இளம் தொழில் நிபுணர்களுக்கான 9 பேஸ்புக் குரூப்!

By Kani

பேஸ்புக்கில் உள்ள பயனுள்ள வசதிகளில் ஒன்று பேஸ்புக் குரூப் வசதி. இந்த வசதியின் மூலம் நண்பர்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்.

இதைப் பயன்படுத்தி கல்லூரி மாணவர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை பலரும் பல்வேறு குரூப்பில் இணைந்து தங்களது அனுபவம், கருத்துக்களை பகிர்ந்து வருவதோடு, இதன் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள், தொழில் யுக்திகளை எளிதாக கற்றுக்கொண்டும், பயிற்றுவித்தும் வருகின்றனர்.

இளம் தொழில் நிபுணர்களுக்கான  9 பேஸ்புக் குரூப்!

 

இதில் இணைவதின் பயன் என்னவென்றால் நாளடைவில் நீங்கள் குறிப்பிட்ட பேஸ்புக் குரூப்பில் சென்று அப்டேட்களை பார்க்க முடியாவிட்டாலும் கூட உங்களது டைம் லைனில் குழுவின் அப்டேட்ஸ் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இதனால் சில முக்கிய அப்டேட்ஸ்களும் தவற விட்டு விடுவோமே என்ற பயம் வேண்டவே, வேண்டாம். அந்தவகையில் தொழில் தொடங்குபவர்களின் பிரச்னையை நீக்க, ஊக்கமளிக்க, உதவி புரிய பல்வேறு வகையான குழுக்கள் இயங்கி வருகிறது. இதில் நாம் முக்கியமாக பங்குபெற வேண்டிய 9 குரூப்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

1. TEAM OF ONE BIZ OWNERS

நீங்கள் ஒரு பல் மருத்துவராகவே, யோகா நிபுணர், பிளாக்கர், விநியோகிஸ்தர், தொழில் முனைவோர் என யாராக வேண்டுமானலும் இருக்கலாம்.

இதில் உங்கள் தொழிலை ஊக்குவிக்க உதவும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் டிப்ஸ், வெப்சைட் டிராஃபிக்கை எவ்வாறு அதிகரிப்பது, பொருளின் விற்பனையை அதிகப்படுத்துவது போன்ற பல்வேறு விதமான விஷயங்களை எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.

2. MARKETING SOLVED

கேத்ரீன் சல்லிவன் என்பவர் தனது ஃபேஸ்புக் குழுவை வணிக உரிமையாளர்களுடன் இணைத்து, மார்க்கெட்டிங் ரகசியங்களைக் கற்றுக்கொள்ளும் ஒரு இடமாக மாற்றியுள்ளார்.

இதன் உறுப்பினர்களுக்கு தங்களது தொழிலை மேம்படுத்துவது, வணிக பொருட்களை விளம்பரப்படுத்துவது போன்ற செயல்களை ஊக்குவிப்பதோடு, சிறந்த மார்க்கெட்டிங் குறிப்புகள் குறித்த தந்திரங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது.

புதிதாக தொழில் தொடங்கியவர்கள் அல்லது தனது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புபவர்கள் இந்தக் குழுவில் இணைவதின் மூலம் பயனடையலாம்.

 

3. THE SMART PASSIVE INCOME COMMUNITY

பாட் ஃப்ளைன் என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் தனது வேலையை விட்டு விட்டு, ஆன்லைன் மூலமாக வருமானம் ஈட்டுவது குறித்து கற்பித்து வருகிறார். ஆன்லைனில் விற்பனையாளர்களால் நன்கு அறியப்பட்ட நபரும் கூட.

இந்தக் குழுவில் ஆன்லைன் வர்த்தகம் குறித்த வணிக ஆலோசனை, பரிந்துரைகள், டிரிக்ஸ், டிப்ஸ் என பல்வேறு விதமான விஷயங்களை எளிதாக கற்றுக்கொள்ளலாம்.

4. INFLUENCER ENTREPRENEURS

ஜெனி மெல்ரோஸ் என்பவரால் இந்தக்குழு இயக்கப்பட்டு வருகிறது. இந்தகுழுவின் நோக்கம், பிளாக்கிங் ஆரம்பிப்பது, எப்படி? புதிய தொழில் தொடங்குவது எப்படி? இது தொடர்பாக எவ்வாறு புதிய முயற்சிகள் மேற்கொள்வது குறித்த புத்திசாலித்தனமான தகவல்களை பகிர்வது.

