இக்னோ பல்கலை.யில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு..!!

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ பல்கலைக்கழகம்) ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 20-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் திறந்தநிலை பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தொலைதூரக் கல்வி திட்டத்தின் ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 20-ம் தேதி

இக்னோ பல்கலை.யில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு..!!

வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர்
https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி வருகிற 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இக்னோ பல்கலைக்கழகத்தின் பிஏ, பிகாம் பிஎஸ்சி படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளளாம்.

மேலும் சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The deadline for admission for the courses in in IGNOU has been extended by the Indira Gandhi National Open University (IGNOU). For more details please login into www.ignou.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+