பத்தாம் வகுப்புக்குப்பின் அடுத்தது என்ன !!!

Posted By:


" போகும் பாதை வெகுதூரமில்லை தொடர்ந்து பயணிப்பதே வாழ்வின் கடமை ,,,, தொடர்வோம் பயணத்தை நல்ல தேடலுடன் "

பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்தாகிவிட்டது அடுத்தது என்ன படிக்கலாம் என்ற கேள்விகள் அனைத்து மாணக்கர்களுக்கும் இருக்கும். நமக்கு வாய்ப்புகள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன . ஆனால் அவற்றை தேர்வு செய்வதில் குழப்பங்கள் உள்ளன. பிள்ளைகளை என்ன படிக்க வைப்பது என்று ஆலோசனை வழங்க பெற்றோர்க்கும் அடுத்து என்ன படிக்கலாம் என்று தேடல் கொண்ட மாணவர்களுக்கான துறைவாரியான விளக்கங்களை ஒன் இந்தியா தொகுத்து வழங்குகின்றது. பத்தாம் வகுப்பு வரை நாம் அனைத்து பாடங்களையும் அடிப்படையாக கற்றோம் ஆனால் பத்தாம் வகுப்புக்குப்பின் எதிர்காலத்துறையை நிர்ணயம் செய்யும் படிப்பை நாம் தேர்வு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். பத்தாம் வகுப்புக்குப்பின் மாணவர்களுக்கான ஐந்து துறைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது அதன்கீழ் அனைத்து படிப்புக்களும் அடங்கும் .

பத்தாம் வகுப்புக்குப்பின் மாணவர்களுக்கான ஐந்து துறைகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

1 அறிவியல் படிப்புக்களுக்கான கணிதம் / உயிரியல் / கணிப்பொறியியல் /உயிர் கணிதம் (பயோ மேத் )

2 வணிகவியல் துறைகள்

3 கலைத்துறைகள் , மனித வளம் சார்ந்த துறைகள் .

4 டிப்ளமோ என அழைக்கப்படும் சான்றிதழ் படிப்புக்கள் .

5 அரசு துறை வாய்ப்புக்கள்

மேற்கண்ட துறைகள் ஒவ்வொன்றின் கீழ் பல துறைப் படிப்புகள் உள்ளடங்கியுள்ளன . அவற்றை சரியாகத் தெரிவு செய்து மாணவர்கள் தங்களது எதிர்காலத்திற்கு வளம்சேர்க்கும் துறையை முடிவு செய்யலாம் .

அறிவியல் படிப்புக்களான கணிதம் / உயிரியல் / கணிப்பொறியியல் /உயிர் கணிதம் (பயோ மேத் ) போன்ற துறைகள் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், உயிரியல் துறை வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கணிதவியல் வல்லுநர்களை உருவாக்குகின்றன .

வணிகவியல்துறை உலகின் மிகுந்த செல்வாக்கு கொண்ட துறையாகும் . வணிகவியல் துறை பல சிறு குறு பெரிய மற்றும் உலக அளவில் சிறந்து விளங்குகின்றன . வணிகவியல் துறையானது வணிகத்துறைப்பயின்ற பலரும் தொழிலதிபர்கள், அக்கவுண்டண்ட் என அழைக்கப்படும் கணக்காளர் வணிக மேலாளர்கள், அலுவலக நிர்வாகிகளை உருவாக்குகின்றன. மேலும் வியாபார உற்பத்தி, அலுவலக மேலாண்மை இல்லாத துறை காண்பது அரிதாகும் . சிஏ என்னும் சார்டடு அக்கவுண்டர்கள் இல்லாத துறை உலகில் இல்லையென்றே கூறலாம் .

கலைத்துறையானது பொருளாதார வல்லுநர்கள், புவியியலாளகள் வழக்கறிஞர்கள், சட்டவல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் மொழிவல்லுநர்கள் ,வரலாற்று ஆய்வாளர்கள், ஆசிரியர்கள். நுண்கலை வல்லுநர்களை உருவாக்குகின்றன. மேலும் மனித வளம் சார்ந்த சமுகவியல், அறிவியல் ,தத்துவவியல், உளவியியல், அரசியல், பத்திரிக்கை துறை போன்ற துறைகளை உள்ளடக்கியுள்ளது .

டிப்ளமோ என்ற சான்றிதழ் படிப்புகள் இன்றைய கட்டத்தில் சிறந்து விளங்குகின்றன. கார்மென்ட்ஸ், எந்திரவியல், அழகியல். பொறியல் துறைசார்ந்த அனைத்து துறைகளும் சான்றிதழ் படிப்புகளாக கிடைக்கின்றன . இந்த துறையானது செயல்முறை பயிற்சிகொண்டது மிகுந்த நலம் பயக்கும் துறையாகும் .

மத்திய அரசின் ஐடிஐ. ஐடிசி போன்ற படிப்புகள் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி வழங்குகின்றன, பிளம்பர், எலக்ட்ரீசியன், வெல்டர் ,போன்றவர்களையும் உருவாக்குகின்றது. இந்திய இராணுவம் ,கடற்படை,, வான்படை , மத்திய அரசின் ஸ்டாஃப் செல்க்ஸன் கமிசன் என அழைக்கப்படும் (எஸ் எஸ் சி ), இரயில்வே பணிவாய்ப்புக்கள் இவ்வாறு பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கென எண்ணற்ற வாய்ப்புக்கள் உள்ளன . என்ன மாணவர்களே மகிழ்ச்சியா !!!! ,,,, தொடருங்கள் வாழ்த்துகள்.

English summary
this article tell us about career after tenth standard

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia