மாணவர்களே...நீட் தேர்வு மையங்கள் எங்கெங்கு உள்ளது என அறிய வேண்டுமா..!!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறவுள்ள மையங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன என்பது தொடர்பாக மாணவர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் நகரங்களின் விவரங்களை தேசிய தேர்வு முகமையான என்டிஏ (NTA) வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதள முகவரியில் சென்று அறியலாம்.

நீட் தேர்வு (National Eligibility cum Entrance Test) என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும்.

இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

மாணவர்களே...நீட் தேர்வு மையங்கள் எங்கெங்கு உள்ளது என அறிய வேண்டுமா..!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர உதவுவதற்காக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானது, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 9-ம் தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் வெளியாகியுள்ளது. அவற்றை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் அறியலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எந்தெந்த நகரங்களில் இந்தத் தேர்வு மையங்கள் அமைந்துள்ளன என்பதை இணையதளம் மூலமாக மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளலாம்.

இதில், ஏதாவது சந்தேகம் இருந்தால், 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The NEET (National Eligibility cum Entrance Test) for the year 2024 will be conducted across 499 test cities, both within India and abroad. These exam centres have been strategically chosen to accommodate a large number of candidates from various regions. When filling out the NEET 2024 application form, candidates are allowed to select up to four exam cities. It is important to note that these choices must be based on their State of Permanent Address or State of Present Address. To maintain a conducive environment for the examination, the National Testing Agency (NTA) has established a dress code that candidates must adhere to. Candidates should familiarize themselves with the NEET 2024 Dress Code laid down by NTA to ensure they meet the exam’s requirements.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+