உங்க ரெஸ்யூம் ஆல்-இன்-ஒன் டைப்பா? அப்போ இங்கதான் போகும்!

வேலை தேடுவோர் பலரும் செய்யும் தவறு ஒரே ரெஸ்யூமை அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்புவது.

By Kani

படித்து முடித்ததும் ஒரு நல்ல வேலையை எட்டிப் பிடிக்க சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றித்தான் ஆக வேண்டும். எப்போது, எந்த வேலை தேடுவதாக இருந்தாலும் ரெஸ்யூம் என்ற சுய விபரக் குறிப்பு முக்கியமான ஒன்று.

"யானை வரும் பின்னே-மணியோசை வரும் முன்னே"

என்பது போல் ஒரு சரியான நபர் ஒருவர் உங்கள் நிறுவனத்திற்கு வருகிறார் என்பதை அடையாளப்படுத்துவது இந்த ரெஸ்யூம்தான்.

 உங்க ரெஸ்யூம் ஆல்-இன்-ஒன் டைப்பா? அப்போ இங்கதான் போகும்!

வேலை தேடுவோர் பலரும் செய்யும் தவறு ஒரே ரெஸ்யூமை அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்புவது. ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதனை நினைவில் வைத்து நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், விண்ணப்பிக்கும் பதவிக்கான தேவைகள் ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கேற்றார் போல் விண்ணப்பிப்பது புத்திசாலித்தனம்.

எவ்வளவுதான் கவனமாக ரெஸ்யூமை ரெடிபண்ணாலும் சில சமயம் தவிர்க்கமுடியாத தவறுகள் நம்மை அறியாமல் வந்து விடுவது இயல்புதான். அது என்ன? அதை எவ்வாறு தடுப்பது என்பதை காணலாம்.

எழுத்து மற்றும் இலக்கண பிழைகள்:

முதலில் ரெஸ்யூமில் இலக்கண பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தெரிஞ்ச விஷயம்தான் என்றாலும் இதற்கான விடை உங்களுக்கு இலக்கண ரீதியில் எழுத தெரியாது, அல்லது முழு அக்கறையுடன் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்று முடிவுசெய்ய வாய்ப்பாக அமையும் என்பதை மறக்காதீர்கள்.

புரியும் படி எழுதுதல்:

உங்கள் விண்ணப்பமானது சுருக்கமாக இருப்பது நல்லது. அதே சமயம் மொட்டையாக தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருக்கக்கூடாது. உங்களது பணி அனுபவங்களை எளிதாக புரிந்து கொள்ளும் படி எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு:

1.ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தேன்.

2. ஹோட்டலில் மேற்பார்வையாளராக 20 க்கும் அதிகமான பணியாளர்களுடன் ஆண்டுக்கு ரூ.5 கோடி வருவாய் ஈட்டும் வேலையில் இருந்தேன்.

மேலே உள்ள இரு விளக்கங்களில் தேர்வாளரின் கவனத்தை ஈர்ப்பது என்பதே இரண்டாவது விளக்கம்தான் என்பது அறிந்து கொள்ளுங்கள்.

"ஆல் இன் ஒன்" அணுகுமுறை:

நீங்கள் விண்ணப்பிக்கும் அனைத்து வேலைக்கு ஒரே ரெஸ்யூமை கொண்டு விண்ணப்பிப்பவரா உங்கள் ரெஸ்யூம் நேராக குப்பைத்தொட்டிக்கு போக வாய்ப்புள்ளது. இது போன்ற அணுகுமுறை உங்களுக்கு உண்மையாக நிறுவனத்தின் மீதே, வேலையின் மீதோ அதிக அக்கறை இல்லை. என்பதை பறைசாற்றுவதாக அமையும்.

நீங்கள் எவ்வாறு இந்த வேலைக்கு தகுதியானவர் என்பதை தனித்துவமாகவும், தெளிவாகக் கூறுவதையே பெரும்பாலும் நிறுவனத்தார் எதிர்பார்க்கிறார்கள்.

ஹைலைட்:

முன்பு பணியாற்றிய அலுவலகத்தில் உங்களுக்கான பணி என்ன என்பதை ஒற்றை வரியில் செல்வதைவிட அதில் என்னென்ன செய்வீர்கள், அதனால் நிறுவனத்திற்கு என்ன பயன் என்பதை சுருங்கச்சொல்லூங்கள் போதும்.

நீள,அகலம்:

ரெஸ்யூம் இத்தனை பக்கங்கள்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறையில்லை இருந்த போதிலும், அழுத்தம், திருத்தமாக தெளிவாக குறிப்பிடுவது அவசியம். அதிகபட்சமாக இரண்டு பக்கங்களுக்கும், குறைந்தபட்சம் ஒரு பக்கத்தில் வடிவமைக்க கற்றுக்கொள்ளுங்கள்.

சம்மரி:

கூடுமானவரை நிறுவனத்திற்கு உங்களால் என்ன நன்மை என்பதை வர்ணிக்கும் விதமாக இருக்கட்டும். எடுத்துக்காட்டாக, முன்னதாக பணிபுரிந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவில் அதிகமான நிறுவனங்களை முதலீடு செய்ய வைத்தமைக்காக பரிசு வழங்கப்பட்டது.

இதன் மூலம் நிறுவனத்தின் ஸ்டாக் வேல்யூ 25% அதிகமானது குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களை குறிப்பிடத்தவறாதீர்கள்.

எதற்கு முக்கியத்துவம்:

பள்ளியில் படிக்கும் போதே கூடுதலாக பணம் சம்பாதித்தது போன்ற சிறு, சிறு எடுத்துக்காட்டுகளை குறிப்பிடாமல் நீக்கிவிடுவது நலம். இருப்பினும், உங்கள் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட திறன்கள் என்ன (எ.கா., வேலை நெறிமுறை, நேர மேலாண்மை) போன்ற விஷயங்களை குறிப்பிடுவது நலம்.

விஷுவல் பிரசன்டேஷன்:

வரிக்கு, வரி வெவ்வேறு விதமான பாண்ட் ஸ்டைல், நிறம் என வண்ணம் தீட்டினால் ரெஸ்யூமை பார்ப்பவருக்கு தலைவலிதான் வரும். எனவே ரெஸ்யூமை அனுப்பும் முன் அருகில் இருக்கும் நண்பர்கள் சிலரிடம் காட்டுங்கள். பார்பதற்கு எப்படி இருக்கிறது என்பதை பரிசோதிக்க மறக்காதீர்கள்.

விண்ணப்பிக்கும் முன் ஒரு முறைக்கு இருமுறை பார்த்துவிட்டு விண்ணப்பிப்பது சிறந்தது.

தொடர்பு எல்லைக்கு அப்பால்:

ரெஸ்யூம் எல்லாம் பக்கவாக ரெடி பண்ணிவிட்டு, கடைசியாக போன் நம்பர், இமெயில் போன்றவைகளை மாற்றி எழுதும் பட்சத்தில் "கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை" என்ற கதையாகிவிடும். ஆகவே தொடர்பு எண், முகவரி போன்றவைகளை சரிபார்க்க மறக்காதீர்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The 10 worst resume mistakes to avoid
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+