சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை ஐஐடி! டாப் 10 பட்டியலும் வெளியீடு!

மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை தேசிய தொழில்நுட்பக் கழகம் (Madras IIT) இரண்டாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை தேசிய தொழில்நுட்பக் கழகம் (Madras IIT) இரண்டாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சிறந்த கல்வி நிறுவன பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை ஐஐடி! டாப் 10 பட்டியலும் வெளியீடு!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். 2016-ஆம் ஆண்டு முதல் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இதனை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2020ம் ஆண்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்படும்.

அதன்படி, இந்தியாவின் டாப் 10 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவற்றில், சென்னை ஐஐடிக்கு முதலிடம் பிடித்துள்ளது.

தேசிய தரவரிசை பட்டியல் நிறுவனமான NIRF பொறியியல் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அதனை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது, இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் மற்றும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு தனது பாராட்டைத் தெரிவித்தார்.

NIRF தர வரிசை பட்டியலானது, கல்வி நிறுவனத்தின் தரம், கற்றல் வளம், மாணவர்களின் திறன், ஆராய்ச்சி, கல்வி முடித்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை என சுமார் 9 பிரிவுகளின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தரவரிசை பட்டியலிடப்படுகிறது. அதில், இந்தாண்டு 9 ஐஐடி கல்வி நிறுவனங்களும், ஒரேயொரு ஐஐடி சாராத கல்வி நிறுவனமும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் டாப் 10 பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியல்

  1. ஐஐடி மெட்ராஸ்
  2. ஐஐடி டெல்லி
  3. ஐஐடி மும்பை
  4. ஐஐடி கான்பூர்
  5. ஐஐடி காரக்பூர்
  6. ஐஐடி ரூர்கீ
  7. ஐஐடி கவுகாத்தி
  8. ஐஐடி ஐதராபாத்
  9. தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் திருச்சி.
  10. ஐஐடி இந்தூர்
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIRF Rankings 2020: IIT Madras retains top slot in NIRF ranking for second year
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+