சான்றிதழ் படிப்புகளான டிப்ளமோ படிங்க உங்க எதிர்காலத்தை வளமாக்குங்க

Posted By:

" போகும் பாதை வெகுதூரமில்லை தொடர்ந்து பயணிப்பதே வாழ்வின் கடமை ,,,, தொடர்வோம் பயணத்தை நல்ல தேடலுடன் "


பத்தாம் வகுப்பு முடித்தாகிவிட்டது இனிமேல் இரண்டு வருடம் பள்ளி செல்ல விருப்பமில்லை ஆனால் படிக்க விருப்பமுண்டு வேலைக்கு செல்ல விருப்பமுண்டு என்ற எண்ணம் கொண்ட மாணவர்களா நீங்கள்!! உங்களுக்காகவே எக்கசக்க சான்றிதழ் படிப்புகள் உள்ளன . சான்றிதழ் படிப்புகளான டிப்ளமோ இரண்டு வருடம் பயிலவேண்டும் . இது செயல் முறை பாடங்களுடன் கல்லுரி மாதிரி செயல்படும் .
டிப்ளமோ படிப்பவர்கள் நேரடியாக பொறியியலில் இரண்டு ஆண்டுகள் முடித்த கல்லுரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களுடன் இணைந்து பயிலலாம் மற்றும் நேரடி வேலை வாய்ப்பு பெறலாம் அல்லது தொழில் தொடங்கலாம் .

இந்தியாவில் இருப்பதேழு வகையான சான்றிதழ் படிப்புகள் உள்ளன

இந்தியாவில் இருப்பதேழு வகையான சான்றிதழ் படிப்புகள் உள்ளன மேலும் பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. படிப்புகாலங்களும் மாற்றம் பெற்று வருகின்றன மெக்கானிக்கல், சிவில் தொடங்கி நகை, சில்லரை வியாபாரம், மனிதஉரிமைகள், ஊரகவளர்ச்சி, பயணங்கள் மற்றும் சுற்றுலா, பைபிங் இன்ஜினியரிங், பார்மா, ரேடியாலஜி ,தாய்சேய் நலத்திட்டம், அரசுசார தொண்டு நிறுவன மேலாண்மை, அலுவலக மேலாண்மை , மோட்டார் சைக்கிள் பராமரித்தல், பழுதுப்பார்த்தல் போன்று பல்வேறு துறைகள் சான்றிதழ் படிப்பு மாணவர்களுக்காக பரந்து விரிந்து காணப்படுகின்றன .

இந்தியாவில் இருப்பதேழு வகையான சான்றிதழ் படிப்புகள் உள்ளன

எந்த காரியத்தையும் தொடங்குவது உற்சாகத்தோட செய்கிறவன் தன் நோக்கத்தை தவறுவது அபூர்வம்.
 மாணவர்களே, ஆர்வமுடன் இதனை கற்றுகொள்ள தயாராகுங்கள்,, சான்றிதழ் படிப்புகள் ஆக்கபூர்வமான படிப்பு என்பதில் எந்த மாற்று கருதுமில்லை. வளமான எதிர்காலம் உங்களை நோக்கியுள்ளது . வாழ்த்துக்கள் ....

English summary
above article tell about diploma courses for tenth finished students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia