பெங்களூரு என்ஐவி-யில் டெக்னீஷியன் வேலை!!

Posted By:

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியில்(என்ஐவி) டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பெங்களூரு என்ஐவி-யில் டெக்னீஷியன் வேலை!!

மொத்தம் 6 பணியிடங்கள் மட்டுமே காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய 12-ம் வகுப்பு மற்றும் மெடிக்கல் லெபாரட்டரி டெக்னாலஜி டிப்ளமோ படித்திருக்கவேண்டும்.

வயது 30-க்கு மிகாமல் இருக்கவேண்டும். சம்பளம் ரூ.24,500 என்ற அடிப்படையில் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் NIV Bangalore Unit, Rajiv Gandhi Institute of Chest Disease Premises, Near NIMHANS, Someshwarnagara 1st Main, Dharma Ram College Post, Bangalore - 560 029, Karnataka. என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://www.icmr.nic.in/pinstitute/niv.htm என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம். இந்த படிப்பு தொடர்பான விளம்பரங்கள் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் மார்ச் 28 ஆகும்.

English summary
NIV, Bangalore Recruitment: Vacancy for 6 Technician C (Lab) Post 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia