சென்னை ஐஐடி-யில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

Posted By:


சென்னை: சென்னையில் உள்ள பெருமைமிகு உயர்கல்வி நிறுவனமான ஐஐடி-யில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

சென்னையில் உள்ள ஐஐடி-யில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சென்னை ஐஐடி-யில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் தொடர்பான பணி காலியாகவுள்ளது. இந்தப் பணியிடத்துக்கு ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

இதைப் போலவே காலியாகவுள்ள புராஜக்ட் டெக்னீஷியன் பணியிடத்துக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.இ முடித்தவர்கள் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதைப் போலவே

புராஜக்ட் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 70 சதவிகித மதிப்பெண்களுடன் இசிஇ, இஇஇ பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு 35க்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை DR. BALAJI SRINIVASAN, PROJECT CO-ORDINATOR,

DEPT OF ELECTRICAL ENGG, INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS, CHENNAI - 600 036 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 30-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

English summary
Madras IIT has invited applications from the engineers. Aspirants can send the applications before october 30.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia