இளைஞர்களே இதைப் பின்பற்றினால் நீங்கள்..வங்கித் தேர்வில் எளிதில் வெற்றி காணலாம்...!!!

பட்டப்படிப்பு முடித்ததும் மாணவர்கள் அடுத்து தயாராவது வங்கித் தேர்வுகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத்தான். வங்கித் தேர்வு எழுதி வெற்றி பெற்று வேலையில் சேர்ந்துவிட்டால் நிரந்தரமான ஊதியத்தைக் கொடுக்கும் என்பதால் பலர் வங்கித் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

இதற்காக பலர் பயிற்சி இன்ஸ்டிடியூட்டுகளுக்குச் சென்று வங்கித் தேர்வு எழுதத் தயாராகின்றனர். இதற்காக நாடு முழுதும் ஏராளமான பயிற்சி இன்ஸ்டிடியூட்டுகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. ஆன்-லைன் மூலமாகவும், நேரிலும் இந்த பயிற்சி இன்ஸ்டிடியூட்டுகள் பாடங்களை நடத்தி மாணவர்களை வங்கித் தேர்வுகளுக்குத் தயார் செய்கின்றன. வங்கித் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவதற்கான 20 எளிய வழிமுறைகளை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அந்த வங்கித் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவதற்கான 20 வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

இளைஞர்களே இதைப் பின்பற்றினால் நீங்கள்..வங்கித் தேர்வில் எளிதில் வெற்றி காணலாம்...!!!

1. வங்கி தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடைமுறையை தெரிந்துகொள்ளுங்கள்

முதலில் நாம் எந்த வங்கித் தேர்வை எழுதப் போகிறோம் என்பதை முடிவு செய்துகொள்ளவேண்டும். பின்னர் அந்த வங்கி தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடைமுறையை தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படவேண்டும்.

வங்கித் தேர்வு எழுதும் இளைஞர்கள், முழு வங்கித் தேர்வு பாடத்திட்டத்தின் அளவைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் வரிசையையும் அறிந்திருக்க வேண்டும். முதன்மை மற்றும் பிரதானத் தேர்வுகள் (மெயின் மற்றும் பிரிலிம்னரி தேர்வு) உட்பட வங்கித் தேர்வு முறையைப் பற்றிய அறிவை இளைஞர்கள், கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.

இதன்மூலம் சமீபத்தில் நடைபெற்ற வங்கித் தேர்வு பாடத்திட்டத்தின்படி வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகி, எந்த முக்கியமான கருத்தையும் தவறவிடாமல், ஆர்வமாக பங்கேற்க இது உதவுகிறது.

ஏறக்குறைய அனைத்து முக்கிய வங்கித் தேர்வுகளுக்கான பாடத்திட்டமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. மேலும் வங்கித் தேர்வுகளுக்கான டாபிக்குகளும்(பொருள்) ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன. எனவே, ஏதேனும் வங்கிப் பதவிகளுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் விரிவான பிரிவு வாரியான பாடத் திட்டத்துக்கான வங்கித் தேர்வுப் பாடத்திட்டத்தைப் படித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

2)படிப்புத் திட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்

வங்கித் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை முடிந்ததும், இளைஞர்கள் தங்கள் வங்கித் தேர்வுக்கான தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும். வங்கித் தேர்வு பாடத்திட்டத்தில் உள்ள ஒவ்வொரு பாடத்துக்கும் நேர அட்டவணை உருவாக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் ஒரு மாணவராக இருந்தாலும் அல்லது பணிபுரியும் இளைஞராக இருந்தாலும், முதல் முயற்சியிலேயே வங்கித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் கடைப்பிடிப்புடன் கால அட்டவணையைப் பின்பற்றுதல் அவசியமான ஒன்றாகும்.

