சென்னை: யூகோ வங்கியில் சட்ட அதிகாரிகள், என்ஜினீயர்களுக்கு பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மொத்தம் 25 பணியிடங்கள் காலியாகவுள்ளன. சட்ட அதிகாரிகள் பணியிடம் 21-ம், என்ஜினீயர் பணியிடங்கள் 4-ம் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் தேர்வு செய்யப்படும். அதன் பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து வங்கிகள் சார்பில் நேர்முகத் தேர்வும் இருக்கும்.
பொது மற்றும் இதரப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்கள் யூகோ வங்கியின் இணையதளமான https://www.ucobank.com/-ல் காணலாம்.
விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.


Click it and Unblock the Notifications

