பத்தாம் வகுப்பு முடிவு அடுத்தது அறிவியலா

Posted By:


" போகும் பாதை வெகுதூரமில்லை தொடர்ந்து பயணிப்பதே வாழ்வின் கடமை ,,,, தொடர்வோம் பயணத்தை நல்ல தேடலுடன் "


அறிவியல் துறைகள் பல அளவுகளையும், காரண காரியங்களையும் ஆய்வு கண்டுபிடிப்புகளை கொண்டுள்ள துறையாகும். இத்துறையில் ஆர்வம்   கொண்டுள்ள மாணவர்கள் பிரகாசிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அறிவியல்துறையில் ஆர்வம்   கொண்டுள்ள மாணவர்கள் பிரகாசிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

 

அறிவியல் படிப்புக்களான கணிதம் / உயிரியல் / கணிப்பொறியியல் /உயிர் கணிதம் (பயோ மேத் ) :

 


பத்தாம் வகுப்பு முடித்து தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மருத்துவ பயிலும் கனவு கொண்டவர்கள், கணிபொறியாளர்கள் மற்றும் வேளாண் வல்லுநர்களாக அறிவியல் படிப்புகள் உதவிகரமாக இருக்கும். மேலும் இயற்பியல் படிப்புக்கள் ஏரோநெட்டிகள் பயில எளிதாக இருக்கும் . அத்துடன் எந்திரம் சார்ந்த மெக்கனிக்கல் பொறியாளர்களை இத்துறையானது உருவாக்குகின்றன. உயிரியல் பயிலும் மாணக்கர்கள் தேவை லேப் சார்ந்த துறைகளில் அதிகரித்து காணப்படுகின்றன .நானோ சார்ந்த நுண்ணறிவியல் துறைகள் ஆதிக்கம் வளர்ந்து வருகின்றன . இவ்வாறு பல்வேறு துறைகளுக்கு அறிவியல் படிப்புகள் அடிப்படையாக அமைகின்றன . மேலும் அறிவியல் பயின்ற மாணவர்கள் தங்கள் துறையை மாற்றி கலைத்துறைக்கும் கொண்டு செல்ல இயலும் . 

 

அறிவியல் துறை வல்லுந்ரகள் :

கட்டடப் பொறியாளர், எந்திர பொறியாளர், மின் பொறியாளர் ,கணிபொறியாளர், தொலைதொடர்புபொறியாளர், மருத்துவர், மருத்துவ துறைவல்லுநர்கள், வேளாண் பொரியாளர்கள், ஆட்டோ மொபைல மற்றும் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த துறைகள் என பெரும்பாலான துறைகள் பறந்து விரிந்து காணப்படுகின்றன. ஆய்வு சம்மந்தப்பட்ட பெரும்பாலான துறைகள் அறிவியல் பிண்ணனி கொண்டவை என்பதை அறிய வேண்டியது அவசியம் ஆகும். அறிவியல் துறையானது மிகுந்த வல்லமை படைத்த துறையாக இருப்பதுடன் ஆக்கபூர்வமான துறை என்பது நாம் அறிந்ததே. ஆதலால் அறிவியல்த்துறைப்பற்றிய ஐயம் என்றும் தேவையற்றது. என்ன மாணவர்களே தற்பொழுது அறிவியல் விருப்பம் கொண்ட உங்கள் கனவுக்கு ஒரு முன்னுரை கிடைத்ததா வாழ்த்துகள் !!! தொடர்ந்து பயணியுங்கள் எதிர்காலம் உங்கள் கையில் என்றும் மறவாதீர் .

English summary
above article mentioned about science career opportunity for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia