மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள அப்பர் டிவிசன் கிளார்க், சுருக்கெழுத்தர் தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஸ்டெனோகிராபர்
காலிப் பணியிடங்கள் : 20
பணியிடம் : சென்னை
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி : அப்பர் டிவிசன் கிளார்க்
காலிப் பணியிடங்கள் : 131
பணியிடம் : சென்னை
கல்வித் தகுதி : 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
ஊதியம் : ரூ. 25,500
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.04.2019
விண்ணப்பிக்கும் முறை : https://ibpsonline.ibps.in/esicsucmar19/ என்னும் இணையதள முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் பவடித்தினைப் பெறவும் https://www.esic.nic.in/attachments/recruitmentfile/2d9f0930a584f356fc8a258ae034e57c.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












