ரெஸ்யூமில் மறந்துகூட இதெல்லாம் பண்ணாதீங்க!

சில தேவையில்லாத விஷயங்கள் நம் ரெஸ்யூமில் நம்மை அறியாமல் குறிப்பிட்டுவிடுவது வழக்கம். அந்த விஷயங்கள் என்னென்ன அதை எப்படி தடுப்பது என்பதை பார்ப்போம்.

By Kani

இன்டெர்வியூக்கு போகும் முன் ரெஸ்யூமில் தேவையில்லாத இடைவெளிகள், எழுத்துப்பிழை, போன்ற சிறு, சிறு விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.

பார்த்தஉடன் கண்ணில் படும் படியாக தெளிவாக விவரங்களை குறிப்பிடுவது வேலை எளிதாக பெற்றுத்தர வழிவகை செய்யும்.

ரெஸ்யூமில் மறந்துகூட இதெல்லாம் பண்ணாதீங்க!

சில தேவையில்லாத விஷயங்கள் நம் ரெஸ்யூமில் நம்மை அறியாமல் குறிப்பிட்டுவிடுவது வழக்கம். அந்த விஷயங்கள் என்னென்ன அதை எப்படி தடுப்பது என்பதை பார்ப்போம்.

1. இமெயில் முகவரி:

மிக மிக முக்கியமான விஷயம் நீங்கள் உங்கள் பகுதியில் ரசிகர் மன்றத் தலைவராகவே, அரசியல்வாதியாகவே இருக்கலாம் இதற்காக தனிப்பட்ட முறையில் தயார் செய்த இமெயில் முகவரிகளை ரெஸ்யூமில் குறிப்பிடுவதை தவிர்ப்பது நலம்.

உங்களிடம் ஒரு நேர்த்தியான இமெயில் முகவரி இல்லை எனும்பட்சத்தில் அதை உடனே தயார் செய்து விண்ணப்பிப்பது வேலையை உறுதி செய்யும் ஒரு காரணி என்பதை மறக்க வேண்டாம்.

2. ஷார்ட் நோட்:

ஏற்கனவே நீங்கள் என்ன வேலைக்காக விண்ணப்பித்துள்ளீர்கள் என்பது உங்களை தேர்வு செய்பவருக்கு தெரியும். எனவே உங்களை எப்படி விற்பனை செய்வது என்பதை ரத்தினசுருக்கமாக இப்பகுதியில் இரண்டே வரியில் குறிப்பிடுங்கள்.

3. பட்டம் பெற்ற தேதி:

பொதுவாக நீங்கள் முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து எப்போது விலகி உள்ளீர்கள் என்பதை மட்டும்தான் தேதியை கொண்டு பார்ப்பார்கள். மாறாக நீங்கள் எந்த ஆண்டு எந்த தேதியில் படிப்பை முடித்துள்ளீர்கள் என்றெல்லாம் பெரும்பாலும் யாரும் பார்ப்பதில்லை.

எனவே இந்த வகையான தேதி வகையாரக்களை வரிசையாக கொடுத்து ரெஸ்யூமை கணக்கு பரீட்சை பேப்பர் போல் நிரப்பி வைக்காதீர்கள்.

4. புகைப்படம்:

இளையதலைமுறையினர் போட்டோவை பார்த்தே உடனே வேலை கொடுத்துவிடுவார்கள் என நம்புகின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று.

போட்டோ மட்டுமே ஒருவரை தீர்மானித்து விடாது, அதையும் தாண்டி திறமைகள், பண்புகள், ஒழுக்கம் போன்ற பல்வேறு காரணிகள்தான் தீர்மானிக்கின்றன. நீங்கள் ஒரு மாடலிங் துறைக்கோ, நடிப்பு துறைக்கோ விண்ணப்பிக்கும் போது மட்டும் புகைப்படத்தோடு விண்ணப்பிக்கலாம்.

5. சுய விவரம்:

இதுவரையிலும் பலர் தங்களது சுய விவரக் குறிப்பில் பொழுதுபோக்கு, எத்தனை குழந்தைகள், திருமண விபரம் போன்றவைகளை குறிப்பிட்டு வருகின்றனர். இது உங்களது திறமையை பற்றியும், அனுபவத்தை பற்றியும் குறிப்பிட ஏதும் இல்லாத பட்சத்தில் உதரணமாக முதல் முறை வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் குறிப்பிடலாம்.

அனுபவம் உள்ளவர்கள் தங்களது தனித்திறமைகளையும், அனுபவத்தையும் குறிப்பிடுவதில் கவனம் செலுத்துவது நல்லது. சுய விபரத்தில் உங்கள் முகவரி போதுமானது.

6. பணி அனுபவம்:

நீங்கள் கல்லூரிப்படிப்பை முடித்துவுடன் மாதம் ஒரு நிறுவனத்தில் கூட வேலை பார்த்திருக்கலாம். இது உங்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனத்திற்கு தேவையில்லாத விஷயம். எனவே கடைசி 10 ஆண்டுகள் திறமையாக வேலை பார்த்த அனுபத்தை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

10 ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தால், இறுதியாக பணிபுரிந்த 2 அல்லது மூன்று நிறுவனங்களை குறிப்பிட்டால் போதுமானது.

7. சம்பளம்:

உங்களது பணிசார்ந்த துறைகளில் ஊதிய நிலவரங்கள் என்ன என்பதை முன்பாக அலசி ஆராய்ந்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பணிபுரியும் இடம், போக்குவரத்து வசதிகள் போன்றவைகளை திட்டமிட்டு உங்களது சம்பள கோரிக்கையை முன் வைக்கலாம்.

குத்து மதிப்பாக கேட்கும் பட்சத்தில் அதுவுவே உங்கள் வேலைக்கான இடைஞ்சலாக மாறாமல் பார்த்துகொள்ளுங்கள்.

8. ரெபரென்ஸ்:

தேவையில்லாமல் இடத்தை அடைக்கும் காரணிகளில் இதுவும் ஒன்று. எனென்றால் முன்னதாகவே உங்களுக்கான காலியிடம் உறுதி செய்யப்பட்ட பின்புதான் உங்களுக்கு தகவலே தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே இது போன்ற சமாச்சாரங்களை தவிர்ப்பது பல நல்ல விஷயங்களை ரெஸ்யூமில் புகுத்த வாய்ப்பாக அமையும்.

9. பிழைகள்:

ஒரு முறைக்கு இருமுறை முழு ரெஸியூமையும் சரி பார்ப்பது அவசியம். முக்கியமாக இடைவெளிகள், ஸ்பெல்லிங் மிஸ்டேக் மற்றும் முகவரி. வழக்கமாக கொடுப்பதுதானே என்று ஏதே ஒரு எண்ணத்தில் பழைய வீட்டு முகவரியை கொடுத்துவிடாதீர்கள்.

10. வார்த்தைகள்:

ரெஸ்யூமில் உங்களைப்பற்றியோ, திறமைகளைப்பற்றியோ முழுமையாக விவரிக்க இடமிருக்காது எனவே, ரசிக்கும் படியான, எளிதில் புரிந்துகொள்ளும் விதமான வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லது.

11. முகவரி:

ஒன்றுக்கும் மேற்பட்ட மெபைல் எண், இமெயில், முகவரி போன்றவைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது உங்களுக்கும், பணி வழங்கும் நிறவனத்திற்குமான குழப்பம் மற்றும் காலதாமத்தை குறைக்க உதவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
11 Things You Should Never Put On A Resume
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+