இந்த விசயம் தெரிஞ்சா இனி வேலைக்கு போகவேண்டிய அவசியமே இல்ல..!

ஃப்ரீலான்சிங் என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. எந்த நேரத்திலும் பணி செய்யலாம். ஆனால் வேலையை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்.

நெரிசலான நகர்ப்புற வாழ்க்கையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவசர அவசரமாக புறப்பட்டு அலுவலகம் வந்து ஒரே மாதிரியான சூழ்நிலையில் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றி பின்னர் மாலையில் மீண்டும் புறப்பட்டு நெரிசலில் சிக்கி வீட்டிற்கு செல்வதை வெறுக்கும் நபரா நீங்கள் உங்களுக்காகதான் இந்தப்பதிவு.

ஃப்ரீலான்சிங் என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. எந்த நேரத்திலும் பணி செய்யலாம். ஆனால் வேலையை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும்.

இந்த விசயம் தெரிஞ்சா இனி வேலைக்கு போகவேண்டிய அவசியமே இல்ல..!

வேலைவாய்ப்பு சந்தையில் பல்வேறு விதமான ஃப்ரீலான்ஸ் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வெவ்வேறு வகையான நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட திறனுள்ள ஃப்ரீலான்ஸ் பணியாளர்களை பல்வேறு இடங்களில், பல்வேறு திறமைகளில் எதிர்பார்க்கின்றன.

ஃப்ரீலான்சிங் பணியை ஒருவர் படிப்பை முடித்தப் பிறகுதான் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. படிக்கும் போதே சம்பாதித்து சொந்தக் காலில் நிற்கலாம். அந்தவகையில் உங்களுக்கு உதவும் சில ஃப்ரீலான்சிங் ஜாப் தளங்கள்.

ஃப்ரீலான்சர்:

ஃப்ரீலான்சர்:

(Freelancer):

ஃப்ரீலான்சர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் நம்பகத்தன்மை வாய்ந்த மற்றொரு சிறப்பான தளம்தான் ஃப்ரீலான்சர்.

இதில் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பல்வேறு வகையான ஃப்ரீலான்சிங் வாய்ப்புகளை பெறலாம்.

இந்த தளத்தில் நமக்கென்று ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் பட்சத்தில் இந்ததளத்தில் இருந்து பல்வேறு வகையான கூடுதல் சலுகைகளை பெறலாம்.

 

குரு :

குரு :

(Guru

3 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதால் குரு மீது எப்போதும் ஒரு நன்மதிப்பு உண்டு, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வாய்ப்புகளை ஒரு சேர வழங்கும் தளம்.

நமக்கு ஒரு வேலை பிடித்திருக்கிறது என்றால் அதன் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் அது சம்பந்தமான அனைத்து விவரங்களையும், சந்தேகங்களையும் கேள்விகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதோடு ஊதியத்திலும் நம்பகத்தன்மை வாய்ந்த தளம் இது.

 

டாப்டால் :
 

டாப்டால் :

(Toptal)

மேலே உள்ள தளங்களைப் போலல்லாமல், டாப்டால் தனித்தன்மை வாய்ந்தது. வெப் டிசைன், வெப் டெவலெப்பர், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு வகையான துறைகளில் அனுபவமுள்ள, திறமையான ஃப்ரீலான்ஸர்களை ஸ்கிரீன் டெஸ்ட் முறையில் டாப்டால் தேர்வு செய்கிறது.

இதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில், ஏர்பிஎன்பி, ஜேபி மோர்கன், ஹெவ்லெட் பேகார்ட், எமிரேட்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை வழங்குகிறது. நம் செய்யும் பணிக்கேற்ப விதவிதமான முறையில் வருமானத்தை பெறலாம்.

 

99 டிசைன்:

99 டிசைன்:

(99designs)

பக்காவா டிசைன் பண்ணும் திறமை இருக்கா? உங்களுக்கானதுதான் இந்த தளம். டிசைனிங் சம்பந்தமான தயாரிப்புகள், வாழ்த்து மடல், டி-ஷர்ட் டிசைன், லோகோ டிசைன் போன்ற அனைத்துவிதமான டிசைன் சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகளை இங்கு பெறலாம்.

நமது தனிப்பட்ட டிசைன்ஸை பார்வைக்கு வைத்து அதன் மூலம் வேலை வாய்ப்பை பெறுவதோடு, கைநிறைய காசும் பார்க்க முடியும்.

பைவ்வர்:

பைவ்வர்:

(Fiverr

Fiverr அனைத்து வகையான வேலை வாய்ப்புகளையும் வழங்கும் ஒரு தளமாகும். டிஜிட்டல் மார்க்கெட்டிங், டிசைனிங், ரைட்டிங், ஓவியம், மியூசிக், ப்ரோகிராமிங் என பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளின் பட்டியலை உள்ளடக்கியது.

திறமையை குறுகிய காலத்தில் நிறைவாக வெளிப்படுத்த தயராக இருப்பவர்களுக்கு பைவ்வர் ஒரு சிறந்த தளம்.

 

என்வடோ ஸ்டுடியோ:

என்வடோ ஸ்டுடியோ:

(Envato Studio)

வெப் மற்றும் மொபைல் டெவலப்பர்கள், அனிமேஷன், வீடியோ எடிட்டிங், கிராஃபிக் டிசைன் மற்றும் பல பிரிவுகளில் உள்ள வேலை வாய்ப்புகளை இங்கு காணலாம்.

நமது போர்ட்ஃபோலியோ அங்கிகரிக்கப்படும் பட்சத்தில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்புகளை இதன் மூலம் பெற முடியும்.

 

அப் ஓர்க் :

அப் ஓர்க் :

(Upwork)

ஃப்ரீலான்சர்களுக்கு நன்கு பரீட்சையமான தளம் அப் ஓர்க், நமது போர்ட்ஃபோலியோ எனப்படும் தனித் திறமை பட்டியலின் அடிப்படையில், மாணவர்கள் முதல் அனுபவசாலிகள் வரை பல்வேறு தரப்பினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தளம்.

இதில் சிறிய நிறுவனங்கள் முதல் யுனிலிவர், பின்ரெஸ்ட், உள்ளிட்ட பல முண்ணனி நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகளை பெறலாம்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Here's a list of the best sites to find work as a Freelancer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X