இதனை உலக தரத்தில் உருவாக்க நாட்டின் முதல் கல்வி அமைச்சரானஅபுல் கலாம் ஆசாத்தால் உருவாக்கப்பட்டது. பொதுவான பேச்சு மொழியில் இவை ஐ.ஐ.டி எனவும் இவற்றில் படித்தவர்கள் ஐ.ஐ.டி-யர் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த உயர்கல்வி கழகங்கள் காரக்பூர் (1950), மும்பை (1958), சென்னை (1959), கான்பூர் (1959), டெல்லி (1961), கவுகாத்தி (1994), ரூர்க்கி (1947), புவனேஸ்வர் (2008), காந்திநகர் (2008), ஹைதராபாத் (2008), பாட்னா (2008), பஞ்சாப் (2008) மற்றும் ராஜஸ்தானில் (2008) அமைந்துள்ளன.
இந்நிலையில் மேலும் இந்தூர், மண்டி, பனாராஸ் நகரங்களிலும் ஐஐடிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சில இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) உயர்கல்வி நிறுவனங்கள் யுனெஸ்கோ, ஜெர்மனி, யுஎஸ்ஏ மற்றும் சோவியத் கூட்டமைப்பு பண மற்றும் நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியும் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகமாக உள்ளது. மேலும் ஒரு ஐஐடி-யாநது மற்றொரு பொது ஐஐடி-யால் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்ப கழகம் எனப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(ஐஐடி) ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மூலம் இவற்றின் பட்டப்படிப்பு நுழைவு ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. ஐஐடி-யில் படிக்க ஒரு ஆண்டில் ஏறத்தாழ 4000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பட்டமேற்படிப்பிற்கான மாணவர்கள் மேற்கொள்ளவிருக்கும் துறையினைப் பொறுத்து பட்டதாரி பொறியியல் தேர்வு (GATE), JMET, JAM மற்றும் CEED ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தற்போது பட்டப்படிப்பில் ஏறத்தாழ 15,500 மாணவர்களும் பட்டமேற்படிப்பில் 12,000 மாணவர்களும் இந்தக் கழகங்களில் படிக்கின்றனர். இது தவிர ஆய்வு செய்யும் முனைவர் (டாக்டரேட்) பட்ட மாணவர்களும் இங்கு பயின்று வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள 23 ஐஐடி-களில் முதன்மையானது காரக்பூர் ஐஐடி-யாகும். மத்திய அரசால் முதலில் தொடங்கப்பட்ட இந்த ஐஐடி பாரம்பரியமிக்கது. இந்திய அரசினால் தேசிய இன்றியமையாத கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கழகம் பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட, பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் முதலாவதாக நிறுவப்பட்டது என்ற பெருமையைப் பெற்றது. இந்த ஐஐடி காரக்பூர் அறிவியல் மற்றும் நுட்பத்தில் தலைசிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் முதலாவதாக அமைக்கப்பட்ட இந்த உயர்கல்வி நிறுவனம் 1950-ம் ஆண்டில் கொல்கத்தா நகரின் எஸ்பிளனேட் கிழக்குபகுதியில் நிறுவப்பட்டது. பின்னர் 1951-ம் ஆண்டு ஆகஸ்டில் கொல்கத்தாவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரக்பூருக்கு இடம் பெயர்ந்தது. காரக்பூரிலுள்ள கிஜிலி பகுதியில் இது பரந்து விரிந்துள்ளது.
இந்த பெருமை பெற்ற காரக்பூர் ஐஐடி-யில்தான் தற்போது புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவில் பி.டெக் (B. Tech) படிப்பை காரக்பூர் ஐஐடி உள்ளிட்ட 5 ஐஐடி-கள் வழங்குகின்றன.
காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) நான்கு ஆண்டு பிடெக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏஐ(AI) படிப்பை வழங்கும் நாட்டிந் பெரிய ஐந்து ஐஐடிகளில் முதன்மையானது IIT-காரக்பூர் ஆகும். இந்த ஐஐடி-யானது இருபது வருட இடைவெளிக்குப் பிறகு B.Tech திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது.
இந்த ஏஐ படிப்புக்காக காரக்பூர் ஐஐடி வளாகத்தில் ஆய்வக இடம் மற்றும் உபகரண கூடங்களை விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஏஐ(AI) படிப்பிலுள்ள பாடங்கள் மற்றும் பயன்பாடுகளின் பரந்த அளவிலான பாடத் திட்டத்தை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு சந்தையில் மாணவர்களுக்கு போட்டித்தன்மையை வழங்குகிறது.
தற்போது காரக்பூர் ஐஐடி-யில் தொடங்கப்படும் பி.டெக் ஏஐ படிப்பில் தொடக்கத்தில் 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இந்தப் படிப்பில் சேர மாணவர்கள் ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அதிக ரேங்க் பெற்றிருக்க வேண்டும்.
ஏஐ பிரிவில் பி.டெக் முடித்தவர்கள், அடுத்த ஏ.ஐ பாடத்திட்டத்தில் எம்.டெக் (M.Tech) படிப்பையும் மாணவர்கள் படிக்கலாம். அதற்கான விரிவான ஏற்பாடுகளை காரக்பூர் ஐஐடி செய்துள்ளது.
இந்த பி.டெக் ஏஐ பாடப்பிரிவில் இயந்திரக் கற்றலின் கணிதம், அல்காரிதம் மற்றும் கட்டடக்கலை அடிப்படைகள் பாடநெறி முழுவதும் கற்றுத் தரப்படுகின்றன.
ஐஐடி-காரக்பூர் இந்த பாடத்திட்டத்தை வழங்கும் ஐந்து பெரிய ஐஐடிகளில் முதன்மையானது என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் பி.டெக் பிரிவில் ஏஐ படிப்பை பாட்னா ஐஐடி, ஐஐடி-கவுஹாத்தி ஆகியவையும் வழங்குகின்றன.
இணையதள முகவரி: . கூடுதல் விவரம் தேவைப்படும் மாணவர்கள் https://www.iitkgp.ac.in/about-iitkgp என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