3) வங்கி தேர்வுத் தயாரிப்புக்கான சிறந்த ஆதாரங்களை(பாடத்திட்டம்) பயன்படுத்துங்கள்

சரியான வங்கித் தேர்வுப் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது, ஓர் இளைஞரின் வங்கித் தேர்வுத் தயாரிப்பை உருவாக்கலாம். இதன்மூலம் வங்கித் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். ஏனென்றால், வங்கித் தேர்வு எழுதும் இளைஞர், தனது வங்கித் தேர்வுக்கான தயாரிப்பை ஏற்கனவே தொடங்கியவுடன், வேறு தயாரிப்பு மூலத்தை (பாடங்கள்) தேடுவதில் நேரத்தை வீணடிக்க முடியாது. எனவே, வங்கித் தேர்வு எழுதுபவர் தயாரிப்பதற்கு மிகவும் பொருத்தமான ஆதாரங்கள் (பாடங்கள்), புத்தகங்கள் அல்லது ஆய்வுப் பொருட்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, இதன்படி செயல்பட்டால் வங்கித் தேர்வில் வெற்றி பெறுவது நிச்சயம். வங்கித் தேர்வுக்கான பாடங்கள்,புத்தகங்களை கவனமாக தேர்வு செய்யுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

4) தனியாக பயிற்சி பெறுவதை ஒரு விருப்பமாக வைத்துக் கொள்ளுங்கள்

ஒரு பயிற்சி நிறுவனத்தில் அல்லது இன்ஸ்டிடியூட்டில், வங்கித் தேர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும் உபாயங்கள், தந்திரங்களை நன்கு அறிந்த நிபுணர்கள் உள்ளனர். வங்கித் தேர்வு வினாத்தாள்களை விரைவாகவும் துல்லியமாகவும் தீர்ப்பதற்கான குறுக்குவழிகள் மற்றும் நுணுக்கங்களுடன் இந்த பயிற்சி மையங்கள் குறுகிய கால படிப்பு எனப்படும் கிராஷ் கோர்ஸை(crash course) கொண்டிருப்பதால், பயிற்சி மையத்தில் இருந்து தயார் செய்வதைத் தேர்வு செய்வதும் வங்கித் தேர்வு எழுதுபவருக்கு உதவும்.

5) உங்களின் பலவீனமான பகுதிகளைக் கண்டறிந்து அதற்கேற்ப தயார் செய்யுங்கள்

வங்கித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் வங்கித் தேர்வு முறை பற்றிய தெளிவான புரிதல், வங்கித் தேர்வு எழுதும் விண்ணப்பதாரருக்கு அவர்களின் பலம் மற்றும் பலவீனம் பற்றித் தெரியும். இது வங்கி ஆர்வலர்கள் தாங்கள் பலவீனமாக உள்ள பகுதிகளில் ஆழ்ந்து படிக்கவும், அவற்றில் அதிக கவனம் செலுத்தவும் உதவுகிறது.

6) தேர்வுக்கான தொகுதியை உருவாக்குங்கள்

வங்கித் தேர்வுக்கான ஒரு தொகுதியை உருவாக்க வேண்டும். இதில் ஆர்வமுள்ளவரின் கவனம் வங்கித் தேர்வுத் தாளைத் துல்லியமாகவும் வேகமாகவும் தீர்ப்பதிலும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வின் தொடக்கத்தை எளிதாகவும் விரைவாகவும் தீர்க்கக்கூடிய பிரிவுகளுடன் உத்திகளை உருவாக்க வேண்டும்.

7) அனைத்து பிரிவுகளும் சமமாக முக்கியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்

2023-ல் வங்கித் தேர்வு எழுதும் ஒருவர், சமீபத்திய வங்கித் தேர்வுப் பாடத்திட்டத்தின்படி தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கான கேள்விகள், பாடத்திட்டங்கள் இருப்பதால், அந்தப் பாடத்திட்டம் அனைத்துப் பிரிவுகளிலும் சமமாகப் பிரிக்கப்பட வேண்டும்.

8) முந்தைய வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை பயிற்சி செய்யுங்கள்

முந்தைய ஆண்டுகளின் வங்கித் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியவை எப்போதுமே முக்கியமான தலைப்புகள் மற்றும் வங்கித் தேர்வு முறையைப் பற்றிய நுண்ணறிவை வேட்பாளருக்கு வழங்குகின்றன. வங்கித் தேர்வுக்கான தயாரிப்பைத் தொடங்குவதற்கு முன் இந்த பகுப்பாய்வு நடத்தப்பட்டால் உதவியாக இருக்கும்.

முந்தைய ஆண்டு வினாத்தாள்களுக்கு பதில் எழுதுவது, தேர்வர்களின் பார்வையில் இருந்து முக்கியமான தலைப்புகளை பகுப்பாய்வு செய்ய உதவுவதோடு மட்டுமல்லாமல், தேர்வின் தரத்தைப் புரிந்துகொள்ளவும் உதவும்.

9) ஆன்-லைனில் பாடத்திட்டங்கள் (மெட்டீரியல்) கிடைத்தல்

வங்கித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்குத் தேவையான பாடத்திட்டங்கள், மெட்டீரியல்கள்
ஆன்லைனில் ஏராளமாகவும், இலவசமாகவும் கிடைக்கிறது. தேவைப்பட்டால் கட்டணப் படிப்பை செலுத்தி அதை வாங்கவும் செய்யலாம்.

இளைஞர்களே இதைப் பின்பற்றினால் நீங்கள்..வங்கித் தேர்வில் எளிதில் வெற்றி காணலாம்...!!!

10) தேடுதலுக்கான சிறு குறிப்புகளை உருவாக்குங்கள்

வங்கித் தேர்வுத் தயாரிப்பின் போது பாடப்பகுதி குறித்த தேடுதலுக்கான விரைவான சிறு குறிப்பு மற்றும் மறுபரிசீலனைக்கான முக்கியமான துணைத் தலைப்புகள் குறித்து எழுதி வைத்துக் கொள்ளுதல் அவசியம்.

11) அடிக்கடி முக்கியமான தலைப்புகளைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்

ஒவ்வொரு வங்கித் தேர்விலும், அடிக்கடி கேட்கப்படும் மிக முக்கியமான தலைப்புகள் என்று சில உள்ளன. வங்கித் தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் இந்த முக்கிய தலைப்புகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப தயாராகுதல் அவசியம். ஏனெனில் இது அவர்களின் வங்கித் தேர்வுத் தயாரிப்பில் முதலிடம் பெறுவதற்கான நன்மையை அளிக்கிறது.

12) வேகம் மற்றும் துல்லியத்தை மதிப்பீடு செய்தல்

அனைத்து ஆர்வமுள்ள வங்கித் தேர்வெழுதும் விண்ணப்பதாரர்களும் வங்கித் தேர்வுகள் ஆன்லைனில் மற்றும் நேர அடிப்படையிலானவை என்பதை அறியவேண்டும். வங்கித் தேர்வுக்குத் தயாராகும் போது, ஒவ்வொரு இளைஞரின் கவனமும் வங்கித் தேர்வுத் தாளை விரைவாகவும் துல்லியமாகவும் தீர்ப்பதில் இருக்க வேண்டும். இல்லையெனில், விண்ணப்பதாரர் குறிப்பிட்ட நேரத்துக்குள் முழுமையான தேர்வை முயற்சிக்க முடியாது.

13) ஒட்டுமொத்த நேரத்தை நிர்வகித்தல்

வங்கித் தேர்வுத் தயாரிப்பில் நேர மேலாண்மை மிகவும் முக்கியமான அம்சமாகும். பாடத்திட்டத்தின் ஒவ்வொரு தலைப்புக்கும் போதுமான நேரம் வழங்கப்படும் வகையில் நேரத்தை நிர்வகிக்க வேண்டும். மேலும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முழு வங்கித் தேர்வுத் தாளையும் எழுதி விடவேண்டும்.

14) தேர்வுக்கு முக்கிய உதவியாக இருக்கும் செய்தித்தாள்கள்

செய்தித்தாள்கள் வங்கி ஆர்வலர்களுக்கு பொது அறிவு பெருங்கடல்களாக உள்ளன. தினசரி அடிப்படையில் செய்தித்தாளைப் படிப்பது வங்கித் தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் தங்கள் எழுதப்பட்ட மற்றும் பேசும் ஆங்கில மொழியை மேம்படுத்த உதவுகிறது.

15) நம்பிக்கை மற்றும் நேர்மறையான எண்ணத்துடன் இருத்தல்

வங்கித் தேர்வெழுதும் ஒரு நபரின் தன்னம்பிக்கை மற்றும் நேர்மறையான மனப்பான்மையே போட்டி வங்கித் தேர்வுகளில் அவன்/அவளது வெற்றிக்கு சிறந்த திறவுகோலாகக் கூறப்படுகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் தங்கள் உணர்வுகளைப் பற்றிக் கொண்டு வங்கித் தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

16) அமைதியாகவும் கவனத்துடனும் இருத்தல் அவசியம்

தேர்வின் போது விண்ணப்பதாரர்கள் நிதானமாகவும், அமைதியாகவும் கவனம் செலுத்தவும் வேண்டும், ஏனெனில் இது தேர்வெழுதுபவரின் கவனக்கூர்மை அளவை மேம்படுத்துகிறது.

17) இடைவெளிகளும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

ஆண்டுக்கான வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது, மாணவர்கள் தங்கள் மூளையைப் புத்துணர்ச்சியடையச் செய்வதற்கும், இடையூறு ஏற்படாமல் இருக்கவும், அவ்வப்போது சிறிதளவில் ஓய்வு எடுத்தல் அவசியம். இதன்மூலம் மாணவர்கள் அடுத்தக்கட்ட வினா-விடை தயாரிப்புகளுக்கு ரீசார்ஜ் செய்ய உதவுகிறது.

18) தேர்வின் போது யூகிக்க வேண்டாம் என்பது முக்கியம்

ஒவ்வொரு வங்கித் தேர்விலும் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் எதிர்மறையான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற இருப்பதால், தேர்வெழுதும் இளைஞர்கள் தங்களுக்கு போதுமான நம்பிக்கை இல்லாத விடைகளை எழுதக் கூடாது. எதிர்மறை மதிப்பெண்கள் மதிப்பெண் குறைப்புக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும், அந்தந்த வங்கி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

19) நன்கு அல்லது மிகவும் அறியப்பட்ட பிரிவுகளுடன் தொடங்குதல் அவசியம்

தேர்வெழுதும் விண்ணப்பதாரர்கள் தங்களின் எழுத்துத் தேர்வுகளை மிகவும் பரிச்சயமான பிரிவுகளுடன் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம், விண்ணப்பதாரர்கள் வங்கித் தேர்வுத் தாளின் எளிதான பகுதிகளை விரைவாகத் தீர்க்கமுடியும். மேலும், அளவு திறன் மற்றும் பகுத்தறிவு திறன் கேள்விகள் போன்ற சில கடினமான பிரிவுகளில் சேமிக்கப்பட்ட நேரத்தைப் பயன்படுத்த முடியும்.

20) கூடுதல் நேரத்தை பயன்படுத்த வேண்டாம்

ஒரு குறிப்பிட்ட பிரிவின் கேள்விகள் எதிர்பார்த்ததை விட அதிக நேரத்தைப் பயன்படுத்தினால், அவற்றை விட்டுவிடுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு விடையளிப்பதில் ஒரு தேர்வு எழுதும் இளைஞர் கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தினால், வங்கித் தேர்வு வினாத்தாளின் பிற பிரிவுகளை முயற்சிக்க அவருக்கு/அவளுக்கு குறைவான நேரமே மீதமமாகும் என்பதால் இதை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இவ்வாறு இந்த விதிமுறைகளை தேர்வெழுதும் மாணவ, மாணவிகள் பின்பற்றும்போது அவர்கள் தேர்வில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பைப் பெறுவது உறுதி என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
It is possible for the candidates who are willing to work hard and follow some guidelines that can help them in organizing and preparing themselves for the upcoming bank exams. The guidelines that can be proved beneficial for the candidates if they are willing to clear the bank exams 2023 in the first attempt itself.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+