நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.......

Posted By:

சென்னை : மே 7ம் தேதி நடக்கும் நீட் தேர்விற்கு ஹால்டிக்கெட் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.cbseneet.nic.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு மே 7ம் தேதி நடக்க உள்ளது.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதற்கான முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.......

இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச் சீட்டு) www.cbseneet.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வில்லை. எனவே தமிழகத்தில் உள்ள மாணவ மாணவியர்களும் நீட் தேர்வு எழுத வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர். நீட் நுழைவுத் தேர்வு மூலம் அரசு கல்லூரிகளிலுள்ள தேசிய இடஒதுக்கீட்டிற்கான 15% இடம் நிரப்பப்படுகிறது. மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கான இட ஒதுக்கீடுத் தவிர மற்ற காலி இடங்கள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

English summary
Central Board of Secondary Education conducts as National Eligibility and Entrance Test - 2017 Neet Exam Hall Ticket Download at www.cbseneet.nic.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia