பெங்களூரு: கடந்த 2 ஆண்டுகளில் 7 ஐஐஎம் உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்சிக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்,
இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்று அவர் அளித்த பதில்:

ஆமதாபாத், ஷில்லாங் நகரங்களில் அமைந்துள்ள ஐஐஎம்-களில் கடந்த 2 ஆண்டுகளில் 5 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல லக்னோ ஐஐஎம்-மில் 29.6 சதவீத கட்டணம் உயர்தத்ப்பட்டது. கொல்கத்தா ஐஐஎம்-மில் 16 சதவீத கட்டண் உயர்த்தப்பட்டது.
அதைப் போலவே கோழிக்கோடு, ராஞ்சி, திருச்சி நகரங்களில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனங்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது.
ஐஐஎம்-களில் பயிற்றுக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும், மற்ற கல்வி நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் சுயாட்சி பெற்றவை. தங்களது வசதி, பிரச்னைகளுக்கேற்ப கட்டணங்களை அவை உயர்த்திக் கொள்ளலாம் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications

