கலை மற்றும் மனிதவளம் சார்ந்த துறைகள் தேர்ந்தெடுக்கும் எண்ணம் கொண்ட மாணவர்களே !!!

Posted By:


" போகும் பாதை வெகுதூரமில்லை தொடர்ந்து பயணிப்பதே வாழ்வின் கடமை ,,,, தொடர்வோம் பயணத்தை நல்ல தேடலுடன் "

கலைத்துறை பாடம் நாட்டின் முக்கிய பொருப்புகளை தன்னகத்தே கொண்டது .கலைத்துறை பல நுணுக்கங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொருதுறையும் கலையின் அடிப்படை அலகே ஆகும்.
பத்தம் வகுப்பு முடித்து கலை மற்றும் மனிதவளம் சார்ந்த துறைகள் தேர்ந்தெடுக்கும் எண்ணம் கொண்ட மாணவர்களே!!! உங்களுக்கான பாடங்களாக வரலாறு, பொருளாதாரம், புவியியல், கணிபொறியியல், கணக்கியல் அமையும். வரலாறு பொருளாதாரம் பாடங்கள் நன்றாக படித்தால் போட்டிதேர்வு அனைத்திலும் மிளிர முடியும்.

கலை மற்றும் மனிதவளப் பாடப்பிரிவுகள்

பொருளாதாரம் படித்தால் முன்னால் பிரதமர் திரு.மன்மோகன்சிங் போன்று பொருளாதார வல்லுநராக முடியும் மற்றும் அத்துடன் ஆசிரியாரக முடியும் . மேலும் வீடு முதல் நாடு வரை சிறப்பாக திட்டமிட்டு முறையாக செயல்பட முடியும் .
கலை மற்றும் மனிதவளப் பாடப்பிரிவுகள்

புவியியல் படிக்கும் மாணவர்கள் புவியலாளர்களாக ஆகலாம் , வானவியல் அறிஞ்ர் ஆகலாம். புவியியல் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்களாக ஆகலாம் .மேலும் கணிபொறியியலில்  அடிப்படை அறிவினை பெறலாம் இதன் மூலம் அனைத்து துறைகளிலும் தடம் பதிக்கலாம். இத்துடன் மனித வளப்பாடங்களான சமுகஅறிவியல்ப டிப்புகள், மனையியல் படிப்புகள் உங்களை சமுக ஆர்வலராகவோ, சமையல் கலை, பியூட்டிசனாகவோ, பத்திரிகைத்துறை,  தத்துவயியல், அரசியல் துறை, பண்ப்பாட்டு கலை, போன்ற துறைகளில் மிளிரச் செய்யும். கலைத்துறை மாணவர்கள் சட்ட வல்லுநராகவும், வழக்கறிஞர்கள் ஆகலாம் மேலும் நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகவும் பணிபுரிய இயலும் .
கலை மற்றும் மனிதவளப் பாடப்பிரிவுகள்

கலைத்துறை பயிலும் மாணவர்கள் பொதுவாகவே மேற்கூரிய அனைத்து பாடங்களிலும் அடிப்படை அறிவு பெற்றவராக இருப்பர் இவர்களால் எளிதாக எதையும் கலை நயத்துடன் சிந்திக்க முடியும் இவர்களே பின்னாளில் அரசியல் தலைவர்கள், மற்றும் ஆலோசகர்கள், சினிமாத்துறை தலைவர்களாக வரவாய்ப்புள்ளது. மாணவச் செல்வங்களே!,, கலைத்துறைக்கு ரெடியா வாங்க, வாங்க,,ஆர்ட்ஸ் படிக்கலாம் "வாழ்த்துகள்,,,,

English summary
here above article mentioned about arts features for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia