டெல்லி: ரூர்கேலா நகரிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்ஐடி) எம்.ஏ. படிப்பு படிக்க விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வரவேற்கப்பட்டுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் படிப்பு படிக்க விண்ணப்பங்களை அனுப்பலாம்.

2016-17-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கையாகும் இது. டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் பிரிவில் எம்.ஏ. படிப்பாகும் இது. இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் பி.டெக், பி.ஏ., பி.எஸ்சி, பி.காம் உள்ளிட்ட படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
பி.ஏ. ஹானர்ஸ் படித்தவர்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் படிப்பில் சேர விரும்புபவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை மே 23-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும். விண்ணப்பங்களைப் பெற http://eapplication.nitrkl.ac.in/ என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவேண்டும்.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள் விவரம் மே 27-ம் தேதி அறிவிக்கப்படும். ஜூன் 9-ம் தேதி எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வு நடைபெறும்.


Click it and Unblock the Notifications

