ரெஸ்யூமில் இந்த 10 பார்முலா பக்காவா இருந்தா... உடனே வேலை!

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவரது ரெஸ்யூமை வைத்தே எளிதாக அவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

By Kani

பொதுவாக இன்டெர்வியூ செல்லும் இளைஞர்கள் காலையில் கண்விழித்த உடன், இணையதளத்தில் உள்ள டெம்லேட்களில் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒன்றை பார்த்து டவுன்லேட் செய்து லைட்டா பட்டி டிங்கரிங் மட்டும் பார்த்து விண்ணப்பிப்பதுதான் உலக வழக்கம்.

இன்னும் சிலர் நண்பர்களிடம் ஒரு காப்பி பெற்று அதில் அப்படியே பெயரை மட்டும் மாற்றி அப்ளை செய்வார்கள்.

ரெஸ்யூமில் இந்த 10  பார்முலா பக்காவா இருந்தா...  உடனே வேலை!

எந்த வேலைக்கு எந்த அம்சம் தேவை, தேவையில்லை என்பது பெருவாரியான இளைஞர்களுக்கு தெரிந்தாலும், அதை ரெஸ்யூமில் குறிப்பிடுவதில் சில நேரம் மறந்துவிடுவோம். அந்த வகையில் உங்களுக்கான சில தகவல்கள்.

  • முதலில் டெம்லேட் எனப்படும் ரெடிமேட் ரெஸ்யூம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். உங்களுக்கு ஒன்றுமே தெரியாது அல்லது பள்ளி முடித்து முதல் முறையாக பணிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் ஓகே. இல்லை என்றால் சொந்தமாக ரெஸ்யூமை வடிவமைப்பது நன்று.
  • இதில் முக்கியமாக நம் அடிக்கடி பயன்படுத்தும் மற்றும் எளிதாக புரியும் படியான ஃபான்ட்களை பயன்படுத்துவது பயன் அளிக்கும்.
  • உங்களுடைய தனித்திறமைகள் தனித்தனியாக கண்ணில் படும்படி புட்டு புட்டு வைப்பது கூடுதல் பலம். இதை மெருகேற்ற சில அட்ராக்ட் கலர்ஸ் கொடுக்கலாம்.
  • என்ன வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களே அதைப்பற்றி எழுதுவது நல்லது. எக்ஸ்ட்ரா ஃபீல்ட் கொடுத்தாலும் விண்ணப்பிக்கும் வேலை சார்ந்த விஷயங்களை கொடுப்பது நலம்.
  • நம் விண்ணப்பிக்கும் துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை உபயோகிப்பது நலம் பயக்கும். இது நம்மை இயற்கையாகவே குறிப்பிட்ட வேலைக்கு தகுதியானவர்களாக காட்டும்.
  • உங்களை பற்றி விவரிக்கும் போது சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பொருள் எவ்வாறு விளம்பரப்படுத்தப்படுகிறதோ அதுபோல மிக சாமர்த்தியமாக உங்களைப் பற்றி எழுத கற்றுக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் குறிப்பிடும் தலைப்புகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான முறையில் கண்ணில் தெளிவாக படும்படி வடிவமைப்பது சிறப்பான முடிவைப் பெற்றுத்தரும்.
  • உங்களது முந்தைய நிறுவனம் உங்களால் அடைந்த நற்பலன்களையோ அல்லது விண்ணப்பிக்கும் நிறுவனத்தில் நீங்க செய்யப்போகும் செயல்களையோ ஹலைட் செய்து காட்ட மறக்காதீர்கள்.
  • உங்களுடைய வயதை ஹலைட் செய்வதற்கு மாறாக கல்வியை ஹலைட் செய்யலாம்.முக்கியமாக எந்த பணிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்தப்பணிக்கான படிப்பை மட்டும் குறிப்பிடுவது நலம்.
  • நீங்கள் ரெஸ்யூமை அழுகுபடுத்தவே, மெருகூட்டவே கொடுக்கும் அனைத்துவிதமான தகவல்களும் உங்களுடைய பணி அல்லது விண்ணப்பிக்கும் பணி சார்ந்தவையாக இருக்கட்டும்.
  • ஒரு முறை முழுமையாக முழுமையாக படித்து பார்த்து ஒன்றிற்கும் மேற்பட்ட வார்த்தைகள் திரும்ப திரும்ப பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில் அதை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10 Ways To Attract A Potential Employer With Your Resume
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+