ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்து வழிமுறைகள்

உலகளாவிய தொடர்பு மொழியாக ஆங்கிலம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ஆங்கிலம் பேசும் திறன்களை வலுவாக வளர்ப்பது இன்றியமையாதது ஆகும். ஆங்கிலத்தில் செயலூக்கம் உடைய முறையில் தொடர்பு கொள்ளுவதன் வாயிலாக, கல்வி, தொழில்முறை, தனிப்பட்ட நோக்கங்களுக்காக எண்ணற்ற வாய்ப்புகள் எனும் கதவுகளை சிறப்பு கம்பளம் விரித்து திறக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்து வழிமுறைகள்

கீழே காணும் இந்த கட்டுரை, உங்களின் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்துவதற்கும், உங்களை சரளமாக ஆங்கிலத்தில் நம்பிக்கையுடன் பேசும் திறனை வெளிப்படுத்தும் யுத்திகள் மற்றும் நுட்பங்கள் குறித்து விரிவாக அலசுகிறது.

சொற்களஞ்சியத்தை விரிவாக்குகள்

ஒரு கட்டடத்துக்கு எப்படி தரைத்தளம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோல, வலுவான ஆங்கில பேச்சு திறனை வளர்க்கும் ஓர் திறவு கோல் சொற்களஞ்சியம் ஆகும்.

புத்தகங்கள், கட்டுரைகள், ஆங்கில ஊடகங்கள் வாயிலாக, தினசரி புதிய, புதிய சொற்களை அறிந்து கொள்ளும் முன்னெடுப்பை மேற்கொள்ளுதல் அவசியம்.

அப்படியான முன்னெடுப்பை மேற்கொள்ளும் போது, நீங்கள் காணும் புதிய, புதிய சொற்களை, அதற்கான அர்த்தத்துடன் குறிப்பெடுத்து வைத்து கொள்வதை வழக்கமாக்க வேண்டும்.

அவ்வாறு கண்டறிந்த புதிய சொற்களை, உங்களின் அன்றாட உரையாடல்களில் பயன்படுத்த வேண்டும். ஃபிளாஷ் கார்டுகள் போன்ற ஆன்லைன் ஆதாரங்களை பயன்படுத்தி, உங்களின் வார்த்தை வங்கியை மேம்படுத்துவதோடு, அதை தக்க வைப்பதை உறுதிப்படுத்தவும் செய்ய வேண்டும்.

உச்சரிப்பு மற்றும் ஒலியெழுச்சி பயிற்சி

வார்த்தை உச்சரிப்பின் போது, சரியான ஏற்ற இறக்கத்துடனும், தெளிவான உச்சரிப்பை வளர்ப்பதன் மூலம் உங்களின் ஆங்கிலம் பேசும் புலமை மேம்படும். வார்த்தையின் தனிப்பட்ட ஒலிகளில் கவனம் செலுத்தி, அந்த வார்த்தைக்கான உச்சரிப்பு, தாளத்தை கவனத்துடன் உள்வாங்கி, வார்த்தை உச்சரிப்பை செம்மைப்படுத்தும் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

அதாவது, சத்தமாக பேசி பழக வேண்டும். உங்களின் பேச்சை நீங்களே பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பேசியதை, ஆடியோ மாதிரிகளுடன் ஒப்பிட்டு, உங்களின் வார்த்தை உச்சரிப்பில் ஏற்பட்டிருக்கும் பலம், பலவீனம் குறித்து அறிந்து கொள்ளவும்.

ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட நபர்களுடன் உரையாடல்களை தொடர வேண்டும் அல்லது மொழி சார்ந்த பயிற்சி அளிக்கும் பாடத்திட்டங்களில், உங்களை இணைத்து கொண்டு, அவர்கள் அளிக்கும் பின்னூட்டத்தை பெறுவதோடு, உச்சரிப்பு குறித்த பயிற்சியை அறிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற முயற்சிகளை தடையின்றி மேற்கொண்டால், நீங்கள் பேசும் ஆங்கில வார்த்தையின் உச்சரிப்பு, அதன் ஒலியும் செறிவு பெறும்.

ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்து வழிமுறைகள்

வழக்கமான உரையாடல்களில் ஈடுபடுங்கள்

ஆங்கிலத்தில் பேசுவதில் அதிக நம்பிக்கை மேலோங்க, நாம் எவ்வளவு அதிகமாக உரையாடல்களில் ஈடுபடுகிறோம் என்பதை பொறுத்து அமையும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.

மொழியறியும் பயிற்சி திட்டங்கள், உரையாடல்கள் மனமகிழ் மன்றங்கள், ஆன்லைன் மன்றங்கள் வாயிலாக, ஆங்கிலம் பேசுபவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை தடையின்றி தேட வேண்டும்.

முதலில், இதை சவாலாக உணர்ந்தாலும், பேசுவதைப் பயிற்சி செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் தடை, தயக்கமின்றி ஏற்று கொள்ள வேண்டும். கற்றல் செயல்முறைகளில் தவறு நிகழுவது என்பது இயற்கை என்பதை, நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆபத்துகளை கண்டு பயந்து, அவர்களிடம் இருந்து கற்று கொள்ள தயங்கக்கூடாது.

ஆங்கில ஆடியோ உரையாடுகளை கேளுங்கள்

தொடந்து கேட்பது, ஆங்கிலம் பேசும் திறனை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.அது, பேசும் திறனை மேம்படுத்தும் கருவி ஆகும். பாட்காஸ்ட்கள், ஆடியோ புத்தகங்கள் அல்லது செய்தி சேனல்கள் போன்ற ஆங்கில ஆடியோ உரையாடல்கள் வழங்கும் தளங்களை தவறாமல் பயன்படுத்தி, அதை கேளுங்கள்.

ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிருக்கும் நபர்களிடம் தொடர்ந்து பேசுங்கள். அவ்வாறு அவர்கள் பேசும் போது, அவர்களின் பிரயோகிக்கும் வார்த்தையின் ஒலி, உச்சரிப்பு, வாக்கிய அமைப்பின் மீது அதீத கவனத்தை செலுத்த வேண்டும்.

வெவ்வேறான தலைப்புகள், உச்சரிப்புகளை கொண்டு, நீங்களே உங்களுக்குள் பேசும் சவால்களை உரிதாக்கி கொண்டு, முயற்சி மேற்கொள்வதன் மூலம் ஆங்கிலத்தை சிறப்பாக பேச முடியும் என்பதை அறிவீர்கள்.

இந்த வெளிப்பாடு, உங்கள் மொழி புரிதலை மேம்படுத்துவதோடு, தாய் மொழியில் பேசுவது போன்ற உணர்வை பிரதிபலிக்க உங்களை அனுமதிக்கும்.

மொழி கற்றல் செயலிகள், ஆன்லைன் வளங்களை பயன்படுத்துங்கள்

மொழி அறியும் செயலிகள், ஆன்லைன் ஆதாரங்களை, உங்கள் ஆங்கிலம் பேசும் பயிற்சியில் இணைத்து கொள்ளுங்கள். உதாரணமாக, Duolingo, Babbel, Rosetta Stone ஆகிய தளங்கள் உங்கள் திறமைகளை கூர்மைப்படுத்த உதவும் பயிற்சிகள், பேச்சு பயிற்சிகள் மற்றும் மொழியறியும் சவால்களை வழங்குகின்றன.

தாய்மொழியில் பேசுபவர்கள், ஆங்கிலம் கற்பவர்களுக்கான மன்றங்கள், சமூக வலைதளங்கள், அவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்புகளை, கூடுதலாக வழங்கி வருகின்றன.

இவற்றின் வாயிலாக, நீங்கள் அவர்களின் கருத்துகளை பெறுவதோடு, மொழி சார்ந்த அடிப்படை விவாதங்களில் பங்கேற்பதோடு, அதிலுள்ள நுண்ணறிவுகளை எளிதில் பெறவும் முடியும்.

