தொழில்நுட்ப வளர்ச்சியால், படிப்பதற்கும், எழுதுவதற்கும் துணைபுரிய பல நவீன சாதனங்கள் வந்துவிட்டதால், 'ஸ்பெல்லிங்' என்னும் எழுத்துகள் உச்சரிப்பு தொடர்பான பழக்கங்கள் குறைந்துவிட்டன. ஆனால், முயற்சி என்ற ஒன்றை கைவிடாத போது, வானமும் வசப்படும் என்பதை, நாம் அனைவரும் அறிய வேண்டும் பேரன்ட்ஸ்...!
whr r u going 2dy என்ற ஒரு வார்த்தை. இந்த வார்த்தையை, உங்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது? 'Gadgets' ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில், அதிகம் பாதிக்கப்பட்டது 'ஸ்பெல்லிங்'தான்.
எண்ணங்களையும், சிந்தனைகளையும் செம்மையான முறையில் பகிர்ந்து கொள்வதில், எழுதுதலும், 'ஸ்பெல்லிங்'கும் பிரதான பங்கை கொண்டிருக்கின்றன. பல பெரியவர்கள் கூட, எளிமையான வார்த்தைகளுக்கே, 'ஸ்பெல்லிங்' தெரியாமல் திணறுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
'ஸ்பெல்லிங்' தொடர்பாக நாம் கொடுக்கும் குறைந்தளவு முக்கியத்துவம் தான் பிரதான காரணம். மிக இளம் வயதில், இது தொடர்பான பயிற்சியை, வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.
பள்ளிகளில், மாணவர்களின் ஸ்பெல்லிங் திறனை சிறப்பிக்கும் வகையில், சில பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், அந்த திறனை மேலும் சிறப்பாக்க, இந்தக் கட்டுரை சில பயனுள்ள வழிமுறைகளைப் பற்றி ஆய்கிறது.
அந்த வழிமுறைகளை, குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், அவர்களின் ஸ்பெல்லிங் திறன் வளர்ச்சி அடையும்.

SCRABBLE
குடும்ப அளவில், மிகவும் விரும்பப்படும் ஒரு விளையாட்டாக, இந்த விளையாட்டு கருதப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காக, இந்த விளையாட்டு ரசிக்கப்படுகிறது.'டென்ஷன்' நிறைந்த உலகில், பல பழைய போரடிக்கும் விளையாட்டுக்கள், நடைமுறையிலிருந்து மறைந்து வருகின்றன.
இந்த விளையாட்டில், குழந்தைகளை ஈடுபட செய்து, சிறிது காலம் கழித்து, ஸ்பெல்லிங் விஷயத்தில் அவர்களின் செயல்பாட்டை கவனித்தால், முன்னேறி இருப்பதை அறியலாம்.
TRACING WORDS
பொதுவாக, ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும்போது, ஒரே வழி முறையை விட, பல வழிமுறைகள் பின்பற்றப்படும் போது, அதை, குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். இது ஒரு மிக எளிமையான, எப்போதும் விளையாடக்கூடிய விளையாட்டு.
குழந்தைகளுக்கு, உங்கள் முதுகில், அவர்களுக்கு பிடித்த வார்த்தைகளை எழுதச் சொல்லி, அது என்ன என்று நீங்கள் உணர்ந்து சொல்லலாம். இதன்மூலம் அவர்கள் உற்சாகம் பெறுவார்கள். மேலும், அவர்கள் முதுகில், நீங்கள், சில வார்த்தைகளை எழுதி, அதை கண்டுபிடிக்க செய்து, அவர்களின் ஸ்பெல்லிங் திறனை வளர்க்கலாம்.
WORD JEOPARDY
வார்த்தை இணைப்பு மற்றும் ஸ்பெல்லிங் ஆகியவை கலந்தது இந்த விளையாட்டு. இந்த விளையாட்டை குழுவாக விளையாடலாம். இந்த விளையாட்டில், ஒரு நபர், ஒரு வார்த்தையை சொல்ல, அந்த வார்த்தையோடு தொடர்புடைய இன்னொரு வார்த்தையை, எதிர் தரப்பு நபர் சொல்வார்.
உதாரணமாக, Forest என்ற வார்த்தை சொல்லப்பட்டால், அதற்கு தொடர்புடைய ANIMAL என்ற வார்த்தை எதிர்தரப்பால் சொல்லப்படும். அதேசமயம், பயன்படுத்தப்படும் வார்த்தைகள், விளையாட்டில் பங்கேற்கும் குழந்தைகளின் அறிவுக்கும், சிந்தனைக்கும் ஏற்றதாக இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

CROSSWORDS
மேற்குறிப்பிட்ட பயிற்சி, ஒருவரின் ஸ்பெல்லிங் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறப்பான ஒரு உந்துதல். இன்று, அதிகளவில் 'puzzle' புத்தகங்கள் கிடைக்கின்றன. வலைதளத்தில், crossword - creating உபகரணங்கள் கிடைக்கின்றன. இந்த விளையாட்டு விஷயத்தில், இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.
வார்த்தைகள், உங்களது குழந்தையின் அறிவு நிலைக்கேற்ப இருக்க வேண்டும். குழந்தைகளால் புரிந்து கொள்ள இயலாத கடின வார்த்தைகளாக இருப்பின், அவர்கள் அந்த விளையாட்டின் மீது, விரைவில் ஆர்வத்தை இழந்து விடுவர்.
SPELLING CHAIN
ஸ்பெல்லிங் திறன் மேம்பாட்டிற்கான ஒரு சிறந்த அம்சமாகும். வார்த்தைகளிலிருந்து, உங்களின் குழந்தை எளிதில் கண்டுபிடிக்க இயலாத, ஒரு பாடல் மற்றும் நடனத்தை வரிசைக்கிரமமாக உருவாக்கவும்.
உங்களால் முழு பாடலையும் பாட முடியாவிட்டாலும், beat -ஐ சேர்த்து, சிறிது ராகத்தோடு ஸ்பெல்லிங் சொல்லவும்.
FRIDGE MAGNETS
பல வண்ணங்களிலான, எழுத்து உருவங்களைக் கொண்ட காந்தங்களை வாங்கவும். தினமும், ஏதேனும் ஒரு எழுத்தை, பிரிட்ஜில்(Fridge) வைத்துவிட்டு, அதை உங்களிடம் வந்து எடுத்துப் பார்க்க சொல்லுமாறு கூறி விளையாடலாம். இதன்மூலம், ஸ்பெல்லிங் தொடர்பாக குழந்தைகளின் ஆர்வம் அதிகரித்து, அது, அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.
மேலும், அந்த எழுத்துக்களின் மூலம், ஏதேனும் வார்த்தையை ஒரு இடத்தில் உருவாக்கச் சொல்லிவிட்டு, அதை நீங்கள் சென்று பார்க்கும் விளையாட்டையும் மேற்கொள்ளலாம்.
தொழில்நுட்ப வசதிகள்
குழந்தைகளின் எளிய கற்றலுக்கு உதவும் வகையில், பலவிதமான எளிய உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் (apps) இன்று கிடைக்கின்றன. அதை, உங்களது குழந்தையின் ஆர்வத்திற்கேற்ப வாங்கிப் பயன்படுத்தவும்.
கதை எழுதுதல்
குழந்தைகள், அபார கற்பனைத்திறன் மிக்கவர்கள். எனவே, அவர்களிடம் ஒரு சிறிய கதையை எழுதிக் காட்டுமாறு கூறலாம். உங்கள் குழந்தை எழுதும் கதை, பெரும்பாலும் அது எங்கேனும் கேட்டதாகவோ அல்லது படித்ததாகவோ இருக்கலாம்.
வேண்டுமானால், ஒரு சில குழந்தைகள், தங்களின் சொந்தக் கற்பனையில் கதை எழுதிக் காட்டலாம். இப்படியாக, தொடர்ந்த பயிற்சியின் மூலமாக, குழந்தையின் ஸ்பெல்லிங் ஆற்றல் வளர்ச்சியடையும்.
இந்த முறைகள் மட்டுமே குழந்தைகளின் ஸ்பெல்லிங் பயிற்சிக்கு சிறந்தவை என்றில்லை. மேற்குறிப்பிட்டவை ஒரு வழிமுறை தான். மற்றபடி, பெற்றோர்கள், தங்களின் சூழலுக்கு ஏற்ப, பெரிய வசதிகள் ஏதுமின்றியே, தங்களின் குழந்தைகளுக்கு நாள்தோறும் சிறப்பான பயிற்சி கொடுக்கலாம்.
உலகின் மிகச்சிறந்த இலக்கியவாதிகள் மற்றும் மொழி வல்லுநர்களில் பலர், மிகச் சாதாரண பின்னணிகளிலிருந்து, மிகக் குறைந்த வசதிகளைப் பயன்படுத்தி பயிற்சி பெற்றவர்களே. சிலர், பள்ளிக்குக்கூட முறையாக செல்லாதவர்கள் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே, பெற்றோர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பு, பயிற்சி வழங்கல் முறை, ஒரு குழந்தையின் 'ஸ்பெல்லிங் திறன்' மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பேரண்டஸ் நீங்க கவனத்தில் கொள்ள வேண்டும்.
நம் முன்னோர்கள் அறிவு திறன் குறைந்தவர்கள் அல்ல. ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்பதை, நாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருசிலவற்றை அசை போட வேண்டும்.
முன்னோர்கள் உருவாக்கிய பொருட்கள், அதை கையாண்ட விதம், இன்றைய நவீன யுகத்தில் அது குறித்த புலப்படல் குறைவு. ஆனால்,ஆழ்ந்து அவற்றை அறிய முற்பட்டால், நமக்கு தினந்தோறும் புதிய, புதிய அனுபவமும், ஆச்சரியமும் கிடைக்கப்பெறும் என்பதில் ஐயமில்லை. இதை ஏன் சொல்லுகிறீர்கள் என்று தானே நினைக்கிறீர்கள்... பழமையை ஒதுக்கித்தள்ளும் இன்றைய தலைமுறை, நவீனத்தை மட்டுமே முன்னிறுத்தி செல்கிறது. ஆனால், பழமையில் பல அனுபவங்களை நம் முன்னோர்கள் புதைத்துவிட்டு சென்றுள்ளனர் என்பதை, அவற்றை அகழ்ந்தெடுத்தால் மட்டுமே நம்மால் காண முடியும். அவர்கள் விட்டுச் சென்றதை நாமும் படித்தறிவதோடு, நம் சந்ததியினருக்கும் கடத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பயிற்சிக்கு, ஒரு சில இணையதளங்கள் இலவசமாக கிடைக்கப்பெறுகிறது... அவை உங்கள் பார்வைக்கு...
Scrabble Online - Play Scrabble Against Computer (wordscramble.eu)
Create Your Own Story Online: Free Story Creator ✏️ | Imagine Forest
Chain Spelling Activity for English Learners - ESL Speaking
Crossword Puzzles Online - Play for Free at Arkadium


Click it and Unblock the Notifications












