இந்த மாதிரி வேலையெல்லாம் தெரிஞ்சா நீங்கதான் டாப்பு..!

எல்லோருக்குமே பணம் என்றால் கரும்பு சுவைப்பது போலதான். சிலருக்கு மட்டும் மற்றவர்களை கொஞ்சம் அதிகமாக சம்பாதித்தால் நல்லா இருக்கும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் மில்லியனராக சில தொழில்களின் பட்ட

By Kani

எல்லோருக்குமே பணம் என்றால் கரும்பு சுவைப்பது போலதான். சிலருக்கு மட்டும் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமாக சம்பாதித்தால் நல்லா இருக்கும் என்று விரும்புவார்கள்.

இந்த மாதிரி வேலையெல்லாம் தெரிஞ்சா நீங்கதான் டாப்பு..!

நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், உடனே உங்களுக்கான இலக்கை தேர்வு செய்யுங்கள். விரைவில் நீங்கள் ஒரு மில்லியனர் ஆக முடியும்.

1. நடிகர்:

1. நடிகர்:


திறமையும், இயக்கம் சரியான முறையில் அமைந்தால், நாளைக்கே நீங்களும் ஒரு வெற்றிகரமான நடிகர் ஆகலாம். உங்களை நீங்களே செல்வந்தர்களாக மாற்றிக்கொள்ளும் தொழில்களில் இதுவும் ஒன்று.

போட்டி, பொறமைகள் அதிகமாக இருந்தாலும், சரியான கதைகளை தேர்ந்தேடுத்து, திறமையை வெளிப்படுத்தும் போது குறுகிய காலத்தில் செல்வந்தராக முடியும்.

 

2. தடகள வீரர்:

2. தடகள வீரர்:


தடகள வீரராக கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, முறையான பயிற்சி போன்ற அம்சங்கள் தேவை. சரியான பயிற்சியும், முயற்சியும் இருந்தால் உண்மையிலேயே ஒரு செல்வாக்கான விளையாட்டு வீரனாக இந்த உலகையே ஒரு சுற்று சுற்றி வர முடியும்.

இதற்கான முயற்சிகளை சிறுவயதிலே எடுத்தால் ஒழிய பயன்தராது. பல ஆண்டுகள் கடின உழைப்பே ஒருநாள் சரித்திரத்தை மாற்றும் வித்தையாகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிரபலமான விளையாட்டு வீரர்கள் வருடத்திற்கு மில்லியன் டாலர்களை ஈட்டி வருகின்றனர்.

 

3. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்:

3. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்:


விமானங்களை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிநவீன கேஜெட்களைப் பயன்படுத்துவதில் அலாதியான பிரியம் கொண்டவரா நீங்கள் விமானப் போக்குவரத்து பிரிவில் பணியாற்றுவதின் மூலம் எளிதாக மில்லியனராக வலம் வர வாய்ப்புள்ளது.

திறமையான முறையில் ரேடார், வரைபடங்கள் மற்றும் பிற உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மிகப் பெரிய இழப்புக்களை ஏற்படுத்தும். சவலான வேலை அதே சமயம் அதிகமாக சம்பாதிக்க கூடிய துறையும் கூட.

 

4. ஆப் டிசைனர்:

4. ஆப் டிசைனர்:


பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் பிப்ரவரி 4, 2004 அன்று மார்க் ஜுக்கர்பெர்க், ஹார்வார்ட் கல்லூரி மாணவர்கள் மற்றும் ரூம் மேட்களுடன் துவங்கப்பட்டது.

ஜூலை 13, 2015 , பேஸ்புக் 250 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை பெற்றது. ஜூன் 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2 மில்லியனுக்கும் மேலான பயனர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

ஒரு தரமான ஆப் டிசைன் செய்வதற்கு பெரும்பான்மையான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மட்டும் போதுமானது. நீங்களும் கோடிஸ்வரர்தான்.

