மத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள்..!

மத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்வேயில் கூடுதலாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள

By Saba

மத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்வேயில் கூடுதலாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்த 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் ஆவணங்களில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய அரசு துறைகளில் புதிதாக 3.81 லட்சம் வேலைவாய்ப்புகள்..!

மத்திய அரசு துறைகளில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதியின் நிலவரப்படி, 32.38 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. இந்த வேலைவாய்ப்புகள் , 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி, 36.19 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் 3.81 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு துறைகளில் அதிகபட்சமாக ரயில்வே துறையில் 98,999 வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டிருந்தன. இதன்படி 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12.7 லட்சமாக இருந்த ரயில்வே வேலைவாய்ப்புகள், 2019ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி 13.69 லட்சமாக அதிகரித்திருந்தது.

இதற்கு அடுத்ததாக, காவல்துறையில் புதிதாக 80 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. மறைமுக வரிகள் தொடர்பான துறைகளில் 53,000, நேரடி வரிகள் துறைகளில் 29,935 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு அமைச்சகத்தில் 46,347 வேலைவாய்ப்புகளும், அணுசக்தித் துறையில் 46,347 வேலைவாய்ப்புகளும், மத்தியத் தொலைத் தொடர்பு துறையில் 2,250 வேலை வாய்ப்புகளும், நீர் வளம் மற்றும் நீர் மேலாண்மைத் துறையில் 3,981 வேலைவாய்ப்புகளும் என கடந்த இரு ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்தன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 7,743, சுரங்க அமைச்சகத்தில் 6,338, விண்வெளித் துறையில் 2,920, மத்திய பணியாளர் நலன் குறைகள் தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறையில் 2,056, வெளியுறவுத் துறையில் 1,833 வேலைவாய்ப்புகளும் புதிதாக உருவாக்கப்பட்டிருந்தன.

மத்திய கலாச்சார அமைச்சகத்தில் 3,647, வேளாண் துறையில் 1,835, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் 1,189 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Over 3.81 lakh new jobs created in central govt departments in last two fiscals
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+