வணிகவியல் படிப்புகளின் வகைகள் மற்றும் விளக்கங்கள்

Posted By:

வணிகவியல் சார்ந்த படிப்புகள்

வணிகவியல் சார்ந்த படிப்புகள் அதன் தேவையும் நவீன உலகில் அதிகரித்து காணப்படுகின்றன . பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வணிகவியல் துறையில் செல்ல விரும்பினால் தாரளமாக செல்லலாம் . வணிகவியல் துறை இன்றைய அனைத்து துறைகளுக்கும் தலையாயது .

நாம் உண்ணும் உணவு முதல் அனைத்திலும் வணிகத்தின் தேவையுள்ளன.  தேவையான அனைத்து பொருள்களும் ஒரு மளிகை கடை அல்லது டிபார்ட்மெண்ட் கடையில் வாங்குகிறிர்களா அங்கு நீங்கள் பரிமாறும் முக்கிய சாதனம் பணம் ஆகும். உங்கள் அறிவியல் கண்டுபிடிப்பினை மார்கெட்டிங் செய்ய வணிகவியல் துறையால் மட்டுமே உதவ முடியும். நாம் எந்த துறையில் பணியாற்றினாலும் நமக்கு கிடைக்கும் வெகுமானம் பணம் ஆகும். அப்பணத்தை சேகரிக்கும் தளம் வணிகவியலின் அங்கமான வங்கியாகும் . ஆகவே மாணவர்களுகென்று ஒரு அடிப்படை விளக்கம் கிடைத்ததென்று நம்புகிறோம் .

வணிகவியல் துறை சார்ந்த படிப்பு பிரிவுகள்

பேச்சுலர் ஆஃப் பிஸ்னஸ் அட்மினிஸ்டேரசன் :

மூன்று வருடம் படிப்பு கொண்டது பிபிஏ கோர்ஸ் இது வணிகவியல் சாரம்சத்திற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு பாடப்பிரிவாகும். வணிகவியலின் பல்வேறு பிரிவுகளையும் கொண்டு விளக்கும் பாடப்பிரிவாகும். மாணவர்கள் முழுவதுமாக அறிந்துகொள்ள இயலும் துறையாகும். மேலும் இந்த துறையில் மேல்ப்படிப்புக்கு எம்காம் ஃபினான்ஸ் மற்றும் எம்பிஏ ஃபினான்ஸ் தேர்ந்தெடுக்கலாம் இது சிறப்பு துறையாக இருப்பதுடன் உங்களை மெருகேற்றும் மாணவர்களே .

சார்டடு அக்கவுண்டு புரெபஸனல் கோர்ஸ் :

சார்டடு அக்கவுண்டு துறையானது சிறப்பு வாயந்த துறையாகும் . இது அனைத்து வணிகம் சார்ந்த நிறுவனங்களை தன்னகத்தே கொண்டன .
இது அனைத்து வணிகம் சார்ந்த நிறுவங்களையும் அவற்றின் நிதிசார் நடவடிக்கைகளையும் நிர்வகிக்கும். மேலும் இது வணிக நிறுவனங்களின் இரகசிய காப்பகமாக இருக்கின்றன. இது அனைத்து நிறுவனங்களின் துணைவனாக இயங்கும். த இன்ஸ்டியூட் ஆப் கம்பெனி சீக்ரெட் ஆஃப் இண்டியா நடத்திகின்றது . பனிரெண்டாம் வகுப்பு முடித்து இப்படிப்பில் இணையலாம் .

சிஎஸ் கம்பெனி சீக்ரெட்ஸ் :

சிஎஸ் என அழைக்கப்படும் கம்பெனி சீக்ரெட்ஸ் ஆஃப் இண்டியா வழங்கும் சிஎஸ் படிப்பானது சிஏ வை போன்று இதுவும் புரெஃப்ஸனல் கோர்சில் அடங்கும் ஒன்றாகும். பனிரெண்டாம் வகுப்பு முடித்து இப்படிப்பினை தேர்வு செய்யலாம் .

காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் :

பனிரெண்டாம் வகுப்பு முடித்து நீங்கள் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் பர்சனல் ஃபினான்ஸ் ,வெல்த் மேனேஜ்மெண்ட் துறையில் விருப்பமா வாருங்கள் இத்தகைய துறை உதவிகரமாக இருக்கும். தி   இன்ஸ்ட்டியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுண்டண்ட் இதனை நடத்துகின்றது. கம்பெனி அக்கவுண்ட்ஸ்களை மேலாண்மை செய்வது இதன் பணியாகும். மேலாண்மை சார்ந்த நிறுவனங்களின் தேவையை இது பூர்த்தி செய்யும் . மேலாண்மை நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெறலாம் .

சர்டிஃபிகேட்  இன் ஃபினான்சியல் ப்ளேனர் :

ஃபினான்சியல் ஸ்டேண்டடு போர்டு ஆஃப் இண்டியா அமைப்பு மட்டுமே இதற்கு அங்கிகாரம் வழங்கும் . டேக்ஸ், பிளானிங்,இன்ஸுரன்ஸ் போன்றவற்றிற்கு இத்துறை உதவும். நிதி சம்மந்தமான அனைத்து நடவடிக்கைகளை அறிய விருப்பமா அப்படியெனில் உங்களுக்கான நிதிசார் உலகத்தில் நல்ல வரவேற்பு இருக்கின்றன .

பேச்சுலர் ஆஃப் லா எல்எல்பி :

நிறுவனங்களில் சட்டம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு தேவை அதிகமாக இருக்கின்றன. பனிரெண்டாம் வகுப்பு முடித்து நேரடியாக ஐந்து வருடம் சட்டம் பயிலலாம். பிஏ முடித்து எல்எல்பி, பிபிஏ எல்எல்பி, பிகாம் எல்எல்பி படிக்க்லாம். ஆல் இந்தியா பார் கவுன்சில் தேர்வு நடத்தப்படும் இத்தேர்வில் பங்கேற்று எழுத வேண்டும் பின் பிசிஐ சான்றிதல் அளிக்கும்.

மேலும் போட்டிதேர்வு எழுதுவோர்க்கு இத்துறை உதவிகரமாக இருக்கும். பெரிய நிறுவனங்களுக்கு தேவையான துறைகளில்    வணிகவியல் துறை முக்கியமான ஒன்றாகும் .


English summary
here article tell about commerce course for 12th finished students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia