ரூ.1000 தொடங்கி பல லட்சம் கோடி சொத்து.! நீங்களும் ஜெயிக்கலாம்.!

தோல்வியாளர்கள் அடுத்தவர்கள் வழிமுறைகளை நிராகரிப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். ஏனென்றால், அதனை ஏற்றுக்கொண்டால் அவர்களை விட நாம் தாழ்ந்தவராகி விடுவோம் என்ற தவறான எண்ணம்.

By Saba

ஒவ்வொருவரின் வாழ்விலும் வெற்றியடைவதை மட்டுமே மனதில் கொண்டு அன்றாடம் கடந்துகொண்டு இருப்போம். இங்கே அனைவருமே வெற்றியாளராக ஜொலிக்க வேண்டும் என்றுதான் விரும்புவோம். ஆனாலும் ஒரு சிலர் மட்டுமே இதில், வெற்றியாளராக முடிசூட்டுகின்றனர். காரணம், தோல்வியாளர்களிடமிருந்து, வெற்றியாளர்கள் சில விஷயங்களில் தனித்து நிற்பது தான்.

ரூ.1000 தொடங்கி பல லட்சம் கோடி சொத்து.! நீங்களும் ஜெயிக்கலாம்.!

தோல்வியாளர்கள் அடுத்தவர்கள் வழிமுறைகளை நிராகரிப்பதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால், வெற்றியாளர்கள் அடுத்தவர்களின் வழிமுறைகளை ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில் அதிலிருந்து அவர்கள் புதிதாக கற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள். இதில், சிறிதாக தொழில் துவங்கி இன்று பல லட்சம் கோடி ரூபாய் அதிபர்களின் அறிவுரையை கேட்போம் வாங்க.

லாரி பேஜ்

லாரி பேஜ்

கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி.

உங்களுக்கு என பெரிய இலக்குகளை நிர்ணயித்து செயல்படுங்கள். தோல்விகளுக்கு என்றும் பயப்படாதீர்கள். நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களை ஒழுங்குபடுத்தி அமையுங்கள். உங்கள் நிறுவனத்தில் எண்ணற்ற திட்டங்கள் இருக்கலாம் அவை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி கட்டமையுங்கள். லாபம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக உங்களுக்கு சிறந்த ஐடியாக்கள் இல்லாத துறையில் தொழிலை தொடங்காதீர்கள். உங்கள் திட்டத்தை நீண்ட காலத்திற்காக தீட்டுங்கள்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் என அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. இந்தியாவின் மிக பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட்டின் கூடுதல் பங்குகளை உடைய தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி (நிர்வாக இயக்குநர்).

புதிதாக தொழில் துவங்க நீங்கள் எண்ணினால் உங்களது பார்வையை விரிவுபடுத்துங்கள். தோல்வி குறித்து பயபடாதீர்கள். தொழில் முன்னேற்றம் குறித்து கனவு காணுங்கள். மன உறுதியுடைய உங்களுக்கான குழுக்களை உருவாக்குங்கள். ரிஸ்க் எடுப்பதிலிருந்து மிகச் சிறந்த பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள். வெற்றியின் மீது எப்போது ஆவல் கொண்டிருங்கள். எல்லோரையும் நம்புங்கள், ஆனால் யாரையும் சார்ந்திருக்காதீர்கள்.

மார்க் கியூபன்

மார்க் கியூபன்

மார்க் கியூபன் அமெரிக்க தொழில் அதிபர், முதலீட்டாளர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை கொண்டவர்.

உங்கள் திறமைகளை தெரிந்து வைத்துகொள்ளுங்கள். அந்த திறமைகளை உயர்த்துவதற்கு தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். நாம் செய்ய இருக்கும் விசயத்தின் மீது காதல் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். உங்கள் தொழில் எதிர்மறையாக செல்லும்பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் எண்ணம் இருந்தால் உங்கள் தொழிலின் மீது உங்களுக்கு காதல் இல்லை அர்த்தம். உங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்புபவர்களையே வேலைக்கு தேர்ந்தெடுங்கள். உங்கள் ஊழியர்களின் வேலையில் வேடிக்கை, பொழுதுபோக்கு போன்றவற்றை செயல்படுத்துங்கள்.

ஜாக் மா

ஜாக் மா

இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவர்.

உங்களிடம் உள்ள புறக்கணிப்பை பயன்படுத்துங்கள். உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள், எதிலும் குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை மட்டும் பாருங்கள். உங்களின் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் கூரினாலும் அதனை கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ளாதீர்கள். தொடர்ந்து உங்களுடைய எண்ணங்களை வளர்த்துக்கொள்ள கற்றுகொண்டே இருங்கள். ஒரு செயலில் ஈடுபட்டால் அதில் கவனத்தை குவியுங்கள். கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள். முதலில் வாடிக்கையாளர்கள்தான், இரண்டாவது ஊழியர்கள் , மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள் என நம்புங்கள்.

எலன் மஷ்க்

எலன் மஷ்க்

எலன் மஷ்க் PayPal நிறுவனத்தை தொடங்கியவர். Tesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. சோலார் சிட்டி நிறுவனத்தின் தலைவர், OpenAI நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆவார்.

நிறுவனத்திற்கு சிறந்த, திறமையான மனிதர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்துங்கள். நீங்கள் செய்வதை யார் குறை கூறினாலும் விரும்புங்கள். தோல்வியை விருப்பமானதாக ஆக்குங்கள். நீங்கள் தோல்வியடைய விருப்பமில்லையென்றால், புதுமையாக எதையும் படைக்க இயலாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் இளைஞராக இருக்கும்போதே துணிந்து செயல்படகூடிய சரியான தருணமாகும். வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள். இந்த உலகத்தில் உள்ளதை தாண்டி யோசியுங்கள்.

ஜெப் பெசாஸ்

ஜெப் பெசாஸ்

அமேசான் டாட் காம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர் இந்தக் குழுமத்தில் 71 விழுக்காடு பங்குகளை ஜெப் பெஸோஸ் கொண்டிருக்கிறார்.

நீங்கள் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் எடுத்த முடிவினால் தோல்வி ஏற்பட்டாலும் அதற்காக வருத்தப்படாமல் தோல்வியில் இருந்து விரைவில் மீண்டு வாருங்கள். நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள். உங்களுக்கு தீவிர காதல் இருக்கும் விசயத்தையே பின்பற்றுங்கள். வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துங்கள். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குங்குகள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள். சில சமயங்களில் மதிப்புமிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்பளிக்கும்.

ராபர்ட் கியோசாகி

ராபர்ட் கியோசாகி

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளர்

உங்களை சுற்றி உங்களை போல் எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்திருங்கள். கடினமான தருணங்கள் தான் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். நீங்கள் சேமிப்பதை விட அதிகம் முதலீடு செய்யுங்கள். எப்போதும் ஒரு பொருளை வாங்கும் முன், எப்படி என்னால் இதை வாங்க முடியும் என்று கேளுங்கள். உங்கள் வாழக்கையை மிக எளிமையாக்குங்கள்.

எலன் சுகர்

எலன் சுகர்

பின்னடைவுகளுக்கு தயாராக இருங்கள். உங்கள் திட்டத்தில் நம்பிக்கை, நோக்கத்தில் உறுதி, தீவிர உணர்ச்சி கொண்டிருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கு அனுபவம் இருக்கும் விசயத்திலேயே தொழிலைத் தொடங்குவது நல்லது. இந்த அனுபவம் ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்ததின் மூலம் பெற்றதாக இருக்கலாம் அல்லது உங்களது பொழுதுபோக்கின் மூலம் கிடைத்த அனுபவமாக இருக்கலாம். உங்கள் தொழில் சார்ந்த வல்லுனர்களிடம் அறிவுரை கேளுங்கள். வங்கிகள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். தொழிலில் உங்கள் பணத்தை போடுங்கள்.

