மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள காண்ஸ்டபில், தலைமைக் காவலர், உதவி இணைக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 789 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி, டிப்ளமோ, பி.எஸ்சி உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : இந்தியா முழுவதும்
மொத்த காலிப் பணியிடங்கள் : 789
பணி விபரம் : Constable, Head Constable, Assistant Sub Inspector, Inspector
கல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, பி.எஸ்சி உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
ஊதியம் :
- காவலர் - ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில்
- உதவிக் காவலர் - ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
- உதவி இணைக் காவலர் - ரூ.29,200 முதல் ரூ.92,300 வரையில்
- தலைமைக் காவலர் - ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்
- கான்ஸ்டபில் - ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.crpf.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : DIGP, Group Centre, CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor, District-Bhopal, M.P.-462045.
முக்கிய தேதிகள்:
- அறிவிப்பு வெளியான நாள் - 20.07.2020
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 31.08.2020
- தேர்வு தேதி - 20.12.2020
தேர்வு முறை : PST/ Skill/Trade Test/ PET/Medical Exam/Written Exam மூலம் தேர்வு செய்யப்படுவர்
பணி முக்கிய விபரங்கள்:
CRPF வெளியிட்டுள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20.07.2020 மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.08.2020 ஆகும். இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