ஸ்பீக்கிங் கிளப் அல்லது டோஸ்ட்மாஸ்டர்களில் இணையவும்

உள்ளூரில் உள்ள உரையாடல்களை வழங்கும் கிளப்கள் அல்லது டோஸ்ட்மாஸ்டர்களில் இணைவை கவனத்தில் கொள்ள வேண்டும். அது, அங்கு உங்களின் ஆங்கிலம் பேசும் திறன்களை, ஆதரவான, ஆக்கபூர்வமான சூழலில் பயிற்சி பெற பெரிதும் உதவியாக இருக்கும்.

கட்டமைக்கப்பட்ட செயல்பாடுகளை கொண்டிருக்கும் இந்த குழுக்கள், உங்களுக்கு பேசும் வாய்ப்புகளை வழங்குவதோடு, நம்பிக்கையை அளிக்கும் விவாதங்கள் பற்றிய பின்னுாட்டத்தை வழங்கும்.

இதன் வாயிலாக, பொது வெளியில் தடையின் பேசும் திறனை வளர்க்கும். அதுமட்டுமின்றி, உங்களுடன் ஒத்திருக்கும் எண்ணம் கொண்ட நபர்களுடன் பழகுவது, பேசுவது என்பது, உங்களிடம் இருக்கும் பதற்றத்தை போக்குவதுடன், மதிப்பு மிக்க உரையாடல் அனுபவத்தை வழங்கும் தளமாக அமையும்.

ஆங்கில திரைப்படங்கள், டி.வி., நிகழ்ச்சிகளை பாருங்கள்

ஆங்கிலத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது பொழுதுபோக்கை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இயல்பான ஆங்கில உரையாடல்களை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில், நடிகர்கள் வெளிப்படுத்தும் உரையாடல், உடல் வெளிப்பாடுகள், உடல் மொழிகளில் கவனம் செலுத்துங்கள். துவக்கத்தில், திரைப்படங்களில் உள்ள இடம்பெறும் வசனங்களின் வரிகள்(சப்டைட்டில்) பேரூதவியாக இருக்கும். பின், படிப்படியாக வசனங்களின் வரிகள் உதவியின்றி உரையாடல்கள் வழியாக பின்தொடரும் திறனையும் மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.

ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்து வழிமுறைகள்

ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்துவதற்கு, நிலையான பயிற்சி, விடாமுயற்சி மற்றும் விருப்பம் ஆகியவை, உங்களை பாதுகாப்பான வளையத்துக்குள் எடுத்து செல்லும். புதிய, புதிய சொற்களஞ்சியத்தை அறிவது, உச்சரிப்பு, ஒலிப்பதிவு, தொடர் மற்றும் வழக்கமான உரையாடல்கள், ஆங்கில ஆடியோ பதிவை கேட்பது, கற்றல் செயலி, ஆன்லைன் ஆதாரங்கள், ஆங்கிலம் பேசும் மன்றங்கள் மற்றும் குழுக்களில் இணைவது, ஆங்கில திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது, கேட்பது,கிளப்கள் அல்லது டோஸ்ட்மாஸ்டர்களில் இணைவது போன்றவற்றை, தடையின்றி செய்வதன் வாயிலாக, நம்பிக்கையுடன் சரளமாக ஆங்கிலம் பேசும் திறனை அதிகரித்து கொள்ள முடியும்.

நினைவில் வைத்து கொள்ளுங்கள் தொடர்ச்சியான, நிலையான பயிற்சி அவசியம் என்பதை....!

ஆங்கிலத்தில் பேசுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் தனக்காக்கி, உங்கள் முன்னேற்றத்துக்கான வழியை அடைந்து, மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
English is widely recognized as the global language of communication, making it essential to develop strong English speaking skills. In this article, we will explore practical strategies and techniques to enhance your English speaking skills and gain confidence in expressing yourself fluently.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+