நம்பாதீங்க போலி அறிவிப்பு...!

பள்ளி, கல்லூரி நிறைவு செய்துவிட்டு, வேலை தேடும் நம்மில் பலர் கிடைக்கும் வேலை சரியானது தானா? வேலை வழங்கும் நிறுவனம் நம்பகத்தன்மைக்கு உட்பட்டதா என்பன போன்ற விவரங்களை சரி பார்ப்பது கிடையாது.

அதேபோல், சமூக வலைதளங்களில் வரும் அத்தனை வேலைவாய்ப்பு அறிவிப்பை உறுதிப்படுத்தாமல், அப்படியே பார்வேர்டு பண்ணுவதை, இப்பவே இருந்து முதலில் நிறுத்துங்க யூத்ஸ்... அப்படி பார்வேர்டு பண்ணும் உங்களுக்கு தான் இந்த முக்கிய அறிவிப்பு.

உஷார் போலி அறிவிப்பு...!

என்னனு கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என, போலி அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு போலியானது என்றும், அதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தரப்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி, 21.08.2022 தேதியில், தினசரி நாளிதழில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கீழ்க்காணும் மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறது.

மாநில ஆள்சேர்ப்பு மைய விளம்பர எண் 1/2022 நாள் 18.08.2022 தேதி அறிவிப்பு போலியாக வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விளம்பரத்தில் தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் வாயிலாக நிரப்பப்படும்; இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக அனுப்பலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விளம்பரம் ஏதும், மாநில ஆள்சேர்ப்பு மையத்தின் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
எனவே, மேற்கண்ட போலி விளம்பரத்தை பார்த்து பொது மக்கள் ஏமாற வேண்டாம்; மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உஷார் போலி அறிவிப்பு...!

பாஸ்வேர்டுகளை நம்பாதீங்க..!

இது தொடர்பான செய்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் வேகமாக பரவி வருகிறது.

எனவே வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களை நம்பி, பொது மக்கள் ஏமாற வேண்டாம் எனவும், இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பில் வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார் போலி அறிவிப்பு...!

போலி, மோசடி விளம்பரங்கள், வேலைவாய்ப்பு தகவல்களை தயவு செய்து, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உறுதி செய்யாமல் பார்வேர்டு, ஷேர் செய்யாதீங்க யூத்ஸ்... உங்க அறிவிப்பை நம்பி, பணத்தை யாரும் இழந்திட நீங்களே வழி ஏற்படுத்தாதீர்...!

எச்சரிக்கை அறிவிப்பை ஒரு முறை கிளிக் பண்ணி படித்து பாருங்க ப்ளீஸ்...!

https://www.tncoopsrb.in/index.php

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
An announcement has been made in the Co-operative Bank that no one should be fooled by the false information being spread through social media such as WhatsApp as direct appointment.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+