மருத்துவப் படிப்பில் சேர உதவும் நீட் தேர்வின்போது வேதியியல் பாடக் கேள்விகளுக்கு விடை எழுதும்போது நினைவில் கொள்ள வேண்டிய 20 விஷயங்கள் குறித்து கல்வி நிபுணர்கள் விளக்கியுள்ளனர். இதைப் பின்பற்றும்போது நாம் நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண்களைப் பெற முடியும்.
2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ, பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்கும் நீட் தேர்வு அடுத்த ஆண்டு (2024) மே மாதம் 5-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த தேர்வுக்கான முடிவுகள் 2024 -ம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நீட் நுழைவுத் தேர்வானது அகில இந்திய பாடங்கள் (சிபிஎஸ்இ உள்ளிட்டவை) அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகின்றன.
எனவே, நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவச் செல்வங்கள், மாநில கல்வித் திட்டப் பாடங்களை மட்டுமல்லாமல் அகில இந்திய பாடங்களையும் (சிபிஎஸ்இ உள்ளிட்டவை) நன்கு படித்து மனப்பாடமாக வைத்திருப்பது நல்லது.

இந்த நீட் தேர்வானது 3 மணி நேர கால அளவைக்கொண்டதாகும்.
இந்தத் தேர்வில், இயற்பியலில் 45 வினாக்கள், வேதியியலில் 45 வினாக்கள், உயிரியலில் (தாவரவியல், விலங்கியல்) 90 வினாக்கள் என மொத்தம் 180 வினாக்கள் இடம்பெறும். சரியான விடையைத் தேர்வு செய்யும் கொள்குறி வழியிலான இந்தத் தேர்வில், மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும்.
ஒரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட மொழிகளில் வினாத்தாள் இருக்கும்.
நீட் தேர்வுக்கு நாம் தயாராவது முன்பாக வேதியியல் தேர்வில் அதிக மதிப்பெண்களை எப்படி பெறுவது என்பது குறித்து கல்வியாளர்கள் நமக்கு டிப்ஸ்களைத் தந்துள்ளனர்.
நீட் (NEET -தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு) வேதியியல் தேர்வுக்கு தயாராவதற்கு விடாமுயற்சியும், அதிக கவனமும், அருமையான திட்டமிடலும் மாணவச் செல்வங்களுக்குத் தேவை.
வேதியியல், நீட் பாடத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால், தேர்வின் போது வேதியியல் பாட கேள்விகளை நன்கு புரிந்துகொண்டு பதில் அளிக்கவேண்டும். இதற்காக தகுந்த நேர மேலாண்மையையும் மாணவர்கள் கடைப்பிடிக்கவ வேண்டும்.
சில சமயங்களில், 12 ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் நீட் தேர்வுக்குப் படிக்கும் போது பயப்படும் நிலை உள்ளது. வேதியியல் பாடத்தில் உள்ள கனிம சமன்பாடுகள், கரிம பிணைப்பு அல்லது வெப்ப வேதியியல் போன்ற பல பாடங்கள் அவர்களை அச்சுறுத்துகின்றன.
ஆனால் வேதியியல் பாடங்களை எளிதாகப் படிக்க தீர்வுகள் நம்மிடையே உள்ளன.
நீட் தேர்வில் இடம்பெறும் வேதியியல் பாடக் கேள்விகளை எளிதாக்கும் 20 விஷயங்களை நிபுணர்கள் இங்கே கொடுத்துள்ளனர்.
தேர்வு தேதி நெருங்கும் போது, நீட் தேர்வு ஆர்வலர்கள் தங்களுடைய அறிவை ஒருங்கிணைத்து, அவர்களின் செயல்திறனை அதிகரிக்க உத்திகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி தேர்வுகளுக்குத் தயாராவது முக்கியம்.
வேதியியல் பாடங்களில் உள்ள கடினமான பகுதிகளை மனனம் செய்து படிப்பதும் நல்லது. அதே நேரத்தில் அந்தப் பாடங்களைப் புரிந்துகொண்டு படித்தால் இன்னும் சீக்கிரமாக அது மனதில் பதியும்.
வேதியியல் பாடக் கேள்விகளுக்கு பதில் அளிக்க 20 எளிய அம்சங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. அந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், ஆர்வமுள்ள நீட் தேர்வர்களுக்கு தேர்வின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். மேலும், தேர்வில் வெற்றி பெறலாம் என்ற தன்னம்பிக்கையும் அவர்களுக்குக் கிடைக்கும்.
வேதியியல் பாடத்தில் கரிம, கனிம, இயற்பியல் வேதியியல் பாடங்கள், டாப்பிக்குகள் அதிக அளவில் பரந்து விரிந்து உள்ளன.
எனவே வேதியியல் பாடத்துக்கு செல்வதற்கு முன்பு முந்தைய ஆண்டுகளின் நீட் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்வது, தேர்வாளர்களுக்குத் தேர்வு முறையைத் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அவர்களின் வேகத்தையும் துல்லியத்தையும் மேம்படுத்த உதவும்.
வேதியியல் பாடத்தின் முக்கியமான அம்சங்கள், சூத்திரங்கள், கெமிக்கல் ரியாக்ஷன் எனப்படும் வேதியியல் எதிர்வினைப் பாடங்களை முழுமையாக புரிந்துகொண்டு படிக்க வேண்டும்.
அத்தியாவசியமான வேதியியல் சூத்திரங்களை நன்கு படித்து வைத்துக் கொள்வது நல்லது. இந்தப் பாடங்களை மனப்பாடம் செய்து படித்துக் கொண்டு தயாராகும்போது நீட் தேர்வில் வேதியியல் தொடர்பான கேள்விகளுக்கு திறமையாக பதிலளிக்க முடியும்.

இதன்மூலம் நீட் தேர்வர்கள் அதிக நம்பிக்கையுடனும் திறமையுடனும் நீட் வேதியியல் தேர்வுக்கான கேள்விகளை அணுகலாம்.
நீட் தேர்வானது மொத்தம் 720 மதிப்பெண்கள் மதிப்புடையது. மூன்று பாடங்களில் ஒவ்வொன்றும் (இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்) தலா 180 மதிப்பெண்கள் பங்களிக்கின்றன என்பதை மனதில் கொள்வது அவசியம்.
நீட் தேர்வில் வேதியியல் பாடத்தில் எளிதில் மதிப்பெண் பெற உதவும் 20 குறிப்புகளை கீழே பார்க்கலாம்.
1. பாடத்திட்டத்தை முழுமையாக புரிந்துகொள்ளுதல்: நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தைப் முழுமையாக புரிந்து கொண்டு தேர்வை அணுகவேண்டும். நீட் பாடத்திட்டத்தை முழுமையாக படித்துக் கொண்டு தேர்வை அணுக உங்களை நீங்க்ள் பழக்கப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
2. அடிப்படைகளில் கவனம் செலுத்துதல் அவசியம்: வேதியியல் பாடம் தொடர்பான அடிப்படைக் கருத்துக்கள், சூத்திரங்கள், கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளைப் புரிந்துகொள்வதன் மூலம் வலுவான அடித்தளத்தை உருவாக்குவது நல்லது. இதன்மூலம் தேர்வை நாம் பயமின்றி எளிதில் எதிர்கொள்ளலாம்.
3. ஆர்கானிக் கெமிஸ்ட்ரிக்கு முக்கியத்துவம் கொடுத்தல் நல்லது: ஆர்கானிக் கெமிஸ்ட்ரி என்று அழைக்கப்படும் கரிம வேதியியல் பாடம் மிகவும் முக்கியமானது. இந்த கரிம வேதியியல் பாடத்தில் இருந்து அதிக கேள்விகள் வரலாம். எனவே ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பாடத்தை அதிகமாக கவனம் கொடுத்து படிக்கவேண்டும். அந்தப் பாடங்களை ஊன்றி படிப்பதன் மூலம் அதில் வரும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கமுடியும். எனவே கரிம வேதியியல் பாடத்தைப் படிப்பதற்காகவும், அதன் பாடத்திட்டத்தைத் தயாரிப்பதற்காகவும்கு போதுமான நேரத்தை ஒதுக்குதல் அவசியம்
4. எண்ணியல் சிக்கல்களைப் பயிற்சி செய்வது நல்லது:
வேதியியல் பாடத்தில் எண்ணியல் தொடர்பான பாடங்களை நன்றாகப் படித்துக் கொள்ளவேண்டும். இதன்மூலம் எண்ணியல் சிக்கல்களைத் தொடர்பான கேள்விகளுக்கு நல்ல முறையில் பதில்களை மாணவச் செல்வங்கள் வழங்க முடியும்.
5. முக்கியமான எதிர்வினைகளை (ரியாக்ஷன்) மனப்பாடம் செய்யவேண்டும்: நீட்தேர்வின் போது விரைவாக நினைவு கூர்வதற்கு வசதியாக கரிம, கனிம மற்றும் இயற்பியல் வேதியியலில் உள்ள முக்கிய எதிர்வினைகளை மனப்பாடம் செய்யுங்கள். இதனால் ரியாக்ஷன் (வேதியியல் எதிர்வினை) தொடர்பான எந்தவிதமான கேள்விக்கும் நம்மால் பதில் அளிக்க முடியும்
6. கால அட்டவணையை மதிப்பாய்வு செய்வது நல்லது: நீட் தேர்வுக்கான படிப்பு கால அட்டவணையை நாம் தயார் செய்யவேண்டும். அந்தக் கால அட்டவணையில் உள்ள தனிமங்களின் போக்குகள் மற்றும் பண்புகளைப் புரிந்து கொண்டு படிக்கவேண்டும். ஏனென்றால் அவை பல்வேறு தலைப்புகளைக் கொண்ட பாடங்களாக இருக்கின்றன. நீட் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவை முக்கியமானவையாக உள்ள.

7. எழுத்துத் தேர்வையும், செய்முறைத் தேர்வையும் சமமாக வைத்தல்:
செய்முறைத் தேர்வையும், எழுத்துத் தேர்வையும் மாணவ, மாணவிகள் சமமாக வைத்திருத்தல் அவசியமாகும். எழுத்து தேர்வுக்கும், செய்முறைத் தேர்வுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு பாடங்களைப் படிக்கவேண்டும்.
8. வேதியியல் பிணைப்பு: பல்வேறு வகையான வேதியியல், ரசாயனப் பிணைப்புகள் மற்றும் மூலக்கூறு அமைப்பு, பண்புகள் மற்றும் அவற்றின் தாக்கங்களைப் புரிந்து கொண்டு மாணவ, மாணவிகள் பயில வேண்டும்.
9. சமன்பாடுகள் மற்றும் சூத்திரங்களை அடிக்கடி படித்தல் நலம்: நன்றாக நினைவில் வைத்திருந்து தேர்வின்போது எழுதுவதற்காக இயற் வேதியியல் பாடங்களில் உள்ள முக்கியமான சமன்பாடுகள் மற்றும் சூத்திரங்களை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அவற்றை அடிக்கடி படித்து நினைவில் வைத்துக் கொள்வது மாணவர்களுக்கு நலம்.
10. வரைபடங்களை அடிக்கடி வரைந்து பார்ப்பது சிறப்பு: வேதியியல் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற அதுதொடர்பான படங்கள், வரைபடங்களை வரைந்து பார்ப்பது நலம். மூலக்கூறு பிரதிநிதித்துவங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு இரசாயன கட்டமைப்புகள் மற்றும் வரைபடங்களை துல்லியமாக வரைய மாணவச் செல்வங்கள் பயிற்சி செய்து பார்ப்பது நல்லதாகும்.
11. எதிர்வினை வழிமுறைகள்: வேதியியல் பாடங்களில் வரும் எதிர்வினைகளின் வழிமுறைகளை நன்கு அறிந்து வைத்திருப்பது தேர்வில் சிறப்பாக செயல்பட உதவும். எதிர்வினைகளின் உருவாகும் பொருட்கள் மற்றும் இடைநிலைகளைத் துல்லியமாகக் கணிக்க கரிம வினைகளின் வழிமுறைகளைப் புரிந்து வைத்துக் கொண்டு செயல்படுவது சிறப்பாக இருக்கும்.
12. ஸ்டோச்சியோமெட்ரி எனப்படும் வேதியியல் பாடப்பிரிவில் கவனம் செலுத்துதல் சிறப்பு: ஸ்டோச்சியோமெட்ரி எனப்படும் வேதியியல் பாடப்பிரிவில் மாணவச் செல்வங்கள் கவனம் செலுத்தவேண்டும். இந்த வேதியியல் எதிர்வினைகளைக் கூறும் ஸ்டோச்சியோமெட்ரி பிரிவில் கணக்கீடுகள், எதிர்வினைகள் மற்றும் தீர்வு வேதியியல் உட்பட பல்வேறு தலைப்புகளில் வரும் கேள்வி, பதில்களை அடிக்கடி படிக்கவும்.
13. நடப்பு நிகழ்வுகளுடன் அப்-டேட்டாக மாணவர்கள் இருக்கவேண்டும்: வேதியியல் துறையில், குறிப்பாக சுற்றுச்சூழல் வேதியியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற பகுதிகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மாணவச் செல்வங்கள் அப்-டேட்டாக இருப்பது அவசியம்.
14. நினைவூட்டல்களைப் பயன்படுத்துவது அவசியம்: சிக்கலான கருத்துகள், எதிர்வினைகள், சூத்திரங்கள், சமன்பாடுகள் மற்றும் தொடர்களை நினைவில் வைக்க நினைவூட்டல் சாதனங்களை மாணவச் செல்வங்கள் பயன்படுத்தலாம்.
15. அடிக்கடி ரிவைஸ் செய்வது அவசியம்: வேதியியல் பாடங்களில் கற்றலை வலுப்படுத்தவும், தகவல்களைத் திறம்படத் தக்கவைக்கவும், முன்னர் உள்ளடக்கிய பாடங்களை அடிக்கடி ரிவைஸ் செய்து படிக்கவேண்டும்.
16. நேரத்தை திறம்பட நிர்வகித்தல்: வேதியியல் பிரிவை ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த மாதிரித் தேர்வுகளை அடிக்கடி எழுதிப் பாருங்கள். அவ்வாறு மாதிரித் தேர்வு எழுதும்போது நேரத்தை சரியானபடி உபயோகிக்கிறோமோ என்பதைக் கண்காணிக்கவும்.
17. கேள்விகளை கவனமாகப் படியுங்கள்: தவறான விளக்கத்தைத் தவிர்க்கவும், துல்லியமாகப் பதிலளிக்கவும் கேள்விகளின் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
18. வாய்ப்புகளை நீக்குவது அவசியம்: வேதியியல் பாடத்துக்கான பதில்களை எழுதும்போது, குறிப்பாக பல-தேர்வு கேள்விகளுக்கு பதில் எழுத வாய்ப்புகளை நீக்கும் செயல்முறையைப் பயன்படுத்தவும்.
19. எளிதான கேள்விகளுக்கு முதலில் பதில் அளிக்கவேண்டும்: உங்களுடைய நம்பிக்கையை வளர்க்கவும் உங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்கவும் எளிதாகக் உள்ள கேள்விகளுடன் நீட் தேர்வைத் தொடங்கவும்.
20. அமைதியாகவும் கவனம் செலுத்துவது அவசியம்: பீதியைத் தவிர்க்கவும் பகுத்தறிவு முடிவுகளை எடுக்கவும் தேர்வின் போது அமைதியான முறையில் கவனம் செலுத்தி எழுதவேண்டும். தேர்வின்போது கவனத்தைச் சிதறவிடாமல் கேள்விகளைப் படித்து அதற்கான பதில்களை உங்கள் கவனகங்களில் இருந்து தேடும் மனப்பான்மையை மாணவச் செல்வங்கள் கடைப்பிடிக்கவேண்டும்.
வேதியியல் பாடம் தொடர்பான இந்த 20 முக்கிய அம்சங்களை மாணவச் செல்வங்கள் கடைப்பிடித்தால் அதிக மதிப்பெண்களை பெற முடியும். எனவே, இதை மனதில் வைத்துக்கொண்டு, நீட் தேர்வில் வேதியியல் பாடங்களுக்கான கேள்விகளை நம்பிக்கையுடன் அணுகி வெற்றி பெறுங்கள்.
வாழ்த்துக்கள்....மாணவச் செல்வங்களே...!!


Click it and Unblock the Notifications