ஆர். ஜி. சந்திரமோகன்

ஆர். ஜி. சந்திரமோகன்

பால் மற்றும் தாவர பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன் நிறுவனத்தை நிறுவியவர். இந்நிறுவனத்தின் முக்கிய வணிகப்பொருட்கள் ஆரோக்யா பால், அருண் ஐஸ்க்ரீம், கோமாதா பால், ஹட்சன் நெய் போன்றவை ஆகும்.

தொழில் செய்ய விரும்புவோர் எடுத்த எடுப்பிலேயே பாதுகாப்பு என்ற பெயரில் வீடு, மனை என்று பணத்தை முடக்கக்கூடாது. அந்த பணத்தை தொழில் செய்தால் நாலு பேர்க்கு வேலையும் கொடுக்கலாம். நாமும் முன்னேற்றம் அடையலாம். தன் கடைசிக் காலம் வரையில் ஜே.ஆர்.டி. டாடா மும்பையில் ஒரு வாடகை வீட்டில் தான் குடியிருந்தார். அதேப்போன்று தான் நாமும். தேவையற்ற செலவினங்களை குறைத்து முதலீட்டில் செலுத்துவதன் மூலம் நீங்களும் வெற்றியடையலாம்.

கெமோன்ஸ் வில்ஷன்

கெமோன்ஸ் வில்ஷன்

உலகில் இன்று அதிக விடுதிகளைக் கொண்ட நிறுவனம் Holiday Inn. இந்நிறுவனத்தை தொடங்கியவர் கெமோன்ஸ் வில்ஷன்

அன்றாட நாளில் சரி பாதி கடுமையாக உழையுங்கள். நாம் முன்னேறுவதற்காக முழு மூச்சுடன் செயல்பட்டால் வெற்றி நம் வசப்படும். உழைப்புதான் எல்லா வாய்ப்புகளையும் திறக்கும் சாவி. ஒரு மனிதனின் வெற்றி அல்லது தோல்விக்கு அவரின் அறிவுத்திறனை விட மனப்பாங்கே முக்கிய பங்காற்றுகிறது. வெற்றியடைய துணிச்சலாய் காரியங்களை செய்ய வேண்டும். சம்பாதிப்பதை விட அதிகமாக உழைக்கவில்லையென்றால், உழைக்கும் அளவை விட அதிகமாக சம்பாதிக்க இயலாது.

டோனால்ட் டிரம்ப்

டோனால்ட் டிரம்ப்

டோனால்ட் டிரம்ப், அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 45வது அரசுத்தலைவரும் ஆவார்.

நீங்கள் பணத்திற்காக மட்டும் உங்கள் வேலையை செய்தால் அது முழு வெற்றியைத் தேடித் தராது. உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். குறிக்கோளை உயர்வாக வையுங்கள். ஒரு போதும் நீங்கள் செய்யும் காரியத்திலிருந்து பின்வாங்காதீர்கள். உங்களுக்கு விருப்பமான காரியத்தில் அதிகமான சிக்கல்கள் இருந்தாலும் அந்த காரியலேயே கவனத்தை செலுத்துங்கள்.

சாம் வால்டன்

சாம் வால்டன்

உலகப் புகழ்பெற்ற வால் மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் சாமுவேல் மோர் வால்டன்.

தீர்க்கமுடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை. ஜெயித்தால் சந்தோஷம், தோற்றால் அனுபவம். இவை இரண்டுமே விலைமதிப்பற்ற சொத்துக்கள். வெற்றி என்பது எல்லோருக்கும் சொந்தமானது. சரியான வாய்ப்பும் ஊக்கமும் தரப்பட்டால், சாதாரண மனிதர்களால் கூட, பல பெரிய வெற்றிகளை பெறமுடியும். ஒரு நல்ல சிந்தனையை உடனே செயல்படுத்துங்கள். நாம் நம்முடைய பழைய சாதனைகளில் திருப்தியடைந்து மகிழ்ந்துவிட்டால், நாம் அங்கேயே தேங்கி நின்று விடுவோம். அதை மறந்துவிட்டு, அடுத்து என்ன என்கிற ஆர்வத்துடன் வாழ்க்கையை அணுகினால், மேலே மேலே சென்று கொண்டே இருக்கலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Top 10 Rules For Success From Successful People
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+