 

5. பிளாக்கர்:

5. பிளாக்கர்:


வெற்றிகரமான வலைப்பதிவராக சில நேரம் முதலீடை விட விடாமுயற்சி அதிகமாக தேவைப்படுகிறது. எஸ்சிஓ நுட்பங்கள், சமூக ஊடக விளம்பரங்களின் நாடித்துடிப்போடு, கிராபிக்ஸ் மற்றும் புகைப்படங்களை போன்ற தொழில் நுட்பங்களை அறிந்துள்ளவரா? ஒரு நிகழ்வை வாசகர்கள் விரும்பும் படி உங்களால் கொடுக்க முடியுமா? முடியும் என்றால் நீங்களும் ஒருநாள் கோடிகளில் குளிக்கும் வெற்றிகரமான பிளாக்கராகலாம்.

விட முயற்சியும், பயற்சியும் கூடவே தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம், வாசகர்களின் நாடித்துடிப்பை அறியும் திறமையும் அவசியம்.

 

6. பெரு நிறுவன வழக்கறிஞர்:

6. பெரு நிறுவன வழக்கறிஞர்:


வழக்கறிஞர்களில் இதுவும் ஒருவகையான வேலைவாய்ப்பு. சட்டப்படிப்பை முடித்த கையோடு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் பட்சத்தில் கணிசமான தொகையை ஆரம்ப கட்ட ஊதியமாக பெற முடியும்.

இது அனுபவத்தின் அடிப்படையில் அதிகரிப்பதோடு, மில்லியன் டாலரை சம்பாதிக்க நீண்ட காலம் எடுக்காது.

 

7. இன்ஸ்டாகிராம் பிரபலம்:

7. இன்ஸ்டாகிராம் பிரபலம்:


ஒரு கேமிராவும் எண்ணங்களும் மட்டும் போதும், மனதில் தோன்றும் பிரமிக்க வைக்கும் கற்பனைகளுக்கு உருவம் கொடுப்பதோடு, சுவரஷ்யமான விஷயங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருபவரா? நீங்களும் ஒருநாள் மில்லியனராக முடியும்.

புதியவையாக பதிவிடுவதோடு, ரசிகர்கள் விரும்பும் விஷயங்களை பதிவிடுவது உங்களை மிக விரைவிலே மில்லியனராக மாற்றும்.

 

8. மருத்துவர்:

8. மருத்துவர்:


மருத்துவத்துறையில் நிபுணத்துவம் பெரும்பட்சத்தில் உறுதியாக மில்லியனராக மாறலாம். நம்மிடம் வரும் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் சிறந்த தீர்வு வழங்கும் பட்சத்தில் மட்டுமே இது சாத்தியமாகும்.

வந்தது போதும் என வாரி சுருட்ட நினைத்தால், பொன்முட்டை இடும் வாத்தை கழுத்தை அறுப்பதற்கு சமம். ஒரே நேரத்தில் பணம், திருப்தி, மதிப்பு போன்றவைகளை வழங்கும் ஒரு பெருமை மிக்க துறையாகும். கடின உழைப்பு இருக்கும் பட்சத்தில் கோடிஸ்வரர் ஆவது சாத்தியமே.

 

9. பங்கு சந்தை நிபுணர்:

9. பங்கு சந்தை நிபுணர்:


ஸ்மார்ட்டான ஐடியா, திறமையான தொழிட்நுட்ப போக்கை கணிக்கும் திறன் இருந்தால் போதும் வெகு சீக்கிரம் உங்களால் மில்லியன் டாலர்களை ஈட்ட முடியும். ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்க பங்கு சந்தை வர்த்தகரின் பங்கு மிக முக்கியமானது.

உலகில் எந்த மூலையில் இருந்து வேண்டுமானலும் வேலை பார்க்க முடியும். ஒரு லேப்டாப் ,நெட் கனெக்ஷன் இருந்தால் மட்டும் போதுமானது. அடுத்த சில விநாடிகளில் நீங்களும் லட்சங்களுக்கு அதிபதிதான்.

 

10. யூ-ட்யூப்:

10. யூ-ட்யூப்:


இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று யூ-ட்யூப் தளத்தில் வீடியோக்களைப் பகிர்ந்து, விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. எந்த வகையான வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும்.

வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் ஆடியன்ஸ் என்று அழைக்கப்படக் கூடிய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பட்சத்தில் நீங்களும் ஒரு நாள் கோடிஸ்வரர்தான்.

 

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10 Careers that Will Make You a Millionaire
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+