நம்முடைய பிராண்டுகளை எவ்வாறு அறிமுகப்படுத்துவது, பிராண்ட் ஸ்பான்சர்ஷிப் பெறுவது எப்படி போன்ற அனைத்து சூட்சமங்களையும் லைவ்வாக கேள்வி பதில் மூலம் ஜெனி கற்றுக் கொடுக்கிறார்.

இதில் குழு உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளில் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.

5. BLOGGING NEWBS

பெயரில் குறிப்பிட்டது போல், இந்த குழு புதிதாக பிளாக்கிங் ஆரம்பித்தவர்களுக்கானது. தொழில்நுட்ப திறமையில் பல்வேறு படி நிலையில் உள்ள 15,000-க்கும் மேற்பட்ட பிளாக்கர்ஸ் இக்குழுவில் உள்ளனர்.

பிளாக்கர்ஸ்களுக்கான அடிப்படை கேள்விகளுக்கு விதவிதமான விடைகள் கிடைக்கும் ஒரே இடம். எனக்கும் மிகவும் பிடித்த இடம். குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வதுடன் உங்களது கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிப்பார்கள்.

பிளாக்கிங் பயணத்தை ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு இந்தக்குழு மிகவும் பயனுள்ள குழுவாகும்.

6. SOCIAL BOSS

கைட்லி பேச்சர் என்பவரால் இயக்கப்படும் இந்தக் குழு லாபகரமான முறையில் ஒரு பேஸ்புக் குழுவை எப்படி இயக்குவது என்பதை கற்பிக்கின்றது.

அன்றாட செயல்களின் ஊடே ஒரு பேஸ்புக் குழுவை இயக்கி திறமையாக எவ்வாறு வருமானம் ஈட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகையான சூட்சுமங்களை கற்றுக்கொடுக்கிறது.

7. WORK WITH CLASS

எலிமா மேடன் என்பவரால் நிர்வாகிக்கப்படும் இந்தக் குழு ஆன்லைன் தொழில் முனைவோர்களுக்கானது. சிறு உரிமையாளர்களில் இருந்து பல்வேறு தரப்பினரும் இந்தக் குழுவில் ஆக்கப்பூர்வமான பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.

இந்த குழுவானது குறிப்பாக விற்பனை மற்றும் வணிக தந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பதில் முழு கவனம் செலுத்துகிறது. நீங்கள் ஒரு வியாபாரத்தை தொழில் முனைவர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்க விரும்பினால் இந்த குழுவில் இணையலாம்.

8. CREATIVE SUPERHEROES

உங்கள் படைப்பாற்றலை ஜாலியாக வெளிப்படுத்தும் பயனுள்ள ஒரு இடத்தை தேடுகிறீர்கள் என்றால் அதற்கான விடை இந்தக் குழுவாகதான் இருக்கும்.

நகைச்சுவையான கருத்துக்களுடன் வணிக உரிமையாளர்களுடன் இணைந்து புதிதாக கற்க, விற்க விரும்பினால் இந்த குழு உங்களுக்கு ஏற்ற இடம்.

9. THE BLOGGING CREW

பிளாக்கிங் க்ரூவ் பிளாக்கர்களுக்கான மற்றொரு சிறப்பான குழு. பிளாக்கிங் தொடர்பான பல்வேறு விதமான விஷயங்களை இங்கு கற்றுக்கொள்ள முடியும்.

பிளாக்கர்கள் தங்களது இணைய இணைப்புகளை பகிர்ந்து கொள்ள பல்வேறு வகையான பேஸ்புக் குழுக்களை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானவை ஸ்பேம், என சுட்டிக் காட்டப்படுவதால் பலருக்கும் இதை எவ்வாறு சரிசெய்வது என்ற குழப்பம் உண்டு.

இந்த வகையான குழப்பத்திற்கு சரியான ஒரு தீர்வை இந்தக்குழுவில் பெறலாம்.

உங்க "லிங்கிடு இன்"ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
9 Facebook Groups You Need to Join Now to Grow Your Business
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more