சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை தேதியினை வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகச் சென்னைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தொலைநிலை கல்வி நிறுவன இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் 2019-ஆம் ஆண்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் தொலைநிலைக் கல்வி நிறுவன ஒற்றைச் சாளர மையம் மூலமாக சேர்க்கையினைப் பெறலாம். அல்லது http://online.ideunom.ac.in என்னும் இணையதளம் மூலமாகவும் ஆன்லைன் வழியில் சேர்க்கை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamilnadu school exam news government engineering education arts madras university தமிழ்நாடு பள்ளி தேர்வு கல்வி சென்னை பல்கலைக் கழகம்
English summary
University of Madras Institute of Distance Education extends till August 19
Story first published: Thursday, August 1, 2019, 11:51 [IST]


Click it and Unblock the Notifications












