அடேங்கப்பா...தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சம் விண்ணப்பம்...!

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் இதுவரை சேர்வதற்கு இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பது அடேங்கப்பா என்று கல்வியாளர்களை கூற வைத்துள்ளது. மேலும், அதுபோலவே தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் படிப்புகளில் சேர இதுவரை ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக்த தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. தமிழகத்தில் 160-க்கும் மேற்பட்ட அரசு, கலை, அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றை கல்லூரி கல்வி இயக்குநரகம் நிர்வகித்து வருகிறது.

தமிழக அரசின் உயர்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிர்வாக நடவடிக்கைகளை கல்லூரிக் கல்வி இயக்குநரகமே மேற்கொண்டு வருகிறது. இதுதவிர, தனியார் கலை,அறிவியல் கல்லூரிகளும் இந்த இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றன.
இந்தக் கல்லூரிக் கல்வி இயக்குநராக ஈஸ்வரமூர்த்தி கடந்த 2022-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவர் ஓய்வுபெற்ற நிலையில், திருவாரூர் திருவிக அரசு கல்லூரியின் முதல்வர் ஜி.கீதா, கூடுதல் பொறுப்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் பதவியை கவனித்து வந்தார்.

அடேங்கப்பா...தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சம் விண்ணப்பம்...!

இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.கார்மேகத்தை, கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் கல்லூரிக் கல்வி இயக்குநராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரே தற்போது கல்லூரி கல்வி இயக்குநரக பொறுப்புகளை சிறப்புற கவனித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 448 மாணவ, மாணவிகள் தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் இதில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 815 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அதேபோல், தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங்ல் படிப்புகளில் சேர நேற்று மாலை 6 மணி வரை, ஒரு லட்சத்தை 62 ஆயிரத்து 486 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதில் ஒரு லட்சத்து10 ஆயிரத்து 314 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், 71 ஆயிரத்து 516 பேர் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இத்தகவலை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamil Nadu government started issuing application forms for arts and science colleges from May. According to a press release issued by the state government, on May 18, over 2,00,000 students applied for various courses at colleges across Tamil Nadu.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+