கவுன்சிலிங் போறீங்களா? டாப் இன்ஜினீயரிங் காலேஜ் லிஸ்ட்!

பொறியியல் கவுன்சிலிங் செல்ல இருக்கும் மாணவர்களுக்காக தமிழ்நாட்டின் டாப் டென் கல்லூரிகளின் முழு பட்டியல் இதோ...

By Kani

பொறியியல் படிப்பு குறித்து பல்வேறுவிதமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 19 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் ஐஐடி சென்னை முதலிடத்தையும், அண்ணாப் பல்கலைக்கழகம் 8 வது இடத்தையும், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி 11 வது இடத்தையும், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 16 வது இடத்தையும் பெற்றுள்ளது.

கவுன்சிலிங் போறீங்களா? டாப் இன்ஜினீயரிங் காலேஜ் லிஸ்ட்!

பொறியியல் படிப்பில் நூற்றுக்கு பத்து சதவிகிதமே விரும்பி சேர்பவர்களாகவும், மற்றவர்கள் கவுரவத்திற்காகவும்., பெற்றவர்கள் மற்றும் உறவினர்களின் கட்டாயத்திற்காகவும் சேர்வதாக ஒரு சாரர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க பொறியியல் படிப்பு மீதான மோகமும் குறைந்தபாடில்லை. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 509 கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,78,129 இடங்களில் சேருவதற்கு 1,59,631 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர ஜெஇஇ (JEE) நுழைவுத் தேர்வும், குறிப்பிட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் சேர அந்தந்த பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வையும் எழுத வேண்டும்.

பொறியியல் கவுன்சிலிங் செல்ல இருக்கும் மாணவர்களுக்காக இதே அந்த கல்லூரிகளின் முழு பட்டியல் விபரம்.

கல்லூரிஅமைவிடம்ரேங்க்(nirf)
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிசென்னை01
அண்ணா பல்கலைக்கழகம்சென்னை08
சத்தியபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிகோயம்புத்தூர்37
எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிசென்னை46
வேல் டெக் ரங்கராஜன் டாக்டர். சகுந்தலா ஆர் & டி இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிசென்னை77
பி.எஸ் அப்துர் ரஹ்மான் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிசென்னை79
பி.எஸ்.ஜி. காலேஜ் ஆப் டெக்னாலஜிகோயம்புத்தூர்29
கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிகோயம்புத்தூர்62
கருண்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ்கோயம்புத்தூர்72
குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜிகோயம்புத்தூர்82
கவர்ன்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜிகோயம்புத்தூர்93
ஸ்ரீ சிவசுப்ரமணியா நாடார் பொறியியல் கல்லூரிகாஞ்சிபுரம்36
தியாகராஜர் பொறியியல் கல்லூரிமதுரை39
கொங்கு பொறியியல் கல்லூரிபெருந்துறை68
பன்னாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிசத்தியமங்கலம்76
கலசலிங்கம் அகாடமி ஆப் ரிசர்ச் அண்ட் ஹெயர் எஜிகேஷன்ஸ்ரீவில்லிபுத்தூர்96
ஷான்முகா ஆர்ட்ஸ் சயின்ஸ் டெக்னாலஜி அண்ட் ரிசர்ச் அகாடமிதஞ்சாவூர்33
தேசிய தொழில்நுட்ப நிறுவனம்திருச்சிராப்பள்ளி11
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வேலூர்16

ஜூலை 6-இல் பொறியியல் கவுன்சிலிங்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Top 10 Engineering Colleges In Tamilnadu
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X