இந்தியாவில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் தலைசிறந்த கல்லூரிகள் எவை எவை என்னும் தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட உள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளிடப்படுவது வழக்கம். அந்த வகையில், 2019ம் ஆண்டின் தலைச்சிறந்த பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவிக்கிறார்.
மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இப்பட்டியலில், தலைச்சிறந்த பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், மேலாண்மை, பார்மஸி, மருத்துவம், கட்டிடக்கலை, சட்டக்கல்லூரி, அனைத்தும் என மொத்தம் 9 தரவரிசைப்பட்டியல் இருக்கும்.
கடந்த 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட 100 கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில், முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றிருந்தது. சிறந்த பல்கலைக் கழகங்களுக்கான பட்டியலில் 4 வது இடத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், 13 வது இடத்தில் கோவை பாரதியார் பல்கலைக் கழகமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
2019-ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த கல்விச் சாலைகளின் தரவரிசைப் பட்டியலை www.nirfindia.org என்ற மனிதவள மேம்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications












